Thursday, June 14, 2018

பாபாவிடம் பரிபூரணமாக சரணடைவோமாக

No automatic alt text available.


பாபாவுக்கு பக்தியுடன்  சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று
கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள். அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், பாபாவின் மீது உறுதியான விசுவாசமே.
மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்! சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. பாபா அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை!
மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக. - ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 13, 2018

ஜோதிடத்தை நம்பாதே, என்னை நம்பு

Image may contain: 1 person, closeup


ஹர்தாவைச்  சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள், ஒரு புத்திரன் கூட இல்லை.1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச்  சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். 12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால், குழந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்; ஆனால்  அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்கு  செல்லவில்லை. 1911-ம்  ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஷிர்டிக்கு  பாபாவிடம் வந்தார்.
பாபா : என்ன! திமிறு  ஏறி விட்டதா உனக்கு? உன் பிராரப்தத்தின்  படி (விதிப்படி)உனக்கு ஏது ஆண் குழந்தை? நான் இந்த உடலை (தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு ஒரு ஆண் மகவு அளித்தேன்.

பாபாவின் மற்றொரு அடியவரான தாமோதர ராசனே சம்பந்தப்பட்டவரை கூட, பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரப்பேறு அருளினார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 11, 2018

அனைத்துப் பிரச்சினைகளும் விலகும்

Image may contain: one or more people and closeup

தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸத்குரு

Image may contain: 1 person, closeup

"ஸத்குரு என்பவர் கனவிலும்கூடத் தமது அடியவர்களிடம் இருந்து எவ்விதச் சேவையையோ, லாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை.  மாறாக அவர்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறார்.  தாம் உயர்ந்தவர், தமதடியவர் தாழ்ந்தவர் என்றும் அவர் எண்ணுவதில்லை.  தனது அடியவரை(பக்தனை) தமது புதல்வன் என்று கருதுவதோடு மட்டுமல்லாது தமக்குச் சமமானவன் என்று கருதுகிறார்."

-ஸ்ரீஸாயிஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 9, 2018

ஸாயீயின் கதை

Image may contain: one or more people

ஸாயீயின் கதைகளைக் கேட்க உடம்பெல்லாம் காதுகளாக்குங்கள்.  அவருடைய அருளால்தான் கலியுகத்தின் மலங்களனைத்தும் நாசமாகி,  இவ்வுலக வாழ்வின் பயங்களை வெல்லமுடியும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 8, 2018

பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலன்

No automatic alt text available.

பாபாவின் பாதகமலங்களைத் தொட்ட மாத்திரத்தில் என் வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயம் தொடங்கிவிட்டது.
என்னை பாபாவிடம் அழைத்து வந்தவர்களுக்கு நான் மிக்க கடமைப் பட்டவனாகிறேன். அவர்களுக்கு எப்படிக் கைமாறு செய்யப் போகிறேன். 
அவர்களுக்கு மானசீகமாக நமஸ்காரம் செய்கிறேன். 
பாபாவின் தரிசனத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால்,
தரிசனம் செய்த மாத்திரத்தில் நம் எண்ணங்கள் மாறிவிடுகின்றன.
 உலகப் பொருள்கள் மீது பற்றற்ற தன்மை வளர்கிறது. 
பூர்வ ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பலனாகவே இத்தகைய தரிசனம் கிட்டுகிறது.
பாபாவை தரிசித்தவுடன்,
உலகம் முழுவதும் பாபாவாக மாறிவிடுகிறது

- அன்னாஸாகேப் தபோல்கர் (ஹேமாட்பந்த்)
ஸ்ரீ ஸாயி ஸத்தசரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 7, 2018

எது நேர்கிறதோ, அது தைப் பொறுத்துக்கொள்ளவும்.

Image may contain: 1 person

ஊழ்வினையை அனுபவித்துத்தான் தீரவேண்டும். அதுவே வினையைத் தீர்க்கும் வழி. வேறு வழி ஏதும் இல்லை.

''வேண்டுவதோ வேண்டாததோ, சுகமோ துக்கமோ, அமிருதமோ விஷமோ -இந்த இரட்டைச் சுழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன. ஆகவே அவற்றைக் கண்டு சிரிக்கவும் வேண்டா, அழவும் வேண்டா.

''எது எது நேர்கிறதோ, அது அதைப் பொறுத்துக்கொள்ளவும். அல்லாமாலிக் நம் ரட்சகர்; எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக. பாரம் சுமப்பவர் அவரே!

மனம், செல்வம், உடல், பேச்சு ஆகியவற்றால் அவருடைய பாதங்களில் சரணடையுங்கள். நிரந்தரமாக அவருடைய நாமத்தை ஸ்மரணம் செய்தால் லீலைகள் அனுபவமாகும்.

- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவிடம் பரிபூரணமாக சரணடைவோமாக

பாபாவுக்கு பக்தியுடன்  சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் ...