Friday, September 30, 2011

பத்து மடங்கு அதிகாரம்





பாபா-வுக்கு ஒன்று கொடுத்தால் பத்தாகத் திருப்பிக் கொடுக்கிறார். பத்து மடங்கு அதிகாரம், பத்து மடங்கு சக்தி. பெரும்பாலான பக்தர்கள் இந்த அனுபவத்தை அவ்வப்போது அடைந்தார்கள். அதுமட்டுமல்லாமல், அதுமாதிரியான செயல்களிலிருந்து ஆன்மிக நாட்டம் வளர ஆரம்பிக்கிறது. இது என்ன சாமானியமான லாபமா? பாபா-வின் அளிக்கும் திறன் விசித்திரமானது அன்றோ!
- அப்பாஸாஹெப்-  ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா. 

Thursday, September 29, 2011

வெற்றி


நீ எந்த காரியத்தை செய்து கொண்டிருந்தாலும், எங்கிருந்தாலும், எதைச் செய்தாலும் என்னையே நினைவில் நிறுத்தி உன் வேலையைச் செய். அதை நான் வெற்றியடையும் படி செய்வேன். ஷிர்டி சாய்பாபா     

Wednesday, September 28, 2011

சாந்தி கிடைக்கும்


சுகத்திற்கும், துக்கத்திற்கும் நானே காரணம் என்று நீ என் மேல் நம்பிக்கை வைத்தால், அன்று இருந்ததும் இல்லை, இப்போது போக்கடித்துக் கொண்டதும் இல்லை. நான் அப்போதும் இருந்தேன், இப்போதும் இருக்கிறேன், நாளையும் இருப்பேன். இருப்பது "நானே" என்று நீ பாவித்தால் சாந்தி கிடைக்கும். ஷிர்டி சாய்பாபா         

Tuesday, September 27, 2011

பலவீனர்கள்



என்னை எப்போதும் தங்கள் இதயத்தில் நிலை நிறுத்திக்கொள்வோர் பலவீனர்கள் ஆகமாட்டார்கள்- ஷிர்டி சாய்பாபா

Monday, September 26, 2011

அற்புதங்களை பெறும் வழி


சாயி பாபாவின் லீலைகளை அனுபவித்தவர்கள் மட்டுமே அவரது பக்தர்களாக நீடிக்கிறார்கள். மாறாத நம்பிக்கை, நீடித்த பொறுமை, உண்மையான அன்பு, பணிவான வேண்டுதல் இவையே பாபாவிடமிருந்து அற்புதங்களை பெறும் வழியாகும். ஸ்ரீ சாயி தரிசனம்     

Sunday, September 25, 2011

எல்லா வேலைகளிலும் உதவி செய்கிறேன்



உனக்கு ஒவ்வொரு வினாடியும் என்மேல்  நம்பிக்கையுண்டாவதற்கு, நான் நீங்கள் செய்யும் எல்லா வேலைகளிலும் உதவி செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா 

Saturday, September 24, 2011

விசுவாசம்


"நான் உங்களுடைய அடிமைக்கு அடிமை, உங்களிடம், உங்களிடம் மாத்திரமே விசுவாசம் வைப்பதில் நான் நிறைவு பெறுகிறேன்". பிறகு அவர் செய்யும் அற்புதங்களை பாருங்கள், உம்மீது கருணைகூர்ந்து உம்மை அலைகளுக்கு மேலே தூக்கிப் பிடித்துக்கொள்வார்.  ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

Friday, September 23, 2011

உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்


நான் ஸ்தூல உடலுடன் ஷீரடியில் இல்லையென்று கருத வேண்டாம். என் மேல் நம்பிக்கை கொண்டு என்னை இதயபூர்வமாக நினைத்த  மறு நிமிடமே உன் முன்னால் இருப்பேன். எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். உங்களுக்கு தாசனாய் இருப்பேன். உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்.உங்கள் காரியங்களில் என் உதவியை கோரினால் உடனே நிறைவேற்றுகிறேன். என்னை எப்போதும் நினைப்பவர்களின் கடனை அவ்விதமாகத் தீர்த்துக்கொள்வேன். சத்குரு ஷிர்டி சாய்பாபா          

Thursday, September 22, 2011

மனத்தை மட்டும் என்னிடம் லயமாக்கு


உன் தேக சம்மந்தமான வேலைகளை பெளதீக உலகிலிருந்து ஒதுக்கி விடும்படி நான் கூறவில்லை. உன் கடமைகளான தர்மத்தை நீ செய். உன் கரங்களால் வேலை செய், வாயினால் பேசு, கண்களால் பார், அவ்விதமாக உன் தேவைகளை பூர்த்தி செய்துகொள். மனத்தை மட்டும் என்னிடம் லயமாக்கு. ஷிர்டி சாய்பாபா        

Wednesday, September 21, 2011

என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன்


நான் இந்த பெளதீக உடலுடன் ஷீரடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன். என் வருகைக்கு எல்லைகள் இருக்க முடியாது. நீங்கள் என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன். ஷிர்டி சாய்பாபா    

Tuesday, September 20, 2011

நான் எப்போதும் உயிருடன் இருக்கிறேன்


என்னிடம் வருபவர்களுக்கும், என்னையே தஞ்சமாக சரணடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக, என்னிடம் தீவர நம்பிக்கை உடையவர்களுக்கும் நான் எப்போதும் உயிருடன் இருக்கிறேன். ஷிர்டி சாய்பாபா   

Monday, September 19, 2011

சிறு மணல் துகள் அளவு அவநம்பிக்கை


இதயத்தில் எந்த மூலையிலாவது ஒரு சிறு மணல் துகள் அளவு அவநம்பிக்கை இருந்தாலும் என்னைப் பின்பற்றி பயன் இல்லை. ஷிர்டி சாய்பாபா 

Sunday, September 18, 2011

என்மேல் நம்பிக்கை இருந்தால்


என்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு செய்ய முடியாத காரியம் என்று ஏதும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா.    

Saturday, September 17, 2011

லோபம், டாம்பீகம், மன அழுக்கு


லோபம், டாம்பீகம், மன அழுக்கு, கபடம், அசத்தியம் (பொய்)  முதலியன யாரிடம் இருக்கிறதோ அப்படிப்பட்டவர்கள் என் தரிசனம் பெற்றாலும், அவர்களுக்கு கிடைக்கும் பலன் தாமரை இலையின் மீது தண்ணீர் போன்றதே. அவைகளை வெளியேற்றிய மறு நிமிடமே அவர்கள் என் அனுகிரகத்தை  பெறுவார்கள். ஷிர்டி சாய்பாபா       

Friday, September 16, 2011

சமமாகப் பார்க்கும் நிலை


நான் எல்லோரையும் சமமாகப் பார்க்கும் நிலையை வாழ்வின் துவக்கம் முதல் கடைப்பிடித்து வருகிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. யாரையும் புண்படுத்துவதும் கிடையாது. ஷிர்டி சாய்பாபா   

Thursday, September 15, 2011

சந்தேகமும் இல்லை



நான் இருப்பது நீ விரும்பிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கே, அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. - ஷிரிடி சாய்பாபா

Wednesday, September 14, 2011

நம்முடைய நிலைமை


நம்முடைய நிலைமை, உலகெனும் நாடகமேடையில் நாம் நடிக்கவேண்டிய வேஷம், மச்சாயல்கள், எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை நகத்திலிருந்து சிகைவரை முழுமையாக பாபாவே அறிவார். நம்மை கைதூக்கி உயர்த்திவிடும் வழிமுறையையும் அவரே அறிவார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா    

Tuesday, September 13, 2011

நூலை இழுக்கிறார்


பாபா எங்கிருக்கிறார்  என்று எவருக்கும் தெரியாத வகையில் நூலை இழுக்கிறார்; ஆனாலும், விளைவுகள் என்னவோ, பக்தர்களுக்குப் பின்னால் எந்நேரமும் அரணாக நிற்கிறார் என்பதை பக்தர்கள் உணரவேண்டும். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.    

Monday, September 12, 2011

பாபாவின் விரதம்


பூரண சரணாகதியடைந்த பக்தனை எந்தவிதமான ஆபத்தும் வராமல் காப்பாற்றுவது பாபாவின்  விரதம். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா 

Sunday, September 11, 2011

கர்மங்களை குறைத்துக்கொள்ள


கர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே, நீங்கள் எப்போதும் என்னை நினைதுக் கொண்டிருந்தால் என்மேல் நம்பிக்கை கொண்டிருந்தால், அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். - ஷிர்டி சாய்பாபா

Saturday, September 10, 2011

பக்கீர் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ


நான் எல்லோரிடமும் தட்சிணை வாங்கிக்கொள்வதில்லை. பக்கீர் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ, அவரிடம்தான் தட்சிணை என்ற பேச்சே எழுகிறது. ஷிர்டி சாய்பாபா 

Friday, September 9, 2011

பௌதீக தேவைகளை



உங்களில்  நான் இருக்கிறேன். என்னில் நீங்கள் இருகிறீர்கள்.உங்கள் வேலைகளை பௌதீக தேவைகளைத் தெரிந்துகொண்டு நானே நிறைவேற்றி வைக்கிறேன்.- ஷிர்டி சாய்பாபா

Thursday, September 8, 2011

வேண்டுதல் நிறைவேறும்


நம்பிக்கை, யதார்த்தம், ஆத்ம சுத்தத்துடன் உள்ளார்ந்த பக்தியோடும், அன்புடனும் எப்போதும் மறவாமல் பாபாவை நினைத்து வணங்க, என் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் தகுதியாக்கு என பிரார்த்திக்கும் பக்குவம் உள்ளோருக்கு பாபா உயர்ந்த மனம் தந்து, அழுகையை துடைத்து, வேண்டுதல் நிறைவேறும் வகையில் அவர்களை மாற்றுகிறார். ஸ்ரீ சாயி தரிசனம்     

Tuesday, September 6, 2011

யாராவது பண உதவி கேட்டோ


யாராவது பண உதவி கேட்டோ, பசியின் காரணமாக உணவு கேட்டோ, அல்லது உடைக்காகவோ,அல்லது இருக்க இடம் கேட்டோ உன்னிடம் வரலாம்.ருணானுபந்தம் இருந்தாலொழிய ஒருவரிடம் மற்றவர் வரமாட்டார். அப்படி யாராகிலும் வந்தால், உன்னால் முடிந்தால் உதவு, இல்லையேல் மிருதுவான மொழியில் பேசி அனுப்பிவிடு, கண்டிப்புடன் பேசி அவர்கள் இதயத்தில் காயம் உண்டாகாதே. ஷிர்டி சாய்பாபா

Monday, September 5, 2011

என் கடன்


என் கடன் அவனை நினைத்துத் தொழுது அழுவது என்று மட்டும் இருக்கவேண்டும். அதற்குப் பெயர்தான் சரணாகதி. அந்த நிலை வந்தால்தான் வேண்டியதை எல்லாம் பாபா விரைவில் கொடுப்பார். ஸ்ரீ சாயி தரிசனம்   

Sunday, September 4, 2011

அந்தரங்கம் சுத்தம் ஆகும்


பொழிப்பாகச் சொன்னால், பாபாவினுடைய சரித்திரம் புனிதமானது. இதைப் படிப்பவரும், கேட்பவரும் புண்ணியசாலிகள். அவர்களுடைய அந்தரங்கம் சுத்தம் ஆகும். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.   

Friday, September 2, 2011

ஈயாயினும் எறும்பாயினும்


ஈயாயினும் எறும்பாயினும் சரி, ஆண்டியாயினும் அரசனாயினும் சரி, கண்ணுக்கு தெரியும் இவ்வுலகம் அனைத்தும் என்னுடைய வெளிப்பாடே. நகரும் நகராப் பொருட்கள் நிறைந்த இந்த அளவிட முடியாத சிருஷ்டி என்னுடைய நிஜ ரூபமே. ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா        

Thursday, September 1, 2011

நெஜ்சுரம்


பக்தன் எவ்வளவு தூரம் நெஜ்சுரமும், தீர்மானம் உள்ளவனாகவும் இருக்கிறானோ, அந்தளவுக்கு பாபாவின் உடனடிப் பிரதிச் செயலும் இருக்கிறது. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா     

பாபா உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள்

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடம...