Friday, March 9, 2012

பொய்மை பாபாவிடத்தில் செல்லாது



பாபாவின் பக்தரான நானா சாகேப் சந்தோர்க்கர் ஒருமுறை தொழுகைக்குரிய தேவரான தத்தாத்ரேயரின் தரிசனத்தை புறக்கணித்துவிட்டு  நேரடியாக ஷிர்டி சென்று பாபாவின் தரிசனத்தை பெற பாபாவிடம் சென்ற போது;

பாபா "நானா, இதை எப்படி நீர் மறந்து போகலாம்? என்னுடன் இவ்வளவு நாட்கள் பழகி இதைத்தான் கற்றுக்கொண்டீரா? என்னுடைய கூட்டுறவில் இவ்வளவு காலம் கழித்தபிறகு இதைத்தான் கற்றுக்கொண்டீரா? என்னுடைய சங்கத்தில் வருடக்கணக்காகக் கழித்த பிறகும் உம்முடைய நடத்தை ஏன் இப்படி இருக்கிறது? உம்முடைய மூளைக்கு என்ன ஆயிற்று?"

இதைக் கேட்டவுடன் நானாவுக்கு விஷயமென்ன என்பது புரிந்துவிட்டது. இங்கே கண்ணாம்பூச்சி ஆட்டம் செல்லாது என்பதை அறிந்துகொண்டு நடந்ததை அனைத்தையும் விவரமாகச் சொன்னார்.

பாபா " உமக்கு இந்த அவசரம் உதவாது, தொழுகைக்குரிய தேவரான தத்தர், நீங்கள் எவ்வித முயற்சியும் செய்யாமல் தரிசனம் தரக் காத்துக்கொண்டிருக்கும்போது அவரைப் புறக்கணித்துவிட்டு இங்கு வந்தால் நான் மகிழ்ச்சியடைவேனா!

அஸத்தியம் (பொய்மை) பாபாவிடத்தில் செல்லாது. பொய்யைச் சொல்லி பாபாவின் அருளை என்றுமே சம்பாதிக்கமுடியாது.
     

ஸத்குருவின் உதவி

               சாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு,  ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...