Sunday, April 22, 2012

பக்தர்களின் உணர்வுகளை அறிந்திருப்பார்



பாபா எப்பொழுதும் தன்னுடைய பக்தர்களின் உணர்வுகளை அறிந்திருப்பார். ஒரு முறை ஸ்ரீ ராம நவமியன்று பாபாவை தரிசனம் செய்வதற்கு பெரிய அளவில் மக்கள் துவாரகா மாயியில் கூடி இருந்தார்கள். அங்கு வயதான ஒரு பெண்மணியும் பாபாவின் தரிசனத்திற்கு வந்திருந்தாள். அந்தக் கூட்டத்தில் பாபாவை பார்க்க முடியாததால் ஏங்கினாள்.

அதை அறிந்த பாபா, ஷாமாவை அழைத்து, அந்த பெண்மணியை அழைத்து வருமாறு அனுப்பினார். அவள் வந்ததும், அவளிடம், "தாயே, நான் காலையிலிருந்து பட்டினியோடு உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன். நீ எனக்காக கொண்டு வந்ததை உடனே கொடு" என்றார்.

அந்தப் பெண்மணி தன் பையிலிருந்து ஒரு ரொட்டியையும், பாதி வெங்காயத்தையும் பாபாவின் கையில் வைத்தாள். பாபா அதை மிகவும் ஆவலுடன் ருசித்து சாப்பிட்டுக் கொண்டே, "தாயே, நான் சாப்பிடுவதற்காக எவ்வளவு ருசியான உணவை கொண்டுவந்திருக்கிறாய். தொண்டைக்குழி வரை உணவு நிறைந்துவிட்டது.. ஆஹா!" என்றார்.                    

தியானம் செய்யவேண்டும்

இரவுபகலாக ஸாயீயை தியானம் செய்யவேண்டும்.  ஸாயீயைத் தவிர வேறெந்த எண்ணமும் மனத்தில் நுழைந்துவிடாதவாறு விழிப்புடன் இருக்கவேண்டும்.  இறந்...