சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Wednesday, May 2, 2012

அகக்கண்ணிற்கு தெரிவதில்லை


வேதம் படித்தாலும் பேதம் காணும் உலகில் நீ கீதம் பாடி, சாதம்போட்டு, பாதமிரண்டை பற்றும் படி செய்கிறாய். அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள். உண்மைதான் பாபா, உன் அடி (திருவடி) பற்றியவர்களை ஒருபோதும் மறக்கமாட்டாய். வாழ்வில் இன்னல் பல வந்தாலும் பக்தனின் குரல் கேட்டு மின்னல் நேரத்தில் களைந்திடுவாய். கூவி அழைத்தால் ஆட்களை ஏவி அழைத்து குறைதனைத்  தீர்ப்பாய். கண்கள் அருகே இமையிருந்தாலும் கணங்கள் இமையைப் பார்ப்பதில்லை. சாயி  நம் அருகே இருந்தாலும் நம் அகக்கண்ணிற்கு தெரிவதில்லை.
http://www.shirdisaibabasayings.com/