சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Saturday, May 5, 2012

அஹங்காரம்


மானிடர்கள் தூய்மையுடனும், நிர்மலமாகவும் பிறக்கின்றனர். தீயவர்களின் நட்பினாலோ, சுபாவ சித்தத்தின் பாவனையாலோ, வாழ்க்கை முறையின் காரணமாகவோ, அல்லது மற்ற கேடு விளைவிக்கும் காரணத்தினாலோ அஹம் (அஹங்காரம்) என்ற கிரகணத்தால் பீடிக்கப்படுகின்றனர்.அஹம் மனதில் தோன்றிய மறு நிமிடமே நாசமடைதல் ஆரம்பமாகிறது.

"நான் மற்ற எல்லோரையும் விட கீழ்மையானவன். என் சக்தி கட்டுக்குள் அடங்கியதாகும், நான் தெரிந்து கொள்ளவேண்டியது அளவற்றதாகவுள்ளது" என்று யார் எண்ணுகிறார்களோ அவர்களுக்கு அஹம் (அஹங்காரம்) மிகுந்த தொலைவிலேயே இருக்கும்." ஸ்ரீ சத்குரு வாணி.