Sunday, May 6, 2012

ஸ்ரீ சத்வன மஞ்சரி




எந்த ப்ரம்மத்தைப் பற்றி வேதங்களில் கூட வர்ணிக்கப்படவில்லையோ அத்தகைய பிரம்மத்தை உலகத்தில் ஸகுணமாகச் (எளிய முறையில்) செய்து வெட்கப்படவைத்தார்கள் மகான்கள் (பாபா).

ஏழு சாண் நீளமுள்ள குறுகிய மரப்பலகையை நீங்கள் படுத்துக்கொள்ளும் கட்டிலாக்கி, உங்கள் யோக சாமர்த்தியத்தின் சக்தியை பக்தர்களுக்கு காட்டினீர்கள். 

அனேக பெண்மணிகளின் மலட்டுத்தன்மையை நீக்கியருளினீர்கள், எத்தனையோ வியாதிகளை உதியின் மூலம் குணப்படுத்தினீர்கள்.

இவ்வுலக சம்பந்தமான துன்பங்களை நீக்குவது உமக்கு ஒரு பொருட்டே அன்று. யானை ஒன்று எறும்பை ஒரு சுமையாக எவ்வாறு கருதும்? இப்போது, குருநாதா இந்த எளியவர்களின் பால் கருணை காட்டுவீராக. நாங்கள் உமது பாதங்களை அண்டியுள்ளோம். எங்களை திருப்பி அனுப்பி விடாதீர்கள். - தாஸ்கணு மகாராஜ், 1918, செப்டம்பர் 9 ஸ்ரீ சாயி நாத சத்வன மஞ்சரி.                             

ஸத்குருவின் உதவி

               சாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு,  ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...