Sunday, May 13, 2012

பரீசையிலும் வெற்றி


ஸபட்ணேகர் என்ற பெயர் கொண்ட வக்கீலுக்கும், சேவடே என்ற சட்டப்பயிற்சி (படிப்பில் சற்று மந்தமான) மாணவருக்கும் பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் நடந்தது, ஆண்டு 1903;    

சேவடே, "பிரசித்தி பெற்ற அகமத்நகர் ஜில்லாவில் ஷிர்டி என்னும் கிராமத்தில் மசூதியில் ஒரு பக்கிர் வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு புகழ் பெற்ற சத்புருஷர். அவரிடம் எனக்குப் பூரணமான விசுவாசம் இருக்கிறது. அவர் சொன்னபடிதான் எல்லாம் நடக்கும். அவர் சொல்லும் வார்த்தைகள்தாம் நடந்தேறும். நடக்காமல் தடுக்க எந்த சக்தியாலும் யுகமுடிவுவரை முயன்றாலும் இயலாது.

இது அவர் எனக்களித்த வாக்குறுதி, எனக்கு அவரிடம் முழு நம்பிக்கை உண்டு. அவருடைய வார்த்தைகள் என்றும் பொய்யாக. இதை நான் உறுதியாக முடிவுகட்டிவிட்டேன். நான் அதிசயம் ஏதுமின்றி இந்தப் பரீட்சை மட்டுமின்றி,  இதற்கடுத்த பரீசையிலும் வெற்றி பெறப்போகிறேன்."

சிலகாலம் கடந்த பிறகு, சேவடே கூறியது அனுபவபூர்வமாக உண்மையாகியது.சேவடே இரண்டு பரீசைகளிலும் வெற்றி பெற்றார்.ஸபட்ணேகர் ஆச்சர்யத்தில் மூழ்கினார். ஸ்ரீ சத்ச்சரித்ரா அத்தியாயம் 48.         

ஸத்குருவின் உதவி

               சாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு,  ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...