Monday, May 14, 2012

குழந்தையின் தெளிவான பதில்



தாதாகேல்கரின் சகோதரி மகன் பாபு என்பவர். சாயி மகாராஜ் அவனிடம் மிகவும் அன்புடன் இருந்தார். அவன் இறந்த பின்பும் பாபா இன்றளவும் அவனை நினைவில் கொள்கிறார்.

பம்பாயில் வழக்கறிஞர் தொழில் செய்யும் திரு.மோரேஷ்வர் விஸ்வநாத் பிரதான் என்பவர் சாயி மஹராஜைத் தரிசிக்க வந்தார். அவள் மனைவியை கண்டவுடன் பாபா அவள்தான் பாபுவின் தாயார் என்று கூறினார். பின்னால் அவள் கருவுற்றாள். பம்பாயில் அவள் பிரசவித்த அதே நாளில் பாபா தமக்கு வலி ஏற்ப்பட்டுள்ளதாகவும் இரட்டையர்கள் பிறப்பார்கள் என்றும் அவர்களுள் ஒருவர் இறந்துவிடுவார் என்றும் கூறினார். இம்மாதிரியாகவே நடைபெற்றது.

திருமதி பிரதான் தமது இளம் புதல்வனுடன் ஷிர்டி வந்தபோது பாபா அவனைத் தமது மடியின் மீது எடுத்து வைத்துக்கொண்டு "நீ இங்கு வந்துவிடுவாயா?" என்று கேட்டார். இரண்டு மாத குழந்தை தெளிவாக "ஆம்" என்று பதில் கூறியது. 07-12-1911, ஷிர்டி டைரி.               

ஸத்குருவின் உதவி

               சாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு,  ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...