Wednesday, May 16, 2012

கைது வாரண்ட்



திரு. ஸ்ரீ கணேஷ் கபர்தே (ஜி.எஸ்.கபர்ததே) இவர் சுதந்திர போராட்ட வீரர் திரு.பாலகங்காதர திலகரின் புகழ்பெற்ற உதவியாளராக இருந்தவர். 

இவரின் ஷிர்டி விஜயத்தின் போது பாபாவிடம் தாம் திரும்ப செல்ல அனுமதி கேட்டபோது, 

பாபா கபர்தே விடம் கூறியது , "கவர்னர் ஈட்டியுடன் வந்ததாகவும் தம்மிடம் உள்ள சூலத்தால் சண்டையிட்டு அவரை விரட்டி விட்டதாகவும் முடிவாக கவர்னரை சமாதானப்படுத்தி அவர் அகன்று செல்வதற்கு இணங்க வைத்ததாக கூறினார்"மேலும் 2 மாதங்கள் ஷீரடியில் தங்க வேண்டும் என்று கூறி அனுமதி மறுத்துவிட்டார். 

அதே நாளில் அவர் இல்லத்தில் கபர்தே விடுதலை கிளர்ச்சி நடவடிக்கைக்கு  கவர்னர் கைது வாரண்ட் பிறப்பித்ததாகவும் தெரியவந்தது.          

எங்கும் வியாபித்திருக்கும் பாபாவின் பார்வையில் "கவர்னரின்  ஈட்டி" என்பது "கைது வாரண்ட்" என்றும் "தீரிசூலம்" என்பது பக்தர்களை காக்கும் பாபாவின் எங்கும் நிறைதன்மை என்பதை தெளிவாக உரைக்கிறது. - ஷிர்டி டைரி 29.12.1911    
              

பாபாவின் அவதார நோக்கம்

"பாபாவின் அவதார நோக்கம்தான் என்ன?  அந்த லட்சியம் நிறைவேற்றப்பட்டு விட்டதா?" தமது திட்டங்களையும்,  லட்சியத்தையும் பிர...