சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Sunday, May 20, 2012

குழந்தை வரம்



சோலாபூரிலிருந்து ஸாகாராம் என்பவர் குழந்தை வரம் கேட்டு பாபாவை தரிசிக்க ஷிர்டி வந்தார். திருமணமாகி 27 வருடங்களுக்கு குழந்தை இல்லை. அவரை சுற்றி எப்போதும் பக்தர்கள் சூழ்ந்திருக்கிறார்களே, நான் என்னுடைய இதயத்தில் இருப்பதை எப்படி தெரிவிப்பேன், என்று ஏக்கம் கொண்டு 2 மாதம் ஷீரடியில் தங்கினார்.

இந்த விவரத்தை அவர் மாதவராவ் தேஷ்பாண்டேயிடம் தெரிவித்தார். அதற்கு மாதவராவ், "இதோ பாருங்கள், இந்த மசூதி காலியாக இருப்பதென்பதே கிடையாது. பாபாவை தரிசனம் செய்ய யாராவது ஒருவர் வந்துகொண்டே இருப்பார்." இருப்பினும், பாபா உணவு உண்டபிறகு இளைப்பாறும் தருணம் நான் சைகை செய்கிறேன் நீங்கள் வந்து பாபாவிடம் தேங்காய், ஊதுவத்தி சமர்ப்பித்து உங்கள் மனதில் இருப்பதை தெரிவியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

பாபா வாயைக் கழுவிக்கொண்டபின் மாதவராவ் கைகளை துணியால் துடைத்துக் கொண்டுடிருந்தார். பாபா ஆனந்தமான மனநிலையில் இருந்தார். மாதவராவ் மீது அன்பு பொங்க அவருடைய கன்னத்தை கிள்ளினார் பாபா. 

மாதவராவ் பொய்க்கோபம் கொண்டு, "இது என்ன லட்சணமான செயலா?" என்று கேலியாகக் கேட்டார்.

மாதவராவ்,"எங்களுக்கு கன்னத்தை அழுத்திக் கிள்ளும் குறும்புத்தனமான கடவுள் வேண்டா!, பசிக்கும்போதெல்லாம் புதிது புதிதாக இனிப்புகள் வழங்கும் கடவுளே எங்களுக்கு தேவை. உங்களிடமிருந்து கெளரவமோ, சுவர்க்கலோகத்தில் புஷ்பகவிமானமோ எங்களுக்குத் தேவை இல்லை. உங்களுடைய பாதத்தில் விசுவாசம் என்னும் ஒரே வரத்தை கொடுங்கள், அது போதும்".

பாபா சொன்னார், "இதற்காகவேதான் நான் இங்கு வந்திருக்கிறேன். உங்களிடமுள்ள அளவுகடந்த அன்பிற்காக உங்களனைவருக்கும் உணவூட்டவே வந்திருக்கிறேன். என்று கூறி வெளியிருந்த அந்தப் பெண்மணியை அழைத்து தேங்காய் குடுகுடு வென்று உருளுவதைப் போல் 12 மாதங்களில் உங்களுக்கு பிள்ளை பிறக்கும் என்று கூறி தேங்காய் உடைத்து ஒரு மூடியை அப்பெண்மணிக்கும் மற்றொன்றை கணவருக்கும் அளித்து ஆசிவழங்கினார். "

 பன்னிரண்டு மாதங்களில் பாபா தம்முடைய வாக்கை நிறைவேற்றினார். பாபா ஆசிர்வதித்த 3 மாதத்தில் அப்பெண்மணி கருத்தரித்து, ஒரு மகன் பிறந்தான்.