Monday, May 21, 2012

மாயையிடம் சவுக்கடி


"நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, இதை நன்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நிரந்தரமாக, விவரமாகத் தெரியும்.

நீங்கள் இவ்வாறென நிதர்சனமாக உணரும் நான், எல்லோருக்கும் மிக அருகில் இருப்பவன்; ஒவ்வொருவருடைய இதயத்திலும் உறைபவன்;எங்கும் செல்பவன்; எல்லோருக்கும் கடவுள்.

நான் இவ்வுலகத்திற்கும் அதனுள் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தாய்; முக்குணங்கள் சந்திக்கும் இடமும் நானே; இந்திரியங்களைத் தூண்டிவிடுபவனும் நானே; நானே இப் பிரபஞ்சத்தைப் (உலகத்தை) படைப்பவனும், காப்பவனும், அழிப்பவனுமாம்.

எவன் தன் கவனத்தை என்மீது திருப்புகிறானோ, அவன் எந்த  சங்கடமும் படமாட்டான். ஆனால், என்னை மறந்துவிடுபவன் மாயையிடம் இரக்கமின்றி சவுக்கடிபடுவான்".- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா, ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா அத்தியாயம் - 3            

உங்களுக்கு நலம் உண்டாகட்டும்

நானா (பாபாவின் பக்தர்) ; பாபா, தாங்கள் எல்லாவற்றையும் அறிவீர்கள். தங்களுடைய பாதுகாப்பிலிருந்தும் கூடவா எங்களுக்கு இந்த துக்கங்கள் நேரவ...