சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Friday, June 8, 2012

பிரச்சினை


நாம் அடையவேண்டிய இலக்கை, நமது பிரச்சினையை கைக்கு எட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, அதை முடிக்கிறேன் என தள்ளிப் போட்டுக்கொண்டே செல்வார் பாபா. அதன் தன்மையை அறிந்து உணர்ந்து, அதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற பிரச்சினையை குரு அளிப்பதால்.

மனம் பக்குவப்பட, பக்குவப்பட, தலை கீழாக இருப்பது கடினமாக இல்லாமல் அதுவே இன்பமாக மாறிவிடும், அதன் பிறகு நமது தேவைகள் அனைத்தும் பாபா ஏற்றுக்கொண்டு விடுவார். அப்போது பாபா நமக்கு எப்படி இருப்பார் தெரியுமா?

தாய்ப்பறவை தனது  குஞ்சைப் பேணுதல் போன்று நம்மை அன்புடன் கவனிப்பார். அங்கே நாம் பெற்றோரை மறப்போம். பாசத்தை துறப்போம். எளிதாக உலக பந்தத்திலிருந்து விடுவிக்கப்படுவோம். குருவையே நினைத்து, அவரையே உற்றுநோக்கிக்கொண்டிருக்க வேண்டும் என நினைப்போம். அவரது ரூபம் நமது கண்மணியில் பதிக்கப்படாவிட்டால், அதைவிட குருடாயிருப்பதே நலம் என நினைக்க ஆரம்பிப்போம். தாய், தந்தை, குரு, வீடு, சுகம், சொத்து என அனைத்துமாக அவரே இருப்பார். நமது ஒரே லட்சியமாக அவர் இருக்கும் போது அங்கே பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.- ஸ்ரீ சாயி-யின் குரல்.             
http://www.shirdisaibabasayings.com