Tuesday, June 19, 2012

அவசரக்குடுக்கை



சில சமயங்களில் புரிந்துகொள்ளவே முடியாதவாறு  இருந்தார் சாயி பாபா, கப்னிகள் (உடைகள்) தைப்பதற்காக ஒரு வியாபாரி துணி கொண்டு வருவார். கடைவீதியில் சாமான்களை வாங்குவதில் அனுபவம் மிக்க ஒருவரைப்போல் பேரம் பேசி துணி விலையை கஜம் எட்டணா அல்லது ஐந்து அணாவாகக் குறைத்து 40 கஜம் துணியை வாங்குவார். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு அசட்டு மனிதர் பாபா கஞ்சன், பேராசை பிடித்தவர் அல்லது செல்வத்தின் மீது பற்று கொண்டவர் என்ற முடிவுக்கு வரக்கூடும். சிறிது நேரம் பொறுத்து அந்த வியாபாரிக்கு பணம் கொடுப்பார் சில சமயங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையைப் போல் நான்கு மடங்கு பணமும் கொடுத்து விடுவார்.

இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவசரக்குடுக்கை ஒரு தீர்மானத்துக்கு வரக்கூடும். அதாவது பாபா பித்து பிடித்தவர் அல்லது மூளைக் கோளாறு உள்ளவர் அல்லது அவசியமில்லாமல் தகுதியற்ற இடத்தில் தாராளத்தை காண்பிக்கும் அளவுக்கு பகட்டானவர் என்று. இந்த இரண்டு அவசர முடிவுகளுமே உண்மைக்கு மிகவும் அப்பாற்பட்டவை. தம்முடைய நடத்தையின் உள்நோக்கம் யாருக்கு புரியவேண்டும் என பாபாவின் சங்கல்பமோ, அவரைத் தவிர மற்ற எல்லோருக்கும் பாபா நடந்து கொள்வதின் பின்னணி வியப்பளிப்பதாகவே இருக்கும். - சாயி பாபாவின் பக்தர் அனுபவங்கள், பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.       
http://www.shirdisaibabasayings.com

பாபாவின் அவதார நோக்கம்

"பாபாவின் அவதார நோக்கம்தான் என்ன?  அந்த லட்சியம் நிறைவேற்றப்பட்டு விட்டதா?" தமது திட்டங்களையும்,  லட்சியத்தையும் பிர...