Friday, November 30, 2012

ஆசை

பாபா தனது பக்தர்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி கடைசியில்
ஆசையேயில்லாத நிலையை அடையச் செய்வார்.-ஷீரடி சாய்பாபா. 

Thursday, November 29, 2012

எனக்கு உகந்தவன்

பசியாய்  இருப்போர்க்கு உணவு கொடுத்துப் பின் நீ உண்ணுவாயாக.பசியாய் இருப்போர்க்கு உணவு அளிப்பது எனக்கு உணவு அளித்ததற்கு சமம்.என்னை எல்லா படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன்.-ஷீரடி சாய்பாபா.

Wednesday, November 28, 2012

மாறாத நம்பிக்கை

எந்த வித சம்பிரதாயமான பூஜை முறைகளையோ,விரதங்களையோ எனது பக்தனிடமிருந்து நான் எதிர்பார்ப்பது இல்லை.எந்த சூழ்நிலையிலும் என்மீது மாறாத நம்பிக்கை வைத்திருப்பவனையே மிகவும் நேசிக்கிறேன்.-ஷீரடி சாய்பாபா 

Tuesday, November 27, 2012

திடமாக நம்புவான்

எனது உண்மையான பக்தன் எனது அன்பை தவிர வேறெதையும் என்னிடம் எதிர்ப்பார்ப்பது இல்லை.எனது விருப்பமே அவனது விருப்பமாக இருக்கும்.அவனது வாழ்க்கையில் நடக்கின்ற எல்லா நிகழ்வுகளும் எனது விருப்பபடியே நடக்கிறது என திடமாக நம்புவான்.அப்படிப்பட்ட என் பக்தனை காக்க ஏழு கடல்களையும் தாண்டி செல்வேன்.-ஷீரடி சாய்பாபா.

Monday, November 26, 2012

உண்மையான பக்தன்

இங்கு நீங்கள் பார்க்கும்  மூன்று முழ சரீரம் தான் சாயி  என்று நினைத்துவிடாதீர்கள்.எனது உண்மையான பக்தன் எல்லா இடங்களிலும் எனது இருப்பை உணர்வான்.எல்லா உயிர்களிலும் என்னை காண்பான்.-ஷீரடி சாய்பாபா




Sunday, November 25, 2012

கர்மவினைகள்

உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும்.ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால்,எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதை போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாயி சத் சரித்திரம்]

Saturday, November 24, 2012

ஓடி வருகிறேன்

நான் என் பக்தர்களின் பிடியில் தான் இருக்கிறேன்.அவர்கள் பக்கத்திலேயே நிற்கிறேன்.எப்போதும் அவர்களுடைய அன்பை தாகத்துடன் நாடுகிறேன். துன்பத்தில் அவர்கள் கூப்பிடும்போது நான் ஓடி வருகிறேன்.-ஷிரிடி சாய்பாபா.


Friday, November 23, 2012

வித்தியாசப்படுகிறாய்

பிறரைவிட எனது குழந்தையாகிய நீ மிகவும் வித்தியாசப்படுகிறாய் என்று பிறர் உன்னைப் பாராட்டும் வகையில் இருக்கும் உனது நடவடிக்கைகளால் நான் மகிழ்ச்சியும்,பூரிப்பும் அடைகிறேன்.-ஸ்ரீ சாய் தரிசனம்.

Thursday, November 22, 2012

ஆழமான இதயத்தோடு

என்னை தங்களுடைய வாழ்வின் ஒரே புகலிடமாக நினைத்துக் கொள்ளுங்கள்.உங்களுடைய எண்ணம்,செய்கை,பேச்சு அனைத்திலும் என்னை நினைத்துக் கொள்ளுங்கள்.ஆழமான இதயத்தோடு என்னைக் காணுங்கள்.நானும் அதேபோல் உங்களைப் பார்க்கிறேன்.-ஷீரடி சாய்பாபா.[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Wednesday, November 21, 2012

பக்தர்களின் நலனுக்காக

பாபா தனது பக்தர்களின் தேவைகளை கணக்கிடுவார்.எப்படி ஒரு அன்பான தாய் தன் குழந்தையின் நலனுக்காக கசப்பான மருந்தைக் குழந்தைக்குப் புகட்டுகிறாளோ அதே போல் பாபாவும் தன் பக்தர்களின் நலனுக்காக சில சட்டங்களை வலுக்கட்டாயமாக அவர்கள் மீது திணிப்பார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திர சாராம்சம்.

Tuesday, November 20, 2012

அதிர்ஷ்டசாலிகள்

யாருடைய பாவங்களெல்லாம்  மறக்கப்படுகிறதோ அந்த அதிர்ஷ்டசாலிகளே என்னை வணங்கும் பாக்கியத்தை பெறுவார்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Monday, November 19, 2012

சீரடி

பாபாவே ஒரு மனிதரை அழைத்தாலன்றி அவரருகில் யாருமே செல்ல முடியாது.சீரடிக்கு வருவது,அங்கு தங்குவது,கிளம்புவது அனைத்துமே பாபாவின் விருப்பப்படிதான் நடக்கும்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Sunday, November 18, 2012

பாக்கியம்

என்னுடைய கதைகளை கவனமாக கேளுங்கள்.அவைகளைப் பற்றி நினையுங்கள்.எனது  ஆசி இல்லாமல் என்னுடைய  கதைகளை கேட்கும் பாக்கியம் யாருக்கும் கிடைக்காது.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்] 

Saturday, November 17, 2012

சாயி சாயி

உங்களுடைய புத்திசாலித்தனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு எப்போதும் "சாயி சாயி" என்று நினைவு வைத்துக் கொள்வீர்கள் என்றால் இந்த உலகின் பிடிகளிலிருந்து நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Friday, November 16, 2012

கைவிடமாட்டேன்

"யார் கைவிட்ட போதிலும்,என் பக்தனை நான் என்றும் கைவிடமாட்டேன்"-ஷீரடி சாய்பாபா.

Thursday, November 15, 2012

நூறு மடங்கு

என்னை தம்முடைய ஜீவப் பிராணனை விட எவர் அதிகமாக நேசிக்கிறாரோ அவரே எனக்கு வேண்டும்.அப்பேர்ப்பட்டவருக்கு அவர் ஒரு மடங்கு கொடுத்தால் நான் நூறு மடங்கு திருப்பி அளிப்பேன்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாயி தரிசனம்]

Wednesday, November 14, 2012

பொறுமையும் நம்பிக்கையும்

யார் யாருக்கு என்ன தேவை என்பது பாபாவுக்குத் தெரியும் .அதை அவர்களுக்குக் கொடுப்பார்.இங்கே தேவையானது பொறுமையும் நம்பிக்கையும் தான்.பொறுமையோடு காத்திருந்தால் அவர் அருள் மழை  நிச்சயம் பொழியும்.அது நாம் எதிர்பார்த்ததற்கு மேலாகவே இருக்கும்.-ஸ்ரீ சாய் தரிசனம்.

Tuesday, November 13, 2012

விரும்பியதை அடைவான்

                     சாயி பக்தர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதை உடனே உங்களுக்கு காட்டிக்கொடுக்கிறேன். ஆனால் என்னுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டவனே தான் விரும்பியதை அடைவான். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா 

Monday, November 12, 2012

ஒவ்வொரு வினாடியும்

சாய் பாபாவை எப்போதும் நினைவில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.ஒரு மனிதனின் உடல் மனம் இரண்டும் சிறப்பாக இருக்கும் போது ஒவ்வொரு வினாடியும் பாபாவை நினைத்துக் கொள்ள வேண்டும்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Sunday, November 11, 2012

தாயன்பு

ஒரு தாய், முகவாய்க்கட்டையை மென்மையாகத் தூக்கிக் குழந்தையை மருந்து குடிக்க வைக்கிறார். அனைத்தும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காகவும், நன்மைக்காகவும். இது போன்றதே பாபா உபதேசம் செய்யும் திறமையும் முறையும்.- ஸ்ரீ சாய் சத்சரித்ரா      

Saturday, November 10, 2012

சரணாகதி

சரணாகதி என்றால் என்ன என்பது நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் தம்மிடம் வரும் பக்தரை பாபா ஒருநாளும் கைவிடமாட்டார்.யார் சாய்பாபாவிடம் சரணடைகிறார்களோ அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.பாபாவின் ஒரு பார்வை பிச்சைக்காரனையும் ராஜாவாக்கிவிடும்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

Friday, November 9, 2012

கஷ்டப்படுகிறேன்

என்னுடைய பக்தர்களுக்காக நான் கஷ்டப்படுகிறேன்.அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் என்னுடைய கஷ்டங்களே.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

Thursday, November 8, 2012

பயப்படாதே

பயப்படாதே,நடப்பவை எல்லாம் என்னுடைய விருப்பபடியே நடக்கிறது.எந்த நன்மைக்கும்,தீமைக்கும் நீ தான் காரணகர்த்தா என்று ஒருபோதும் நினைக்காதே.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திர சாராம்சம்]

Wednesday, November 7, 2012

கடவுள்

கடவுள் அனைவரிடத்திலும் இருக்கிறார்.அவர் நமக்கு கொடுப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கடவுள் கொடுப்பதை பக்தி சிரத்தையோடும் அடக்கத்தோடும் வாங்கிக் கொள்ளவேண்டும்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திர சாராம்சம்]

Tuesday, November 6, 2012

நிலையாக இருங்கள்

கடவுள் ஒருவர்தான் நம்மை காப்பவர்.வேறு யாரும் இல்லை.அவருடைய எண்ணம் மட்டுமே ஈடேறும்.இந்த உலகமே தலைகீழாக மாறினாலும் நீங்கள் உங்கள் கொள்கையில் நிலையாக இருங்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திர சாராம்சம்]

Monday, November 5, 2012

சோகம் தொடக்கூட செய்யாது

என் திசைக்கு திரும்பும் யாரையும் சோகம் தொடக்கூட செய்யாது.உனக்கு என்ன தேவையோ அதை என்னிடம் தெளிவாகவும்,தீர்க்கமாகவும் கேள்.என்னைப் பற்றிய எண்ணங்களில் உன் மனம் நிலையாக இருக்கட்டும்.-ஷீரடி சாய்பாபா.

Sunday, November 4, 2012

அனுபவங்களை அளிக்கிறார்

எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் அதன்வழி நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு பாபாவை பற்றிய சிந்தனையில்தான் இருக்கவேண்டும். அப்படியிருக்க, விதியால் நிர்ணயிக்கப்பட்ட விபத்துக்களும் இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்.! இளகிய மனம் படைத்த சாயி பக்தர்களின் எண்ணங்களைக் கண்டு அவர்களுடைய நம்பிக்கை (பக்தியை) பாராட்டும் வண்ணம் ஒன்றன்பின் ஒன்றாகச் சீரிய அனுபவங்களை அளிக்கிறார்.

Saturday, November 3, 2012

நீங்கள் கவலைப்படுகிற எல்லா விஷயங்களும்

ஜீவனத்திற்காக (வாழ்கையை சார்ந்து) நீங்கள் கவலைப்படுகிற எல்லா விஷயங்களும் அழிந்துவிடும்.என்னையே எப்போதும் பற்றிக் கொண்டிருப்பவருடைய குறிக்கோளை நான் அழிப்பதே இல்லை. அவனுக்கும், எனக்கும் அவநம்பிக்கை என்ற தடையில்லாமல் இருப்பதால் நான் வேகமாக நுழைந்து அவனைக் காத்துக்கொள்ள என்னால் முடிகிறது.- ஸ்ரீ சாயி தரிசனம்.  

Friday, November 2, 2012

பொறுமையோடு காத்திருங்கள்

வாழ்க்கையில் வரும் சோதனைகளையும், கஷ்டம், துன்பம், போன்றவற்றையும் நிரந்திரம் என நம்பி விடாதீர்கள். அவை உங்களை சுத்தப்படுத்துவதற்க்காக பாபா எடுத்திருக்கும் நடவடிக்கை என்பதை உணர்ந்து அவரை சரணடைந்து பொறுமையோடு காத்திருங்கள்.- ஸ்ரீ சாயி தரிசனம்.        

Thursday, November 1, 2012

உள்ளத்தாலும் உயிராலும்

உங்களது உணவு எப்போதும் நிறைந்திருக்கும்.ஒரு போதும் காலியாய் இராது.எல்லோரிடமும் பணிவாகவும் அடக்கமாகவும் இருந்து உள்ளத்தாலும் உயிராலும் என்னை வணங்க வேண்டும்.இதை நீங்கள் செய்வீர்களேயானால் நீங்கள் எல்லையற்ற பேரின்பத்தை அடைவீர்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]

பாபா உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள்

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடம...