Monday, February 23, 2015

விவேகமாக செயல்படுங்கள்



ஒவ்வொரு சாயி பக்தரும் தனது எண்ணம், செயல் மீது பாபாவைச் சார்ந்தே நம்பிக்கை வைக்கிறார்கள். எதைச் செய்தாலும் இதை பாபா செய்கிறார் என நம்புகிறார்கள், எதை சிந்தித்தாலும் பாபா சிந்திக்க வைக்கிறார் என்றே எண்ணமிடுகிறார்கள். அதே சமயம், சிறிது யோசிக்கவும் வேண்டும்.

பாபாவின் பெயரால் தொழில் ஆரம்பிக்கலாம், கச்சேரி நடத்தலாம் என முன் பின் தெரியாதவர்கள், அல்லது புதியதாக அறிமுகமான நபர்கள் கூறினால் எச்சரிக்கையாக இருங்கள்.

நம்முடைய ஆசையினால் நாம் ஏமாறுகிறோம், நப்பாசையினால், நிறைய கிடைக்கும் என நினைத்து இருப்பதை முதலீடு செய்வதாக நினைத்துத் தந்துவிடுகிறோம். பிறகு, பாபா பெயரில் பழியைப் போட முயற்சிக்கிறோம். எது கிடைக்கிறதோ அதுவே போதும் என நினைத்துக் கொண்டிருங்கள். விரைந்து கிடைக்க வேண்டும் என ஒரு போதும் குறுக்கு வழியை நாடாதீர்கள். உங்களைப் படைத்த சாயி தேவன், உங்களை எல்லா நேரங்களிலும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார் என்பதை அறியுங்கள்.

எறும்பின் காலில் கட்டப்பட்ட மணியின் ஓசையைக் கூட துல்லியமாகக் கேட்கிற காதுள்ள அவர், உங்கள் கூப்பிடுதலைக் கேட்க்கமாட்டாரா என்ன? பொறுமையாக இருங்கள், விவேகமாக செயல்படுங்கள்.

சீட்டுக் குலுக்கிப் போட்டு ஏமாறுவதை விட சற்று கால அவகாசம் கொடுத்துக் காத்திருந்து பார்த்தால், நமக்கு வரவேண்டியது வரும், வராமல் தட்டிப்போவது சுவடு தெரியாமல் ஓடிப் போகும்.

இனியாவது எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களால் பாதிக்கப் பட்டவர்களுக்காக ஒரு நிமிடம் பாபாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்கள் இழந்த பொருள் அவர்களுக்கு வந்து கிடைக்கும்.   


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

சாயி எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார்

சாய் சத்சரித்திரத்தின் பாதை எளிமையானது;  நேர்மையானது. இது படிக்கப்படும் இடம் எல்லாம் துவாரகாமாயி! ஆகவே, சாயியும் அங்கு நிச்சயம் வாசம...