Friday, May 22, 2015

குருவின் அழைப்பு

                                                   குருவின் அழைப்பு 

முடிவான ஆத்மானுபூதியை அடைவதற்காக, ஒரு குருவை அடைவது அவசியம் என்று பெரும்பான்மையான இந்து மத நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மகான், தகுந்த குருவா அல்லவா என்பதை எப்படி அறிந்து கொள்ளுவது?  நாம் குருவைத் தேடி அலைய வேண்டாமென்றும், தக்க சமயத்தில் அவரே நம்மிடம் வருவார் என்றும் கபீர் கூறுகிறார். பகவான் ரமண மகரிஷியும், பன்முறை தம் பக்தர்களிடம், கடவுள், குரு, ஆத்மா ஆகிய யாவும் ஒன்றே என்பது உண்மையானாலும், சாதகன் ஒருவனுக்கு மனித உருவில் குரு தேவையாயிருக்கும் போது, இறைவனே அவனுக்கு அவ்வுருவில் காட்சியளித்து, அவன் மனத்தை உண்முகமாக்குகிறார் என்று கூறியுள்ளார்.
             சாய்பாபா, மனித உருவிலுள்ள குருவாயிருந்து, சாதகரைத் தம்மிடம் வரவழைத்துக் கொண்ட எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. எனினும் ஒரு சத்குருவை அடைந்த ஒவ்வொருவரும் இந்தப் பிறவியிலேயே பூரணத்துவம் அடைவார்கள் என்று நினைத்துவிடக்கூடாது.ஒவ்வொருவரும் தத்தமது பக்குவத்திற்கும், ஆழ்ந்த உள்ளார்வத்திற்க்கும்  தக்கவாறே பலன் அடைவார்கள். அவர்களில் பெரும்பாலோர் உள்வளர்ச்சி  பெற்ற பிறப்புக்களை அடைகிறார்கள். ஒவ்வொரு பிறவியுளும்  சத்குரு, மேலும் உயர்ந்த நிலைக்கு அவர்களைத் தூக்கி விடுகிறார். சிலருக்கு  இந்த வளர்ச்சி அவர்களாலேயே வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாததாக இருக்கலாம்.- ஆச்சார்யா E .பரத்வாஜா .

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

அல்லா மா­லிக்

நாம் ஸாயீயை ஓர் அவதார புருஷராக ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில், அவரிடம் அவதார புருஷருக்குரிய லட்சணங்கள் அனைத்தும் உண்டு. ஆனால், அவரோ,  'நான...