Wednesday, September 23, 2015

உபாஸனி பாபாவின் சிறப்பு



' பெரியவர் '  என்று பாபா  கூறுவதை 'ஆத்மீகத் துறையில் முன்னேற்றம் அடைந்தவர் ' என்ற பொருளில் எடுத்துக்கொண்டால், சாயிபாபாவின் இறுதிச் சடங்குகளைச் செய்த உபாஸனி சாஸ்திரியை, உபாஸனி பாபா மஹாராஜாக மாற்றியதோடு, வெளிப்படையாகவே தமக்கும் உபாஸனி பாபாவுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்று அறிவித்தார்.

தனது முழுச் செல்வத்தையும் உபாஸனி பாபாவுக்குக் கொடுப்பதாகக்  கூறினார் பாபா . சில ஜனங்கள் சாயிபாபாவின் கூற்றையே ஒதுக்கிவிட்டு,  உபாஸனிபாபாவைச் சாயிபாபாவைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக மதிக்கின்றனர். இருந்தும் தம்மை சாயிபாபாவின் பக்தர்களாக கருதுகின்றனர். ஒருவர் சத்குருவாக இருந்தால் , அது மற்றவரைச் சத்குருவாக இருப்பதிலிருந்து தடுக்கிறது என்று அவர்கள் கருதினர் போலும். தமது நிலைக்குச் சற்றும் தாழாத ஒரு சத்குருவே தமது உடலுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்வது என்பதைக் காட்டிலும், ஒருவருக்கு உயர்ந்த மரியாதை வேறு என்ன இருக்க முடியும் ? உண்மையில் ஆத்மீகத் துறை வரலாற்றில், இதற்கு இணையாகக் கூறத் தகுந்தது வேறு எதுவுமே இல்லை எனலாம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

சாயி நம்மைக் கைவிடமாட்டார்

                   பலவீனங்களைக்  கொண்டவர்களாகவும், எவ்வித  ஏற்றமும்  அற்ற  நாம் "பக்தி" என்றால்  என்ன என்பதை அறியோம். ஆனால் ...