Thursday, December 31, 2015

என் தொழில்


குணங்களற்ற, பரிபூர்ணனான, நிர்குணனானவன் நான். எனக்கு பெயர் கிடையாது. தங்குமிடமும் கிடையாது. எனக்கு வயது லக்ஷக்கனக்கான ஆண்டுகள். ஆசிகள் வழங்குவதே என் தொழில். எல்லா பொருட்களும் என்னுடையவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் நான் அளிக்கிறேன். இவ்வையகம் முழுவதும் என்னுள் அடக்கம். நான் எல்லாவற்றிலும்,அவற்றிற்கப்பாலும் இருக்கிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 30, 2015

யார் எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுகிறார்




ஸ்ரீ சாயிபாபாவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். அவரே நம் அன்னையும் தந்தையும் ! அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அணைத்துக்கொள்வாள்; தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அரிவாள். உங்களுடைய கொடிய வியாதியையும் வழியையும்  அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது. எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். போய்  சாயியின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள். யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்குக் கட்டுப்பட்டவர் அவர். ஆகவே துரிதமாகச் சென்று சாயி தரிசனம் செய்யவும். - ஸ்ரீ மத் சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 29, 2015

அனுபவித்தே தீரவேண்டும்



பூனாவில் வாழ்ந்த கோபால் ஆம்ப்டேகர் நாராயண் என்ற பக்தர், பிரிட்டிஷ் ராஜாங்கத்தில் கலால் வரி இலாக்காவில் 10 ஆண்டு வேலை பார்த்த பிறகு அந்த வேலையை விட்டு விட்டார். அதன் பிறகு கஷ்ட காலம் ஆரம்பித்தது. துன்பத்திற்கு மேல் துன்பம் நேரவே, எல்லா விதத்திலும் சோர்வடைந்து விட்டார். நிதி நிலைமை மோசமானது. ஆபத்துகள் வரிசையாக வந்தன. குடும்ப நிலைமை சகிக்க முடியாமல் ஏழு வருடம் திண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் ஷிர்டி சென்று பாபாவை இரவு, பகலாக வணங்கி ஓப்பாரி வைத்து அழுதார். (பாபா உடம்போடு இருந்த காலம் அது.)

1916-ஆம் ஆண்டு, 2 மாதம் ஷீரடியில் தங்கினார். துன்பத்தை தாங்க முடியாமல் ஒருநாள் ஷிர்டி கிராமத்திலுள்ள ஒரு கிணற்றில் விழுந்து இறந்து விட முடிவு செய்து கொண்டு ஒரு மாட்டு வண்டி மீது உட்கார்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சகுண் மேரு நாயக் என்ற பாபாவின் பக்தர் ஒருவர், தன் வீட்டருகே கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் ஆம்ப்டேகரை கவனித்து, அவரிடம் வந்து அக்கல்கோட் மகாராஜ் பற்றிய புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்கச் சொன்னார். அதை வாங்கிய ஆம்ப்டேகர் அந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை புரட்டினார்.

அக்கல்கோட் மகராஜின் பக்தர் ஒருவர், வியாதியை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயச்சித்த சம்பவம் அந்த புத்தகத்தில் அவர் படித்த பக்கத்தில் இருந்தது. அந்த பக்தர் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற போது அக்கல்கோட் மஹராஜ் தோன்றி அவரை காப்பாற்றி, தற்கொலையின் தீங்கு பற்றி உபதேசம்செய்தார் .

"எதை அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ அதை அனுபவித்தே தீரவேண்டும். பூர்வ ஜென்மத்தின் வினைகளை ரோகங்களாகவும் (வியாதி), குஷ்டமாகவும், வலி, கவலையாகவும் முழுவதும் அனுபவித்து தீர்க்கும் வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்? துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்து தீர்க்காவிட்டால் அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்கவேண்டும். ஆகவே, இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் உயிரை நீயே அழித்துக் கொள்ளாதே!" என்று உபதேசித்தார்.

இந்த செய்தியை படித்த ஆம்ப்டேகர் மனம் மாறி, தன் செயலுக்கு வருந்தினார். சமயத்தில் தகவலை அனுப்பி காப்பாற்றிய பாபாவுக்கு நன்றி சொன்னார்.     



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 27, 2015

குழந்தை பாக்கியம்


பக்தர்களின் நலம் கருதி பாபா நிகழ்த்திய அற்புதங்களில் ஒன்று அவர் பக்தர்கள் வம்சம் விருத்தியாக அருளியது. ஏதாவது ஒரு பக்தைக்கு பிள்ளைப் பேறு  உண்டாகும் என் பாபா ஆசி வழங்கினால், அனேகமாக அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் பாபாவின் வாக்கின்படி அப்பெண்மணி ஒரு ஆண் அல்லது பெண் குழந்தை பெறுவது உறுதி. ஜாதகத்தின் படி புத்திர ஸ்தானத்தில் ஒரு பாபி அல்லது பாபகிரகம் இருப்பதால் இப்பிறவியில் சந்ததி உண்டாக வாய்ப்பில்லை என சோதிடர்கள் கூறியும், பாபாவின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்ற பக்தர்கள் ஏராளம். பிராரப்த கர்மா அல்லது ஊழ்வினையின் நியதிகளை மாற்றி பாபா இன்றும் தனது பக்தர்களுக்கு குழந்தை செல்வம் அளித்துவருகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவை அணுக விசேஷமான வழி


பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை. நம் தாயை எப்படி அணுகுவோம்? இம்மாதிரி ஒரு கேள்வி கேட்பது மடத்தனமானது. அன்பு என்ன என்று குழந்தை உணருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள். அதே போல் பாபா குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று, முற்பிறவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார். ஆனால் அவர்கள் இப்போது பாபாவை எப்படி அணுகுவது? அவர்கள் பாபாவை அணுகவேண்டும் என மனப்பூர்வமாக விரும்பட்டும். உடனே அணுகுமுறை துவங்கிவிட்டது. அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது. அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர், மேன்மேலும் பலன் அடைகின்றனர். முதலில் ஒரு வித நன்றியுணர்வையும், நாளடைவில் பிரேம பக்தியையும் அவர்கள் பெறுகிறார்கள். பக்தர்கள் பாபாவின் திருவுருவை தங்களிடம் உள்ள லாக்கெட்டுகள்,  படங்கள் ஆகியவற்றில் அடிக்கடி பார்த்து, பாபாவின் திருவுருவை தினமும் மனதில் கொண்டுவரட்டும், கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அத்புத லீலைகளை [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்] படிக்கட்டும். பாபாவின் குணாதிசயங்களை நினைவுபெற பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி [108 நாமாக்கள்] மிக்க சக்தி வாய்ந்த சாதனம். ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள், பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ளட்டும். ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார். ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது, அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார். பாபா கடைபிடிக்கும் முறைகள் பலவகைப்படும். உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள், விழிப்புடன் இருக்கும்போதே அவருடன் பேசவும் செய்கிறார்கள். சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது. பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் எண்ணற்றவர்கள், அவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் பாபாவால் ஏற்கப்பட்டு பலன்களைப் பெறுகிறார்கள்.- பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 26, 2015

பாபாவின்மீது உள்ள ஈடுபாடு



மாயை என்று அழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நடுவில் வாழும் வரை இந்நிலைமையை ஒருவரால் தவிர்க்க முடியாது. இவ்வுலக நடவடிக்கைகளை முற்றிலும் துறந்து ஒரு யோகி அல்லது சன்னியாசியாக மாறினால்தான் இந்த நிலையை தவிர்க்கமுடியும். அதே சமயத்தில் ஒருவர், பாபாவின் நாமத்தை ஜெபிப்பது, பாபாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது, பாபாவைப் பற்றி படிப்பது, பாபாவையே நினைப்பது போன்ற சில வழிகளில் எப்போதும் பாபாவையே இறுகப் பற்றிக்கொண்டால், மாயையின் தாக்குதல்களை எதிர்க்கும் மனோபலத்தை வளர்த்துக் கொள்வதற்கும் பாபாவின் உதவி நமக்குக் கிடைகிறது. எவ்வளவுக் கெவ்வளவு பாபாவின்மீது உள்ள ஈடுபாடு அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு மாயத்தோற்றமான இவ்வுலக நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைகிறது.        

http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 25, 2015

அலைச்சலும் குழப்பமும்

                                          

உமக்கு பிடித்திருந்தால் திடமான விசுவாசத்தை என் இடத்தில் வையும். உமது இப்போதைய அலைச்சலும் குழப்பமும் பயனற்றவை. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 24, 2015

நம்பிக்கை வையும்


நீர் உமது கடமையைச் செய்யும். சிறிதளவும் அஞ்சாதீர். என் மொழிகளில் நம்பிக்கை வையும். என்னுடைய லீலைகளை நினைவில் கொள். நான் உன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து உன்னுடைய பக்தியை அதிகப்படுத்துவேன். -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா [ ஸ்ரீ சாய்  சத்சரித்திரம் ]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 23, 2015

பாபா நமது அருகிலேயே இருக்கிறார்


பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 22, 2015

வசதிகளையும் வளங்களையும் அளிக்கும்.



ஸ்ரீ குருவுக்கு பயபக்தியுடன் கவனமாக அளிக்கப்படும் அனைத்தும் நினைத்துப் பார்க்க இயலாத இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு விதையாக இருக்கும். காலப் போக்கில் அந்த விதையானது விருக்ஷமாகி தேவையான அனைத்து வசதிகளையும் எல்லாவகையான வளங்களையும் பக்தருக்கு அளிக்கும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 21, 2015

செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்


பாபாவின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்  தூயவரானாலும் சரி, கபடரானாலும் சரி, கடைசியில் கரையேற்றப்படுவார். செயல் புரியும் கடமை மாத்திரம் என்னுடையது ; பலனை அளிப்பவர் ' எல்லாம் வல்ல சாயிபாபா ' என்னும் திடமான நம்பிக்கை எவரிடம் உள்ளதோ, அவருடைய செயல்கள் அனைத்தும் வெற்றியடையும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 20, 2015

நான் நடத்துகிறேன்


என்னை நம்பி என்பால் லயமாகும் பக்தனின் எல்லா காரியங்களையும் பொம்மலாட்டத்தைபோன்று நான் நின்று நடத்துகிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 19, 2015

இகத்திலும் பரத்திலும் நலம் பெறுவார்

 "துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு  உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்".

         

பாபாவின் திருவாய்மொழியை விகற்பமாகப் பார்ப்பவர்களுக்கு எந்த சங்கற்பமும் நிறைவேறாது. சங்கற்பம் சக்தியில்லாததும் பலனளிக்காததுமான பிதற்றலாகவே முடியும். பாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர் இகத்திலும் பரத்திலும் நலம் பெறுவார். எவர் அதில் தோஷமும் குதர்க்கமும் காண்கிறாரோ, அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 18, 2015

எனது பக்தன்


எனது பக்தன் எப்படி இருந்தாலும், நல்லவனோ கெட்டவனோ, அவன் என்னுடையவன். அவனுக்கும் எனக்குமிடையே பேதம் எதுவுமில்லை. இப்போது அவன் பொறுப்பு முழுவதும் என்னிடமே உள்ளது. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 17, 2015

ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்

ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள்

நானா சாகேப் ராஸனே அல்லது தவுலத்ஷா என்கிற தத்தாத்ரேய தாமோதர் ராஸனே
(தாமோதர் ஸாவல்ராம் (அண்ணா) ராஸனே, காசர் அவர்களது புதல்வர், வயது 40, வசிப்பது ரவிவார்பேட், பூனே - மே, 1936
                                     

என் தந்தை சாயிபாபாவின் பழம் பெரும் பக்தர், நானா சாகேப் சந்தோர்க்கர் பாபாவிடம் சென்ற அதே காலத்தில் என் தந்தையும் சென்றார். அப்போது என் தந்தைக்கு குழந்தைகள் இல்லை; புத்திரப்பேறு கிடைக்க ஆசி பெற பாபாவிடம் செல்ல விரும்பினார். சுமார் 1900ம் ஆண்டு ஒரு பக்தர் பாபாவுக்கு ஒரு கூடை மிகச்சிறந்த கோவா மாம்பழங்கள் அனுப்பியிருந்தார். அவற்றுள் ஆறு பழங்களை தனியாக எடுத்துவைத்துவிட்டு எஞ்சியதை அங்கு வந்திருந்த அனைவருக்கும் பிரசாதமாக பாபா விநியோகம் செய்துவிட்டார். அவர்கள் எஞ்சிய ஆறு பழங்களையும் விநியோகிக்கும்படி கேட்டனர். ஆனால் அவற்றை தாம்யாவுக்காக (அதாவது என் தந்தைக்கு) எடுத்து வைத்திருப்பதாக பாபா கூறிவிட்டார். 'தாம்யா இங்கு இல்லையே?' என்றனர். 'கோபர்காமுக்கு வந்துவிட்டார், விரைவில் இங்கு வருவார்' என பாபா பதிலளித்தார். சிறிது நேரம் கழித்து என் தகப்பனார் அங்கு வந்து பாபாவுக்கு மலர் மாலைகள், ஆடை போன்றவற்றை சமர்ப்பித்தார். அப்போது பாபா "தாம்யா, இந்த பழங்களை இப்போது எடுத்துப்போ. அவற்றை உண்டு சாவாயாக" எனக் கூறினார்.

பாபாவின் இந்த சொற்களை கேட்டு என் தந்தை நடுங்கிப்போய்விட்டார். ஆனால் அங்கிருந்த மஹல்சாபதி பாபாவின் காலடியில் இறப்பதும் ஒருவித அனுக்ரஹமே எனக் கூறினார். இவ்வாறு ஊக்குவிக்கப்பட்ட என் தகப்பனார் பழங்களை உண்ணலாமென நினைத்தார். ஆனால் பாபா,"இந்த பழங்களை நீயே உண்டுவிடாதே, உன் இளைய மனைவியிடம் கொடு. உனக்கு முதலில் 2 பிள்ளைகள் பிறப்பார்கள். முதல்வனுக்கு தவுலத்ஷா என்றும் இரண்டாவது மகனுக்கு தானாஷா என்றும் பெயர் வை" எனக்கூறி என் தந்தைக்கு ஆறுதலளித்தார். அகமத் நகரிலுள்ள தமது வீட்டிற்குத் திரும்பிய என் தந்தை இளைய மனைவியிடம் பழங்களை கொடுத்தார். பிறகு ஒரு குறிப்பேட்டில் பிறக்கப்போகும் பிள்ளைகளுக்கு இட வேண்டிய பெயர்களை குறித்துக்கொண்டார். ஒரு வருடத்திற்குப்பின் நான் பிறந்தேன். பதினைந்து மாதங்கள் நிரம்பியிருந்த என்னை என் தந்தை ஷிர்டியிலுள்ள சாயிபாபாவின் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் பாபாவிடம் "இந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது?" எனக் கேட்க, பாபா, "நான் உன்னிடம் கூறியதை மறந்து விட்டாயா? உன் குறிப்பேட்டில் முன்றாவது பக்கத்தில் அதை எழுதி வைத்துள்ளாய். குழந்தைக்கு தவுலத்ஷா என்ற பெயரை சூட்டும்படி நான் கூறவில்லையா?" என பதிலளித்தார்.

என்னுடைய ஐந்தாவது வயதில் (1990ம் ஆண்டில்) செளளம் செய்வதற்காக (சிகை வைப்பது - முடி கொடுப்பதற்கு) என்னை ஷீரடிக்கு அழைத்துச் சென்றனர். எனக்கு அக்ஷராப்யாசமும் (முதன் முறையாக எழுத பழுகுவது) நடந்தது. சாயிபாபா என் கையை பிடித்து சிலேட்டில் ஹரி எழுத வைத்தார். அதன் பின்னர் ஷிர்டியிலிருந்து பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனக்கு திருமணம்  நடத்த தீர்மானித்தபோது, நான்கு பெண்கள் பார்க்கப்பட்டனர். எந்த ஒரு முக்கியமான விஷயத்திலும் முன்னதாக பாபாவை கலந்தாலோசித்து அனுமதி பெறாமல் என் தந்தை முடிவு எடுக்கமாட்டார். அவர்  சாயிபாபாவிடம் சென்று எனக்கு மணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்ட நான்கு பெண்களின் ஜாதகங்களையும் அவர் முன் வைத்தார். அவர்களுள் ஒரு பெண்ணுக்கு ரூ.2500 அல்லது ரூ.3000 வரதட்சிணை அளிப்பதாக முன் வந்திருந்தனர். பாபா நான்கு ஜாதகங்களில் ஏழ்மையான ஒரு பெண்ணின் ஜாதகத்தை எடுத்து என் தந்தையின் கைகளில் கொடுத்தார். அந்த பெண்ணையே நான் மணந்தேன். பண்டரிபுரத்தில் நடைபெறவிருந்த திருமணத்திற்கு வருகை தரும்படி பாபாவை என் தந்தை அழைத்தார். ஆனால், "பாபா, நான் உன்னுடனேயே இருக்கிறேன். அஞ்ச வேண்டாம்!" எனப் பகன்றார். மேலும் என் தந்தை திருமணத்திற்கு வரவேண்டுமென பாபாவை வற்புறுத்தினார். ஆனால் பாபாவோ வருவதற்கு மறுத்து, "ஆண்டவனின் சித்தமின்றி என்னால் செய்யக்கூடியது எதுவுமில்லை. என் சார்பில் திருமணத்தில் பங்கேற்க சாமாவை அதாவது மாதவராவை அனுப்பி வைக்கிறேன்" எனக் கூறிவிட்டார். பண்டரிபுரத்தில் நிகழ்ந்த திருமணத்தில் சாமா பங்கேற்றார்.

எனக்கு ஒரு இளைய சகோதரன். அவனுக்கு பாபா கூறியபடிய பெயரிடப்பட்டது. மணமாகி எனக்கு இரு பெண்களும் ஒரு பிள்ளையும் பிறந்தனர். ஆனால் அவர்கள் பிறந்து சில மாதங்களிலேயே இறந்தனர். ஆண் குழந்தை 1926ல் மாண்டது. என் மனைவியின் உடல் மிக்க பலவினமாக ஆனது. மிகவும் மனம் தளர்ந்த நான் பாபாவிடம் இவ்வாறு பிராத்தனை செய்தேன். "விரைவிலேயே மாண்டுவிடும் பல குழந்தைகளை அளிப்பதற்கு பதிலாக நீண்ட ஆயிளுடன் கூடிய ஒரு குழந்தையை அளிக்கவேண்டும்." நான் ஷீரடியில் ஓரிரவு உறங்கிக்கொண்டிருந்தேன். பாபா என் கனவில் தோன்றி நான் இறந்துவிட்டதாக வருத்தப்படும் ஆண் குழந்தை மூலா நக்ஷத்திரத்தில் பிறந்தால் பெற்றோர்களுக்கு கெடுதல் விளையும் எனக்கூறினார். கனவில் பாபாவின் மார்பில் சூரியனைப் போன்ற ஒரு ஒளிமிக்க வட்டத்தைக் கண்டேன். அந்த சூரியனுக்குள் இறந்துபோன என் ஆண் சிசுவை மடியில் வைத்துக்கொண்டு பாபா உட்கார்ந்திருக்க, அவர் என்னிடம் கூறுகிறார்: "இந்த ஆபத்தான குழந்தையை உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டுவிட்டேன். உனக்கு ஒரு நல்ல குழந்தையை அளிக்கிறேன், பயப்படாதே". இந்த காலத்திற்கு முன் எங்கள் குடும்பம் அகமத்நகரை விட்டு பூனாவில் குடியேறிவிட்டது. நான் வீட்டிற்கு திரும்பியவுடன் இறந்துபோன குழந்தையின் ஜாதகத்தை எடுத்துப்பார்த்தேன். அது மூலா நக்ஷத்திரத்திலேயே பிறந்திருந்தது. பதினைந்தே மாதங்களில் எனக்கு ஒரு மகன் பிறந்து இன்றும் ஆயிளுடன் இருக்கிறான். இது நடந்தது 1918ல்.

சாயிபாபாவிடம் என் விசுவாசம் அதிகரித்தது. பிற மகான்களையும் நான் சாயிபாபாவாகவே காண்கிறேன். அவர்களை பணியும்போது வெளிப்படையாகவோ அல்லது எனக்குள்ளேயோ "சமர்த்த சத்குரு சாயிநாதனுக்கு நமஸ்காரம்" எனக் கூறிக்கொள்வேன். 1927ம் ஆண்டில் கேத்காம்பேட்டிற்குச் சென்று நாராயண மகராஜை இந்த வார்த்தைகளை மனத்துள் கூறிக்கொண்டே வணங்கினேன். அவர் என்னிடம் உரைத்தார்: "உனது குரு பரமகுரு. அவர் என்னை விட உயர்ந்த தன்மை படைத்தவர். நீ ஏன் இங்கு வந்தாய்? அங்கே செல். உன் எண்ணம் ஈடேறும்". இது நடந்தது பாபாவால் என் முந்தைய குழந்தை பிறந்தது பற்றி குறிப்பிட்டிருந்ததற்கு முன்னதாக.

1927ல் என் கிரகபலன் சுபகரமாக இல்லை! என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. பூனாவிலிருந்து சுமார் 40 மைல் தொலைவிலுள்ள ஜன்னர் என்ற இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் அமைந்திருந்த சீதாராம் உத்தரேச்வரர் (அதாவது சிவபெருமான்) ஆலயத்திற்கு சென்றேன். ஒவ்வொரு ஞாயிறும் அந்த ஈசனை வழிபட்டு வந்தேன். ஒரு ஞாயிறன்று காலை 7 மணி அளவில் ஈசனுக்கு "சாயிபாபாவுக்கு நமஸ்காரம்" எனக் கூறிக்கொண்டே மலர்களை சமர்ப்பித்தேன். அப்போது ஈசனுடைய திருவுருவத்தில் ஒரு ஒளியையும், அந்த ஒளியின் மத்தியில் எப்போதும் நான் நினைத்துக்கொண்டிருக்கும் சாயிபாபாவின் திருவுருவையும் கண்டேன். அதன் பின்னர் என் உடல் நிலையில் முன்னேற்றம் கண்டது. தளர்வடைந்த மனநிலை திடம் பெற ஆரம்பித்தது. அங்கே ஜானகி தாஸ் என்ற ஒரு மகான் உள்ளார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நான் அவரிடம் சென்று, உதடுகள் சாயிபாபாவின் பெயரை உச்சரிக்க அவரிடம் பணிவேன். அப்போது அவர் என்னிடம் கூறினார்: "நீ ஒரு பெரும் மகானிடம் தஞ்சம் புகுந்துள்ளாய். என் போன்ற ஒரு எளிய சாதுவிடம் நீ ஏன் வரவேண்டும்.? என் போன்றவர்கள் சாயிபாபாவின் பாதங்களை பற்றுகிறோம்". பின்னர் நான் என் தங்கும் விடுதிக்குச் சென்று உறங்கினேன். சாயிபாபா என் கனவில் ஒரு பகீர் போன்று தோன்றி  "நீ மிகவும் சஞ்சல மடைந்துள்ளாய். எனக்கு பிட்சை கொடு. உனது உடல், மனம் முழுவதையும் பிட்சையாக கொடு". எனக் கூறினார்.

நான்: இந்த பிச்சையை அளித்துவிட்டு பின்னர் என் தந்தையிடம் தெரிவிக்கிறேன்.
பாபா: உன் தந்தையை கலந்தாலோசிக்காமல் நீ எப்படி இதை செய்வாய்?
நான்: என் வாழ்க்கையின் அதிகாரி நானே. என் தந்தைக்கு இதர புத்திரர்கள் இருக்கிறார்கள்; அவர் ஆட்சேபிக்கமாட்டார். குழந்தைகளை அளித்தவர் தாங்களே; ஆகவே என்னை தங்களுக்கு அர்ப்பணிப்பதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.

பின்னர் சாயிபாபா என் உடலை தமது உள்ளங்களில் தாங்கி தமது சட்டைப்பையினுள் போட்டுவிட்டார். என்னை அவருடைய இதயத்துக்கு அருகில் இருத்திவிடும் அளவுக்கு அவர் என்னிடம் நிறைய அன்பு காட்டினார் என்ற எண்ணம் எழுந்து நான் பேரானந்தம் நிறையப் பெற்றேன். விழித்தெழுந்தபோது, நான் மகிழ்ச்சியுடன் இருந்தேன்; என் மனது உதாசீனம் அல்லது வைராக்கியம் (பற்றின்மை) பெற்றது. முன்புபோல் இப்போது பொருட்கள் என் மனதைக் கவரவோ ஆட்கொள்ளவோ இல்லை. இரண்டு மூன்று மாதங்களில், அதாவது 1928ம் ஆண்டு பங்குனியில் எனக்கு பண்டரிபுரத்தில் ஒரு மகன் பிறந்தான். பதினைந்து மாதங்களுக்குப் பின்னர் என் தந்தையும் நானும் ஷீரடிக்குச்  சென்றபோது என் தந்தை எனக்கு இன்னுமொரு பிள்ளை பிறக்க அருள்செய்ய வேண்டும் என பாபாவிடம் பிராத்தித்தார். 1931ல் எனக்கு இன்னுமொரு மகன் பிறந்தான்; அவனுக்கு சாயிதாஸ் என பெயர் சுட்டினேன். பிறந்த இரண்டாவது தினத்தில் அவனுக்கு அதிக காய்ச்சல் கண்டது. பாபாவின் ஊதியையும், தீர்த்தத்தையும் கொடுத்து ஒரு தாயத்தில் பாபாவின் துணிக்கந்தைகளிலிருந்து எடுத்த ஒரு துண்டை வைத்து அந்த தாயத்தை குழந்தைக்கு அணிவித்தோம். குழந்தை குணமடைந்தது. ஒரு வயது நிரம்பியவுடன் குழந்தையை ஷிர்டிக்கு எடுத்துச் சென்றோம்.

என் சிறு வயதில், சுமார் ஏழு வயதானபோது, ஷீரடிக்கு சென்ற நான் பாபாவின் பாதத்தை பிடித்துக்கொண்டிருந்தேன். அச்சமயம் அங்கே வந்திருந்த குழந்தைகள் யாவருக்கும் பாபா இனிப்புகள் வழங்க ஆரம்பித்தார். என் கவனம் இனிப்புகள் மீது திரும்பி பாத சேவையில் சிரத்தை குறைந்தது. என் அருகில் இருந்த என் தாய் "இனிப்புகளை நினைத்துக்கொண்டு பாபாவின் தொண்டை மறந்துவிட்டாயா?" எனக் கூறி என்னை அடித்துவிட்டாள். "ஏன் அம்மா பையனை அடிக்கிறாய்?" எனக் கத்தினார் பாபா. பாபாவுக்கு பணிவிடை செய்வதில் நல்ல ஆவல் எனக்கு உண்டாக அருள்புரிய வேண்டுமென பாபாவிடம் பிராத்தித்தாள். "சிறுவன் எனக்கு சிறப்பாக பணிபுரிவான். மனதில் தூய்மையான ஆசைகள் எழ ஆண்டவன் அருள்புரிவார். அஞ்சவேண்டாம்! அவனை அடிக்காதே!" என பாபா மொழிந்தார். எனக்கு பன்னிரண்டு வயதான போது, எனக்கு மூத்தவனான மாற்றுச்சகோதரன் ஒருவனுடன் நான் ஷிர்டிக்குச் சென்றேன். எங்களிடம் 100 ருபாய் இருந்தது. பாபா தட்சிணையாக கேட்டார். முதலில் ரூ. 10 பின்னர் ரூ.15 இப்படியாக கேட்டு என் சகோதரன் சட்டைப் பையில் ரூ.25 மட்டுமே எஞ்சியிருந்தது. உடனே பாபாவுக்கு மேலும் கொடுப்பதற்காகவும், எங்கள் திரும்பும் பயணச் செலவுக்காகவும் தேவையான பணம் அனுப்பும்படி அகமத் நகரிலுள்ள எங்கள் வீட்டிற்கு கடிதம் எழுதினோம். அன்று மாலை பாபா என் சகோதரனிடம் ரூ.25 தரும்படி கேட்டார். அவன் "கொண்டுவந்த பணம் தீர்ந்துவிட்டது. நாங்கள் ஊருக்கு திரும்பிச்செல்லவே பணம் தேவை" என பதிலளித்தான். பாபா உடனே பதிலடி கொடுத்தார்! "ஏன் இந்த பொய்ப் பேச்சு! உன் பையின் மூலையில் ரூ.25 இருக்கிறது. நீ ஊருக்கு எழுதியுள்ளபடி நாளை மணியார்டர் மூலம் பணம் வந்துவிடும். கவலை வேண்டாம்!" என் சகோதரன் உடனே ரூ.25 அளித்துவிட்டான்.

"எனக்கு ஒன்று அளிப்பவருக்கு, நான் இரண்டு அளிப்பேன். இரண்டு அளிப்பவருக்கு ஐந்து, ஐந்து அளிப்பவருக்கு பத்து கொடுப்பேன்" என பாபா சொல்வது வழக்கம். ஒருவன் பகவானுக்கு அளிப்பதை அவர் பன்மடங்காகத் திருப்பிக் கொடுக்கிறார் எனும் வெளிப்படையான பொருளைத்தவிர, ஒரு கூடகமான (மறைந்து நிற்கும்) பொருளும் இதில் அடங்கியுள்ளது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 16, 2015

விழவிடவே மாட்டேன்


என் பக்தர்களுக்கு தீங்கு நேரிட விடமாட்டேன். என் பக்தர்களை நானே கவனித்துக் கொள்ளவேண்டும். ஒரு பக்தன் விழும் நிலையிலிருந்தால், நான் நான்கு கரங்களை அத்தருணத்தில் நீட்டி காக்கிறேன். அவனை விழவிடவே மாட்டேன். ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா      

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 14, 2015

ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபர்

ஆதி குரு ஸ்ரீ குருதேவதத்தர்பிரம்மா விஷ்ணு சிவனின்  அவதாரமே ஸ்ரீ தத்தர்குருவிற்க்கெல்லாம் குருவானவர்எப்போதும்வாழும் அவதாரமும் ஆவார்
குரு பரம்பரை என்பது  தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார்.  இந்த பூமியில் குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்தி கலிகாலத்தில் கலியின் தாக்கத்தினால் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை  நடைமுறையில் எடுத்துக் காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாக பல அவதாரங்களை எடுத்துக் காட்டி உள்ளார்.  தத்தாத்திரேயரே ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஷீரடி சாயிபாபா, மானிக் பிரபு போன்ற பல ரூபங்களில் தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார்.

ஸ்ரீ தத்தாத்ரேயரின் முதல் அவதாரம் ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபர் ஆவார். அவருடைய வாழ்க்கையைப் பற்றி வெளிஉலகிற்கு தெரிந்துள்ள விபரங்கள் மிக குறைந்த அளவே ஆகும்.

கி.பி. 1320 ஆண்டு  ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ப்ரம்மஸ்ரீ கண்டிகோட்டா  அப்பலராஜ சர்மா அவர்களுக்கும் அகண்ட லக்ஷ்மி சௌபாக்யவதி சுமதி மஹா ராணிக்கும் மூன்றாவது குழந்தையாக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.
ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் தான் பிரபஞ்சத்திலிருக்கும் ஸ்தாவர, ஜங்கம வஸ்துக்கள் அனைத்திற்கும் மூல காரணம். அவர் ஒரு ஆலமரம் போன்றவர். அவரது துணை, அம்ச/பின்ன அவதாரங்கள் அந்த மரத்தின் கிளைகள் போன்றவையாகும். ஆலமரத்தின் வேர்கள் கிளைகளிலிருந்து தலைகீழாக தோன்றினாலும் தாய் மரமே எல்லாவற்றிற்கும் அடிப்படையாகும். தேவர்கள் முதல் பூத பிசாசுகள் வரை உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அவரே அடைக்கலம் கொடுப்பவர். புகலிடம் கொடுப்பவர். அனைத்து சக்திகளும் அவரிடமிருந்தே தோன்றி அவரையே தஞ்சம் புகுகின்றன.
அநேக ஜென்மங்களில் செய்த பாவங்கள் ஒழிந்த பிறகு புண்ணியங்கள் பலன் கொடுக்கத் துவங்கும் பொழுது தான் ஒருவருக்கு தத்தரிடம் பக்தி பிறக்கும். தத்தரிடம் பரிபூரண பக்தி ஏற்படும்பொழுது  ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் தரிசனம், தொட்டு ஆசிர்வதித்தல், பேசுதல் இவற்றால் அருட்ச் செல்வத்தை எந்த வயதிலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பெறலாம்.

ஸ்ரீ ஸ்ரீபாதர் சத் புருஷர்களுக்கு  எளிதாக கிடைக்ககூடிய தங்கச் சுரங்கம். பாவம் செய்பவர்களுக்கோ, தர்மத்தை மீரியவர்களுக்கோ அவர் ஒரு யமதர்மராஜா மாதிரி. ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் பெயரைச் சொன்னாலேயே, நாம் உறுதியாக அவரது அருளைப் பெறலாம். நாம் அனைத்து துன்பங்களிலிருந்தும் இழப்பிலிருந்தும் விடுதலை பெறலாம்.  

ஸ்ரீ பாதரின் பக்தர்களுக்கு ' முடியாத காரியம் ' என்று ஒன்று இல்லவே இல்லை. நெற்றியில் எழுதியுள்ளத் தலை எழுத்தை மாற்றி எழுதும் வலிமை வேறு எந்த தெய்வத்துக்கும் இல்லை. அனால் ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீ ஸ்ரீபாதர், தன் பக்தனின் துன்பத்தைக் கண்டு மனம் இறங்கி பிரம்மாவை அவன் தலை எழுத்தை அழித்துவிட்டுப் புதிய தலையெழுத்தை எழுதுமாறு உத்தரவிடுவார்....
."இன்று என பக்தன் இறக்க வேண்டிய நாளாகும். நான் அவனது ஆயுளை மேலும் இருபது ஆண்டுகள் நீட்டித்துள்ளேன். இந்த முடிவை அவனுடைய பக்தியின் காரணமாக அளிக்கிறேன் ."- ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர்.

ஸ்ரீ பாதரின் சத்திய வார்த்தைகள் சில...

*  நானே அனைத்து ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் வடிவம் ஆவேன்.
* என் செயல்கள் யாவும் உங்கள் குணம் சத்கர்மா, பாவ புண்ணியங்களுக்கு  ஏற்பவே அமையும். என்னை முழுமையாக சரணடைந்த பக்தனை நான்  ஒருபோதும் கை விடமாட்டேன். வெகுதூரத்தில் வசிக்கும் என் பக்தனையும்    என் ஷேத்திரத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விடுவேன். ரிஷி  மூலம் நதி மூலம் கேட்கக் கூடாது.
* நான் தான் ஸ்ரீ தத்தாத்ரேயர். என் தத்துவம் மட்டுமே கோடான கோடி  அண்டங்களில் வியாபித்து உள்ளது. திசைகளே எனக்கு ஆடைகள். நான் ஒரு  திகம்பரர். எவனொருவன் உடல் மனம் சொல் தூய்மையுடன் " தத்த திகம்பரா!  ஸ்ரீபாத ஸ்ரீ வல்லப  திகம்பரா! நரசிம்ம சரஸ்வதி திகம்பரா ! " என்று  கூறுகிறானோ அங்கு நான் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.
* எவனொருவன் நான் பிறந்த புனிதமான வீட்டில் தங்குகிறானோ அவன் நிச்சயமாக பரிசுத்தனாக மாறிவிடுவான். அவனின் முன்னோர்கள் புண்ணிய லோகங்களை அடைவார்கள் .
* பல்வேறு பிறவிகளில் செய்த புண்ணியத்தின்  விளைவாகவே ஒருவன் பீடிகாபுர அக்ரஹாரத்தில் அடியெடுத்து வைக்கிறான்.
என்னுடைய சக்தியைத் தெரிந்துக்கொள்ள முதலில் நீங்கள் ஆன்மீகத் தேடுதலில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். அதன் பின்னரே என் சக்தி, இரக்கம், கருணை, அன்பு, பாதுகாப்பு, நான் பாவங்களிலிருந்து மீட்பதை நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
* நீங்கள் அனைவரும் என் விருப்பப்படியே அந்த அந்த நிலையில்  இருக்கிறீர்கள். நான் நினைத்தால் ஆண்டியையும் அரசனாக்குவேன்.  அரசனை ஆண்டியாக்குவேன். என்னை நம்பியுள்ள பக்தனுக்கு அவன் என்ன  கேட்டாலும் தருவேன். நான் 'தேவை' என முடிவு செய்து விட்டால்    மண்ணையும் விண்ணாக்குவேன். விண்ணையும்  மண்ணாக்குவேன்.
* என்னுடையவன் என எனக்கு யாரைப் பிடிக்குமோ அவனை தலை முடியைப்  பிடித்து பீடிகாபுரத்திற்கு இழுத்து வந்து விடுவேன். என்னுடைய விருப்பம்  இன்றி எவரும் என் பீடிகாபுரம் சமஸ்தானத்திற்கு வர இயலாது. அவர்  எவ்வளவு பணக்காரராக இருந்தாலும் மிகப் பெரிய யோகியாக இருந்தாலும்  சரி. இது உறுதியான சத்தியமாகும். நான் மட்டுமே யார் எப்பொழுது எத்தனைப்  பேராக எந்த மாதிரி பயணம் செய்து என்னை தரிசிக்க வரவேண்டும் என்பதை  முடிவு செய்வேன்.அது என் விருப்பமே.
* இந்தப் பிரபஞ்சப் படைப்பில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கூலிக்காரன்தான்.    நான் தான் முதலாளி. நான் மகிழ்ச்சியடைந்தால் உங்களுக்கு உரியதைவிட  மிக மிக அதிகமாகவே தருவேன். நான் கோபம் அடைந்தால் எவ்வளவு  குறைத்துக்கொண்டு மிதத்தை மட்டும்  தான் தருவேன்.
 மனமுருகி நான் பாவங்களிலிருந்து விடுபட்டவன் என உணர்ந்து, என்னை  அடைக்கலம் அடைந்து என்னை அன்புடன் , தத்த திகம்பரா ! ஸ்ரீபாத வல்லப  திகம்பரா ! என்ற அழைத்தால் அந்தச்   க்ஷ்ணத்திலிருந்தே உங்களது  பாவங்களை எரித்துப் பொசுக்கி உங்களை புண்ணியவான் ஆக்குவேன்.
* நான் என்னுடைய பக்தர்களுக்கு தாசானுதாசன் ஆவேன். என்னை தன்    மனதில் சிறை பிடிப்பவனே மிக மிகச் சிறந்த சக்ரவர்த்தி ஆவான்.  அப்படிப்பட்ட பக்தனுக்கு மூவுலகங்களையும் ஆளும் ஸ்ரீ பரமேஸ்வரனே கூட  வேலைக்காரன் போலச் சேவை செய்வார்.
* நான் ஒருவனே அனைத்து தர்மங்கள் மதங்கள் தத்துவங்கள் அனைத்திலும்  சுயமாகப் பிராகாசிப்பவனாவேன். அனைத்து தெய்வங்களிலும் தெய்வீக  சக்திகளிலும் நுணுக்கமாகப் பிரகாசிப்பவன் நானேயாவேன். நான் ஒருவனே  உங்கள் அனைவரின் வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் அந்தந்த  உருவங்களின் மூலம் பெற்றுக் கொள்பவன் ஆவேன். நான் ஒருவனே தான்  அனைவருக்கும் அருள் பாலிப்பவன்.
* என் புனித வரலாற்றை (ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரித்ராம்ருதம் ) படித்தால் ஆசைகள் நிறைவேறும். எல்லாத்  தடைகளும் விலகும். இந்த சரித்ராம்ருதத்தை ஒரு சராசரிப் புத்தகம் என்று  நினைத்துக் கொள்ளாதே. இது ஒரு தெய்வீகச் சைத்தன்யத்தின் உயிருள்ள  சக்திப் பிராவகம் ஆகும். நீ பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும்போது  அந்த எழுத்துகளின் வலிமையானது என்னுடைய மானசீக  சைத்தன்யத்திற்குள் பாயும். உனக்கு தெரியாமலேயே உனக்கு என்னுடன்  ஒரு தொடர்பு எற்பட்டுவிடுவதால் உன்னுடைய நியாயமான கோரிக்கைகள்,  பிரார்த்தனைகள் ஆசைகள் அனைத்தும் என்னுடைய கருணையால்  நிறைவேற்றப் பட்டுவிடும். இந்த புத்தகத்தை பூஜை ஆறையில்  வைத்திருந்தால் துரதிர்ஷ்டமும் தீய சக்திகளும் அங்கிருந்து  துரத்தி  அடிக்கப்பட்டுவிடும்.


ஷீரடி சாயி அவதரித்தல்
ஹனுமனுக்கும் ஸ்ரீபாதருக்கும் நடந்த உரையாடல்;

ஸ்ரீபாதர் ; நீ கோடி கோடியாக இராம நாமாக்களை ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். ஆகையால் நீ காலத்தைக் கடந்தவன். நீ ' காலத்மகன்' ஆகிவிட்டாய். நீ ஒரு முறை கலியுகத்தில் அவதாரம் செய்ய வேண்டும். புலன்கள் ஆசையை அடக்க வல்லவனாய் இருப்பதால் ' சாயி' என்ற பெயரால் நீ புகழ்பெற்று விளங்குவாய்.

ஹனுமன் ; பிரபோ ! உடல் ரீதியாகவோ நான் உங்களுக்கு ஒரு சேவகன் தான். உயிர் சக்தியின் அடிப்படையால் நான் உங்களின் ஒரு பகுதியே ஆவேன். ஆத்மாவின் நோக்கில் நானே நீயாவேன். ஆகையால் நான் எந்த ரூபத்தில் அவதரிக்க வேண்டும் என்று கூறுங்கள்.

ஸ்ரீ பாதர் ; சிவனின்  மூலத்திலிருந்து நீ தோன்றியிருந்தாலும் நீ இராம பக்தனாகிவிட்டாய். அரபு மொழியில் "அல்" என்றல் சக்தி என்று பொருள்.ஆஹா என்றால் சாக்த, சக்தியை தாங்குபவன் என்று பொருள். ஆகையால் " அல்லாஹ்" என்பதன் பொருள் சிவனும் சக்தியும் சேர்ந்த ரூபமாகும். ஆகையால் இனிமேல் என்னை சிவ சக்தியாக " அல்லாஹ் " என்று பெயரை கூறுவதன் மூலம் பிற நாட்டவரும் ஏற்று கொள்ளும் வகையில் அழைத்து பூஜிப்பாயக.

ஹனுமன் ; நான் எடுக்கவிருக்கும் அம்சாவதரமானது இடைவிடாது எப்பொழுதும் மூலதத்துவமாகிய உம்முடன் தொடர்பு கொண்டும் அந்த பழைய மூல தத்துவம் பெற்றிருக்கும் அனைத்து வளங்களையும் சக்தியையும் பெற்றிருப்பதாகவும் இருக்கவேண்டும்  என்று வேண்டினார்.

அதற்கு ஸ்ரீ பாதர். " என் அருமை ஹனுமனே! நீ மிகவும் புத்திசாலி . என்னுடைய அனைத்து சக்திகளும் என்னுடைய அனைத்து வகையான சிறப்புகளும் உன்னுள்ளும் விளங்கட்டும்.  நான் கதலி வனத்தில் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதியின் உடலில் மறைந்து 300 ஆண்டுகளுக்கு யோகா சமாதியில் இருப்பேன். பின்னர் நான் சுவாமி சமர்த்தர் என்ற பெயரில் ப்ரஞாபூரில் அவதரிப்பேன்.என்னுடைய பூத உடலை நீக்கும் சமயம் வரும்போது நான் உன்னுள்  " சாயி"யாக அவதரிப்பேன்.  என் அவதாரம் உன்னுள் உள்ளதாக பகிரங்கமாக அறிவிப்பேன்.  நீ என்னுடைய சர்வ சமர்த்த சத்குரு அவதாரமாகப் புகழ் பெருவை என்று கூறினார்.

பின்னர் ஹனுமன் பணிவுடன் " பிரபுவே ! உடல் ரீதியான நிலையிலிருந்து பார்க்கும் போது நான் உங்கள் சேவகன். ஆகையால் நான் ' அல்லா மாலிக்' என  பெயர் சொல்லிக் கொண்டு திரிவேன் . உங்களுடைய பேரொளியின் ஒரு பொறியைக் கொண்ட குரு ரூபமாக நான் விளங்குவேன். ஆனால் அது சாக்ஷாத் ஸ்ரீ பாதர் அல்ல. நம்மிருவரிடத்தில் இந்த வேறுபாடு தேவைதானா ? தயை கூர்ந்து என்னை ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வரூபமாக உருமாற்றம் செய்து மாற்றி விடுமாறு  கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பின்னர் ஸ்ரீபாதர், கால புருஷனை தன் முன் வருமாறு உத்தரவிட்டார்.  " கால புருஷரே! இந்த ஹனுமனை நான் என்னுடன் ஐக்கியமாக்கி கொள்ள விரும்புகிறேன். அவருக்கு ' நாத்' என்ற பட்டத்தையும் அளிக்கிறேன். ஆகையால் இவர் " சாயி நாதர்" என்ற பெயராலேயே அழைக்கப்படுவார். ஹனுமனில் உள்ள சைதன்ய அறிவானது ஏற்றபடி உருமாற்றமடைந்து  சாக்ஷாத் தத்தாத்ரேய ஸ்வரூபமாக மாற வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

மேலும் ஹனுமனிடம், உன் மனதை எப்பொழுதும் என் நினைவிலேயே ஒன்றி வைத்திருப்பாயாக ! உனக்கு குருவாக ' கோபால்ராவ்' என்பவர் அளிக்கப்படுவார். அவர் ஒரு வெங்கடேஸ்வர பக்தராக ' வெங்குசா ' என்று அழைக்கபடுவார் என்றார்.

ஸ்ரீ ஸ்ரீபாதர் தன் பக்தர்களுக்கு அளித்த பன்னிரண்டு வாக்குறுதிகள் .

1. என் வாழ்க்கை சத்சரித்திரத்தை பக்தியுடன் படிக்கும் ஒவ்வொரு இடத்திலும் நான் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.

2. மனம், சொல், செயல் இவற்றால் என்னை பக்தியுடன் சரண் அடைந்தவனை நான் கண் இமை கண்ணைக் காப்பது போலக் காப்பேன்.

3. தினமும் மதியம் பீடிகாபுரத்தில் நான் பிக்ஷை எடுப்பேன். என் வருகை ரகசியமானது.

4. என்னை இடைவிடாது தியானிப்பவர்களின் அனைத்து கர்மக் குவியல்களையும் எரித்து சாம்பலாக்கிவிடுவேன். பல்வேறு ஜென்மங்களில் சேர்த்து வைத்திருந்த கர்மாக்களையும் எரித்துப் பொசுக்கிவிடுவேன்.

5. " ஓ ! ராமச்சந்திரா! சாப்பாடு போடு!" என்று பிக்ஷை கேட்பவருக்கு உணவு அளித்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

6. நான் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ! ஸ்ரீ மஹாலக்ஷ்மி அனைத்து சொவ்பாக்யங்களுடன் என் பக்தர்கள் வீட்டில் பிரகாசமாக ஜொலிப்பாள்.

7. உங்கள் மனம் தூய்மையாக இருந்தால் என் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.

8. எந்த ஒரு கடவுளை வழிபட்டாலும், எந்த ஒரு சத்குருவின் வலி நடந்தாலும் எனக்கு சம்மதமே.

9. உங்களின் அனைத்து பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் ,என்னை வந்தடையும். என்னுடைய அருளானது உங்களுக்கு நீங்கள் வழிபடும் தெய்வம் வழியாகவோ, உங்களுடைய சத்குருவின் வழியாகவோ உங்களை வந்தடையும்.
10. ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் இந்த பெயருக்கும் உருவத்திற்கும் மட்டுமே கட்டுப்பட்டவர் அல்ல. என்னுடைய தெய்வீக விஸ்வ ரூபத்தை அனைத்து தெய்வங்களின் உருவமாகவும் என் உடல் பகுதிகளை அனைத்து சக்திகளாகவும் ஆன்மீக யோக சாதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

11. என்னுடையது அவதாரம் முழுமையான யோக அவதாரமாகும். மிகச் சிறந்த யோகிகளும், சித்தர்களும் என் மீது இடைவிடாது தியானம் செய்து கொண்டிருப்பார்கள்.

12. என்னுடைய ஆதரவை நாடினால் நான் உங்களுக்கு தர்மத்தின் வழியையும் கர்மத்தின் வழியையும் போதிப்பேன். உங்களை எப்பொழுதும் வீழ்ச்சியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் காப்பாற்றுகிறேன்.

                             ஸ்ரீ பாத ராஜம் சரணம் பிரபத்யே !

                 திகம்பரா திகம்பரா ஸ்ரீ  பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!

( இந்த மந்திரத்தை எப்பொழுதுவேண்டுமானாலும்  ஜெபித்தால் எல்லா துக்கங்களும் பாபங்களும் அழிந்து போய்விடும்)



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 13, 2015

குருவின் கிருபை பூரணமாக கிடைக்கும்


பக்த வத்சலனான சத்குரு தன்  கிருபையை எல்லா உயிர்களிடம் எப்பொழுதும் பொழிவார். அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லையென்றால்  உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை சந்தேகிக்கிறாய். முழுமையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் கிருபை பூரணமாக கிடைக்கும். - ஸ்ரீ குரு சரித்திரம்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள்

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடம...