Friday, February 26, 2016

பாபாவிடமிருந்து எனக்கு ஏன் எந்த உதவியும் கிடைக்கவில்லை



நான் சிலகாலமாக மிகுந்த கஷ்டத்தில் இருந்து வருகிறேன். என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பாபா செவி சாய்க்காததால் பல சமயங்களில் என்னுடைய நம்பிக்கையை இழக்கிறேன். பாபாவின் உதவியை நாடி நான் பிரார்த்தனை செய்தபோதிலும், பாபா அதற்க்கும் செவி சாய்த்ததாகத்  தெரியவில்லை. பாபாவிடமிருந்து எனக்கு ஏன் எந்த உதவியும் கிடைக்கவில்லை.? 

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை ( முந்தைய கர்மாக்களை ) நன்கு அறிந்த பாபா, அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைபடுகிறது.  இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். ஒன்று,
மற்றொன்று இல்லாமல் நிலைக்க முடியாது. ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை தினமும் படியுங்கள், பக்தர்களின் இதுபோன்ற கேள்விகளுக்கு பாபா தனக்கே உரித்தான முறையில் பதில் கூறியுள்ளார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எப்போதும் உன்னை நினைத்திருப்பேன்,

ரகுவீர் புரந்தரே, முதன் முதலாக 1909-ல் நான் சாயி பாபாவைப் பற்றி கேள்வியுற்று அவரை தரிசிக்க மனைவி, குழந்தை முற்றும் தாயாருடன் விஜயம் ...