Saturday, May 7, 2016

நானேதான் என்னிடம் வரவழைக்கிறேன்


ஒருமுறை பக்தர் ஒருவர், உலக ஆதாய நன்மையை நாடி பாபாவிடம் மக்கள் போவதை ஆட்சேபித்தபோது, பாபா "ஒருபோதும் அப்படி சொல்லாதே. எனது மக்கள் முதலில் அதற்காகத்தான் என்னை நாடி வருகிறார்கள். தமது ஆசைகள் நிறைவேறி, வாழ்க்கையில் சவுகரியத்தை அடைந்த பிறகு, அவர்கள் என்னை பின்பற்றி ஆத்மீகத் துறையிலும் முன்னேறுகிறார்கள். என்னைச் சேர்ந்தவர்களை தொலை தூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக இங்கே வரவழைக்கிறேன். நானேதான் அவர்களை என்னிடம் வரவழைக்கிறேன். அவர்கள் தம் இச்சைப்படி தாமே வருவதில்லை. நான் அவர்களை என்னிடம் இழுத்துக்கொள்கிறேன்" என்றார். இச்சொற்கள் இன்றும் பலித்து வருகின்றன.                

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

யாரும் இறப்பதில்லை

யாரும் இறப்பதில்லை, நிச்சயமாக சாயி பாபா போன்ற, தன்னைக் கண்டறிந்த ஒரு மகாத்மா இறப்பதில்லை. பௌதீக உடலை விட்டு விடும்போது ஆத்மா ஞானிகள் அ...