Friday, June 3, 2016

கடவுளைக் காண்பதெப்படி


நானா ( பக்தர் ) : பாபா, கடவுளைக் காண்பதெப்படி?

பாபா : மனம் முரட்டுத்தனமானது. கட்டுக்கடங்காதது. அதை அடக்க முயல வேண்டும். ஒரு ஈயானது எப்படி எல்லாப் பொருள்கள் மீதும் உட்கார்ந்துவிட்டு, தீயையணுகும்போது பறந்துவிடுகிறதோ, அதைப் போன்று மனமானது இந்திரிய சுகங்களை நாடி அவற்றை அனுபவித்து, அவற்றுள் மூழ்கி, தெய்வீகத்தைக் காணும்போது வேறு பக்கம் திரும்பிவிடுகிறது. கட்டுக்கடங்காத இந்த மனம் கடவுளிடம் ஒன்றுபடாத வரையில், சம்சாரம், பிறவிப் பெருங்கடல் தவிர்க்க முடியாததே. மனதை ஜெயிக்காத வரையில் மீண்டும் பிறந்தேயாக வேண்டும். ஆனால் பிறவிகளில் மானிடப்பிறவியே மிகச்சிறந்தது.
ஆகவே, மூர்த்தி பூஜை செய். அதாவது கடவுளை உருவங்களில் வழிபட்டு மனதை ஒரு நிலைப்படுத்து, சிலையும் கடவுளே. உருவ வழிபாட்டைப் புறக்கணிக்காதே. ஒரு உருவச்சிலை ஆழ்ந்த பக்தியுடன் பூஜிக்கப்படும் பொழுது, மனது லயத்தைப் பெறுகிறது.
பின்னர், மனனம் (அதாவது) கடவுளின் லீலைகளை எண்ணுவது, தியானம் இவற்றைக் கடைப்பிடி. புராணங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றைப் பாராயணம் செய். அவற்றுள் கூறியிருப்பதைக் கடைப்பிடி. ஆத்ம வித்யை எல்லா ஞானத்திலும் சாலச்சிறந்தது. அதில் தேர்ந்துவிட்டால் முக்தி கிடைத்து விடுகிறது.  கடவுளே நம் வசப்படுகிறார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஞானிகளின் உறவை நாடுங்கள்

மிக சங்கடமான நிலைமை வரும்போது தன்னுடைய கஷ்டத்தைத் தாங்க முடியாமல் மனிதனுக்கு இறைவனின் ஞாபகம் வருகிறது. முழுத்தீவிரத்துடன் பக்திசெய்து ...