Tuesday, October 25, 2016

சாதாரண வித்தைகாரர் அல்ல

பாபா ஒரு சாதாரண வித்தைகாரர் அல்ல, அவர் ஒரு சமர்த்த சத்குரு. பக்தர்களின் உள்ளங்களில் விசுவாமும் நம்பிக்கையும் நிரம்பி வழிய பாபா சில சமத்காரங்களையோ, வியக்கத்தகும் உத்திகளையோ கையாளுகிறார். நன்றி உணர்ச்சி, பிரேமை, பக்தியாக மாறுகிறது. இவ்வாரு பாபாவின் செயல்பாட்டின் உண்மை நோக்கம் காணப்படுகிறது. கீழ்த்தரமான பற்றுக்களால் உண்டாகும் மாசுகளையும் அதன் விளைவுகளையும் பக்தர்களின் இதயங்களிலிருந்து போக்கி, தூய்மைப்படுத்தி, படிப்படியாக பக்தர்களின் ஆன்மாக்களை உயர்ந்த, மேன்மேலும் உயர்ந்த, நிலைகளுக்கு நடத்திச் சென்று அவர்கள் இறுதியில் தம்முடனே இரண்டறக் கலந்து விடும்படி செய்கிறார் பாபா. தங்கள் தேவைகள் யாவற்றையும் அளிக்கக் கூடிய வள்ளல் என்ற நோக்கத்துடன் மக்கள் பாபாவை அணுகுகின்றனர். அவர்களது லௌகீக தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பாபாவிடம் செல்கின்றனர். ஆனால் பின்னர் பலர் பாபா ராமன், சிவன் போலவே தங்கள் இஷ்ட தெய்வம் என்றும், தங்கள் முன்னோர்களின் குல தெய்வமே பாபாவாக புதிய உருவில் தோன்றி வையகத்தில் புராதானதெய்வீக பணிகளை நிறைவேற்றுகிறது எனவும், கண்டு கொண்டுவிடுகின்றனர்.
                                                                             -பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

துன்பம் ஒரு முடிவை அடைகிறது

ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதித் தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். அவ்விதமாக அவர்கள் மசூதி ப...