Thursday, January 19, 2017

சாயி நிச்சயம் உதவுவார்



பாபா அளிக்கும் பயிற்சி, போதனைகள் எல்லாம் பெருமளவில் வித்தியாசமானவை. அவரை அண்டி வரும் ஒவ்வொருவருடைய  நிலைக்கு தக்கவாறு இருந்தன. இப்போதும் அவரை அண்டுபவர்களின் நிலைகளுக்கு ஏற்றவாறு அவை இருக்கும். பாபாவை ஒரு குரு, ஒரு ஸ்வரூபம், ஒரு தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கிவாருங்கள். இந்த பிறவியில் மட்டுமல்ல தனது பக்தர்களை ஒவ்வொரு பிறவியிலும் வழி நடத்துவதாக பாபா அடிக்கடி உத்திரவாதம் அளித்ததோடு, அதன் பொருட்டு அவர்களுடன் தாமும் மீண்டும் பிறப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஒவ்வொருவரும் சிறந்தவராகவே தம்மிடம் வர வேண்டுமென பாபா எதிர்பார்க்கவில்லை.  தன்னுடைய குற்றங்குறைகள் எல்லாவற்றிடனும் ஒருவர் பாபாவை அணுகலாம். பாபா அவரை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், பாபா மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம். உதாரணமாக "பாபா என்னுடன் இருக்கிறார். சாயி எனக்கு நிச்சயம் உதவுவார். நான் பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன்" என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்வது  மிகவும் நல்லது, மேலும் பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும்.
                                                       
                                                      * ஓம் சாயிராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸ்ரீ சாய்பாபாவின் கிருபை

கடவுள் மனித உருவில் அவதரிப்பது மனிதன் எளிய முயற்சியாலேயே சிறந்த பலனை அடைய ஏதுவாகிறது. ஆகையால் மனிதர்கள் கலியுகத்தில் மிக மிக அதிர்ஷ்...