Monday, April 3, 2017

உங்கள் வீட்டில் பாபா இருக்கிறார்.



ஷீரடியிலோ, மற்ற பிரபலமான கோவில்களில் மட்டும்  பாபா மிகவும் சக்தி வாய்ந்தவராக இருப்பார் என்று நினைப்பவர் பாபாவை அறியாதவரே. இத்தகைய இடங்களுக்கு செல்வது பக்தியை மென்மேலும் அதிகரிக்க செய்யும், அதில் சந்தேகமே இல்லை. அப்படி செல்ல இயலாதவர்கள் அதற்காக கவலை கொள்ளத்தேவையில்லை. காரணம், சாயி என்று அன்புடன் அழைத்தவுடன் பாபா தன் பக்தன் முன் தோன்றுவதாக உறுதியளித்துள்ளார். பக்தியுடன் பாபாவை வணக்கம் எல்லா இடமும் துவாரகாமாயியே. பாபா அங்கு நிச்சயம் வாசம் செய்வார். பக்தியுடன் நீங்கள் உங்கள் வீட்டில் வணங்கும் பாபாவின் படம் வெறும் காகிதம் அல்ல. சாக்ஷாத் சாயி பகவான் தான். நம்பிக்கையோடு அவரை வணங்குங்கள். ஓம் சாய்ராம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

கர்மத்தை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும்.

மனிதன் வாஸ்தவமாகவே சுதந்திரமுள்ளவனாக இருந்தால், இரவு பகலாக சுகத்திற்காக உழைப்பவன் ஏன் கஷ்டத்தை மட்டுமே அடைகிறான்? அவனுடைய விதி அவ்வளவு வ...