Sunday, April 9, 2017

தீய பழக்கங்களையும் ஒழுக்கக்கேடான செயல்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.



" எவன் ஒருவன் எப்போதும் என்னை அவன் மனத்தில் இருத்தி, எனக்கு நிவேதனம் செய்யாமல் உணவை ஏற்கமாட்டானோ, நான் அவனுடைய அடிமை. என்னிடமே வேட்கை கொண்டு மற்றெல்லாவற்றையும் துச்சமாகக் கருதுபவனுக்கும் நான் அதே போல் இருப்பேன்- ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா " 

எந்த உணவையோ பானத்தையோ சாப்பிடுவதற்கு முன்னால், பாபாவை நினைத்து, அவருக்கு சமர்ப்பித்த பிறகே சாப்பிடவேண்டும். பாபாவின் சிலையோ படமோ அருகில் இல்லையென்றாலும், கண்களை மூடி அவரை மனதுள் நினைத்து, அவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒருபோதும் தனித்து உண்ணக்கூடாது... ஏனெனில், நாம் ஒருபோதும் தனியாக இல்லை, பாபா எப்போதும் நம்முடனேயே இருக்கிறார். 

மேலும் பாபா  கூறுகிறார் : " நீ சாப்பிடுவதை எல்லாம் பக்கத்தில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொள்வாயென்று எனக்குத் தெரியும். ஆனால், நீ தனியாக இருக்கும்போது.... அதை என்னுடன் பகிர்ந்து கொள்கிறாயா ? நான் உன்னுடன் இல்லையா ? "

பாபாவின் இந்த வார்த்தைகள் விலைமதிப்பற்றவை. இச்சொற்களின் ஆழத்தைப் புரிந்துகொண்ட எவரும், ஒரு கவளம் உணவையோ அல்லது ஒரு மிடறு தண்ணீரையோ, பாபாவுக்கு அர்ப்பணிக்காமல் சாப்பிடமாட்டார்கள்.

உணவு மட்டுமல்லாமல், புலன் இன்பத்திற்கான நமது செயல்களையும் பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிடவேண்டும். உலக வாழ்வின் எந்தப் பொருளை அனுபவிக்கும் முன்பும், பாபாவின் பெயரை நினைவுகூர வேண்டும். இதுவே அவருக்கு அர்ப்பணிப்பதற்கு ஒப்பானது.இப்படி செய்வதின் மூலம், நமது தீய பழக்கங்களையும் ஒழுக்கக்கேடான செயல்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.

                                                      * ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

கர்மத்தை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும்.

மனிதன் வாஸ்தவமாகவே சுதந்திரமுள்ளவனாக இருந்தால், இரவு பகலாக சுகத்திற்காக உழைப்பவன் ஏன் கஷ்டத்தை மட்டுமே அடைகிறான்? அவனுடைய விதி அவ்வளவு வ...