"எனக்கு அஷ்டோபசார பூஜையோ ஷோடோபசார பூஜையோ வேண்டாம். எங்கு பக்தி பா(BHA)வம் இருக்கிறதோ அங்கு நான் இருக்கிறேன். நம்பிக்கை உள்ள பக்தியால் மட்டுமே எனது அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். கேட்காமலேயே கிடைக்கும். எனது பக்தனுக்கு இது ஒரு அற்புதம்." -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
பாபா தனக்கு ஷோடோபசார பூஜை வேண்டாம் என்று கூறியிருக்கிறார். பக்தர்களின் மீதிருந்த அன்பினால் இதையே பாபா பலமுறைகள் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார்.
ஷோடோபசார (16 உபசாரங்கள்) பூஜை கீழ்க்கண்டவாறு.
1.ஆவாஹனம் - தெய்வத்தை ஒரு விக்கிரஹத்திலோ, படத்திலோ எழுந்தருளும்படி வேண்டிக் கொள்ளுதல்.
2.ஆசனம்- தெய்வத்திற்கு ஓர் இருக்கை சமர்பித்தல்.
3.பாத்யம்- பாதங்களை அலம்பிக் கொள்வதற்குச் சுத்தநீர் சமர்பித்தல்
4அர்க்கியம்- அக்ஷதை, அருகம்புல், மலர்கள் இவற்றுடன் நீர் சேர்த்து அல்லது வெறும் நீர் சமர்ப்பணம் செய்தல்.
5.ஆசமனம்- உள்ளங்கையில் நீரேந்தி மூன்றுமுறை குடிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.
6.ஸ்நானம்-குளிப்பதற்கு நீர் சமர்ப்பணம் செய்தல்.
7.வஸ்த்ரம்- உடுத்துக்கொள்வதர்க்கு உடை சமர்ப்பணம் செய்தல்.
8.யக்ஞோபவீதம்- பூணூல் அணிவித்தல்.
9.கந்தம்- அரைத்த சந்தனம் இடுதல்.
10.புஷ்பம்- மலர்களை சமர்பித்தல்.
11.தூபம்- சாம்பிராணிப் புகைச் சூழச் செய்தல்.
12.தீபம்- விளக்கை காட்டுதல்.
13. நைவேத்தியம்- உணவு மற்றும் குடிநீர் சமர்பித்தல்.
14.தக்ஷிணா - தக்ஷிணை சமர்பித்தல்.
15.பிரதக்ஷினம் - வலம் வருதல்.
16. மந்திர புஷ்பம்- வேதமந்திரங்களைக் கோஷித்தவாறு இரண்டு கைகளாலும் தெய்வத்தின்மேல் பூமாரி பொழிதல் .
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil