Monday, July 31, 2017

பாபாவின் பாதுகாப்பில் இருக்கிறாய்

"ஒருவர் வாழ்வில், சத்குருவின் பாதுகாப்பு என்பது மிகவும் வலிமை வாய்ந்த படைக்கலமாகும். ஏனெனில், தன்  குழந்தைகளைக் காப்பதற்காகச் சத்குரு எந்த அளவுக்குச் செல்வார் என்பதை யாராலும் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது."

ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 30, 2017

ஸ்ரீ சாய் சத்சரிதம் படிக்க / பதிவிறக்கம் செய்ய download link

ஸ்ரீ சாய் சத்சரிதம்  படிக்க / பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்'ஐ க்ளிக் செய்யவும்.
https://drive.google.com/drive/folders/0B7G8udmBMXCMMzliMmU2NTEtOGM1OS00YzgwLWE5NjEtODA0YzE4NDM4MDAw?usp=sharing




சீரடி சாய்பாபா வாழ்ந்த போது, அவரை நேரில் பார்த்து ஆசி பெறும் பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் “சாய்சத் சரிதம்” நூலை பாராயணம் செய்தாலே பாபாவின் நேரடி அருள் நமக்குக் கிடைக்கும். 

யார் ஒருவர் ஸ்ரீசாய் சத்சரிதத்தை ஆத்மார்த்தமாக மனதுக்குள் உள்வாங்கிப் படிக்கிறாரோ, அவரது ஆத்மா பலம் பெறும். பாபாவுடனே வாழ்வது போன்ற நிலைக்கு அது அவரை உயர்த்தும்.

ஸ்ரீசாய் சத்சரிதத்தை ஓரிரு நாட்களில் படிக்க கூடாது. அவசரம், அவசரமாகவும் படிக்கக்கூடாது. நிதானமாக 7 நாட்களுக்கு படித்து முடிக்க வேண்டும். அது பாபா மூலம் நிறைவான பலன்களைத் தரும்.

ஏதாவது ஒரு வியாழக்கிழமை பாபாவை வழிபட்டு ஸ்ரீசாய் சத்சரிதத்தை வாசிக்கத் தொடங்குங்கள். அடுத்த புதன்கிழமை வரை 7 நாட்களில் படித்து முடித்து விடலாம். 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாயங்கள் விபரம் வருமாறு:-

முதல் நாள் அத்தியாயம் 1 முதல் 7 வரை
இரண்டாம் நாள் அத்தியாயம் 8 முதல் 15 வரை 
மூன்றாம் நாள் அத்தியாயம் 16 முதல் 22 வரை
நான்காம் நாள் அத்தியாயம் 23 முதல் 30 வரை
ஐந்தாம் நாள் அத்தியாயம் 31 முதல் 37 வரை
ஆறாம் நாள் அத்தியாயம் 38 முதல் 44 வரை
ஏழாம் நாள் அத்தியாயம் 45 முதல் முடியும் வரை

இன்றே ஸ்ரீசாய் சத்சரிதம் படிக்கத் தொடங்குங்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் வாழ்வில் நிறைய அற்புதங்கள், மாற்றங்கள் ஏற்படுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 29, 2017

குரு சரித்திர பாராயணம் செய்யவும்( link to download )

ஸ்ரீ குரு சரித்திரத்தை படிக்க / பதிவிறக்கம்  செய்ய கீழே உள்ள லிங்க்'ஐ  க்ளிக் செய்யவும்.






"ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்". -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


                                               


பாபா தனது பக்தரான ஸாதேவை குரு சரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறினார். ஒரு வாரம் பாராயணம் செய்தவுடன் ஸாதேயின் கனவில் பாபா தம் கையில் குருசரித்திரத்துடன் காணப்பட்டார். பின்னர் பாபாவிடம் இந்த காட்சியின் கருத்து என்ன?  குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா? என்று கேட்டார். அதற்க்கு பாபா "ஆம். குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்" என்று கூறினார்.

( பின் குறிப்பு ; ஸ்ரீ சாய் சத்சரிதமும் , ஸ்ரீ குரு சரித்திரம் இரண்டும் வெவ்வேறு நூல்கள். ஸ்ரீ குருசரித்திரம், ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு. ஒவ்வொரு சாய் பக்தரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். பல பக்தர்களுக்கு பாபா குருசரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறியுள்ளார் )



குரு கீதையின் (குரு சரித்திரம்) ஜபத்தால் ஒருவன் அளவற்ற பயனை எய்துவான். இது எல்லா பாவங்களையும் போக்குவது, எல்லா ஏழ்மையையும் நாசம் செய்வது. அகால மரணத்தை தடுப்பது, எல்லா சங்கடங்களையும் நாசம் செய்வது. யக்ஷர், ராட்சதர், பூதங்கள்,திருடர்கள்,புலி முதலிய பயங்களை போக்குவது. கொடிய குஷ்டம் முதலிய உபத்ரவங்களையும் தோஷங்களையும் நிவாரணம் செய்வது. குருவின் சந்நிதியில் என்ன பலனோ, அது படிப்பதாலேயே கிட்டும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 28, 2017

ஸ்ரீ சுவாமி சமர்த்தரின் வாழ்க்கை சரிதம்.



ஸ்ரீ சுவாமி சமர்த்தரின் வாழ்க்கை சரிதத்தை ஆங்கிலத்தில் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்'ஐ க்ளிக் செய்யவும்.

https://drive.google.com/file/d/0B7G8udmBMXCMVDRWbGpHcXRKVjNhQ1EyYWwwVFZPeUVvSmpZ/view?usp=sharing



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 27, 2017

சத்குரு



சாதாரண மனிதனுக்கு சத்குருவின் நடவடிக்கைகள் சில சமயங்களில் கொஞ்சம்கூட ஊகிக்கமுடியாததாக இருக்கும். சில நேரங்களில் குழந்தைகள் போலும், சில நேரங்களில் பைத்தியம் போலும், மற்றும் சில நேரங்களில் ஏதோ ஆட்க்கொள்ளப்பட்டவர்கள் போலும் அவர்கள் நடந்து கொள்வர். எப்படி இருந்தாலும், அவர்கள் எது செய்தாலும், அது மற்றவரின் நன்மைக்காகவே இருக்கும். சத்குருவின் செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை ஆன்மீகத்தில் மிகுந்த எழுச்சி பெற்றவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 26, 2017

நம்பிக்கையும் விசுவாசமும்



குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.
குரு, மந்திரங்கள், புனிதத்தலங்கள், தேவதைகள், வைத்தியர்கள்,-இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்.
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ,அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 25, 2017

உன்னிடம் எனக்கு கோபம் இல்லை.


உன்னிடம் எனக்கு கோபம் இல்லை. என் குழந்தைகளான நீங்கள் என்னிடத்தில் கோபித்துக் கொள்ளலாம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 24, 2017

பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.


வெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு  விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது ?. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 23, 2017

கவலைப்பட வேண்டியதில்லை

வேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்து, வருவதையும் போவதையும் சாயியின் கையில் ஒப்படைத்துவிட்ட பிறகு, நாம் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. பாபாவுடைய மஹத்தான சக்தியினுள் அடைக்கலம் புகுந்த நாம் ஏன் வீணாகக் கவலைப்படவேண்டும்?
சமர்த்த சாயியே சனாதன பிரம்மம். அவருடைய வார்த்தைகளே நமது தலையெலுத்தாகும். எவர் அவருடைய வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ, அவர் பூரணமான அனுபவத்தைப் பெறுவார். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 22, 2017

திடமான பக்தி

"குருமூர்த்தியிடம்  திடமான  பக்தியும் நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு எப்பொழுதும் இன்னல்களும் ஏழ்மையும் இருக்காது."   - ஸ்ரீ குருச்சரித்ரா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 21, 2017

பாபா இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.



பாபாவை நன்கு புரிந்துகொள்ள ஒவ்வொருவரும் பாபாவின் சக்தியைத் தானே அனுபவித்து உணரவேண்டும். பாபா எங்கே போய்விட்டார் ? பாபா இன்னமும் இவ்வுலகில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். மகாசமாதிக்கு முன்னரைவிட இப்போது இன்னும் அதிக சுறுசுறுப்பாக இருக்கிறார். உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த பக்தனும் இன்று இப்போதே பாபாவுடன் தொடர்பு கொள்ளக்கூடும். எவ்வளவு முறைகள் பக்தர்களிடம் பாபா தாம் அழிவற்றவர் என்பதைப் பறை சாற்றியிருக்கிறார்! தாமோதர் ராசனேயிடம் , " என்னை எண்ணிய மாத்திரத்தில், நான் வந்து விடுகிறேன் " என்றும், ஸ்ரீமதி தார்கட் அம்மையாரிடம் "தாயே! நான் எங்கும் போகவில்லை. என்னை எப்பொது எந்த இடத்தில் நினைத்தாலும், அப்போது அந்த இடத்தில் தோன்றுகிறேன்" என்றும், " என்னுடைய சமாதியிலிருந்தும் நான் இயங்குவேன்" என்றும் கூறிய நம் தேவனுக்கு வாரிசு என்றோ, அவருடைய மறு அவதாரமென்றோ யாராவது கூறிக் கொள்வது எங்ஙனம் தகும்?  தம்முடைய வாரிசு என்று பாபா எவரையும் குறிப்பிடவில்லை.
" பிறர் எண்ணங்களை அறிவது, பிறர் மனதிலுள்ளதை அறிவது, வெறுங்கைகளிலிருந்து சாமான்களை உண்டு பண்ணுவது, சாயிபாபாவை போன்று ஆடை உடுத்துவது, இவைகளால் மட்டும் பாபாவின் மறு அவதாரமாக ஆகிவிட முடியாது. கடவுளுக்கு என்று ஒரு பீடம் இல்லை. அப்படியிருப்பின் அது எப்போதும் காலியாக இருக்காது. அதைபோன்றே பாபாவின் பீடமும் ! பாபாவின் பூரண சக்தியும் நிறைந்து வேறு எந்த மனிதனும் காணப்படவில்லை. ஆபாந்தராத்மாவாக பாபா இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 19, 2017

பாபா உன்னுடனே இருக்கிறார்.


எங்கே பக்தர்கள் என்னுடைய பெருமையைப் பாடுகிறார்களோ, அங்கு கண் கொட்டாமல் விழித்துக்கொண்டிருகிறேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


Tuesday, July 18, 2017

பிச்சைக்காரனையும் அரசனாக்கும் வல்லமை

இன்பங்களால் பாபா உயர்ந்து போகவும் இல்லை. துரதிஷ்டங்களால் அவர் தாழ்ச்சியுறவும் இல்லை. அரசனும் ஆண்டியும் அவருக்கு ஒன்றே. அவருடைய கடைக்கண் பார்வை ஒன்றே பிச்சைக்காரனையும் அரசனாக்கும் வல்லமை படைத்தது.- ஸ்ரீ சாய் சத் சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 17, 2017

பாபாவிடமிருந்து எனக்கு ஏன் எந்த உதவியும் கிடைக்கவில்லை.?





நான் சிலகாலமாக மிகுந்த கஷ்டத்தில் இருந்து வருகிறேன். என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பாபா செவி சாய்க்காததால் பல சமயங்களில் என்னுடைய நம்பிக்கையை இழக்கிறேன். பாபாவின் உதவியை நாடி நான் பிரார்த்தனை செய்தபோதிலும், பாபா அதற்க்கும் செவி சாய்த்ததாகத் தெரியவில்லை. பாபாவிடமிருந்து எனக்கு ஏன் எந்த உதவியும் கிடைக்கவில்லை.? 

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன்  பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை ( முந்தைய கர்மாக்களை ) நன்கு அறிந்த பாபா, அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைபடுகிறது.  இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். ஒன்று, மற்றொன்று இல்லாமல் நிலைக்க முடியாது. ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை தினமும் படியுங்கள், பக்தர்களின் இதுபோன்ற கேள்விகளுக்கு பாபா தனக்கே உரித்தான முறையில் பதில் கூறியுள்ளார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 16, 2017

எல்லாவற்றையும் அளிக்கக்கூடிய தெய்வம்



ரிணானுபந்தம் அல்லது வேறு காரணங்களுக்காக பாபா, ஆயிரக்கணக்கானோரை  தம்மிடம் தருவித்துக் கொள்கிறார். அவர்களை அவ்வாறு தம்மிடம் வரச்செய்து பின்னர் அவர்களை தம்மை விடாமல் பிடித்துக் கொண்டு அவரிடமிருந்து மேன்மேலும் பலன்கள் பெறச் செய்வதன் பொருட்டு, பாபா தமது அசாதாரண சக்திகளை உபயோகித்து பலவித நலன்களை அருளுகிறார்.

பாபாவுடன் தொடர்பு கொண்டவர்களாலும் , அவருடைய மாகாசமாதிக்குப் பின் அவரைப் பற்றி சிந்திப்பவர்களாலும் பெரும்பாலும் பாபா ஒரு ஆசானாகக் கருதப்படவில்லை. பாபா ஒரு ஆசான் என்பது இப்போது அதிக அளவில் உணரப்படுகிறது. அப்படிக் கூறுவதும் சரியாகாது. அவர் ஒரு ஆசான் மட்டுமே அல்ல. அவர் ஒரு பயிற்சியாளர். அதற்கும் மேலாக, அண்டிவரும் பக்தனின் ஸ்வரூபத்தையே நல்ல முறையில் உருவாக்கும் பொறுப்பை ஏற்பவர். அதையும் விட அதிகமாகவும் கூறலாம். அவரிடம் தஞ்சம் புகுந்துவிட்டவர்களின் முன்னேற்றத்துக்கு, லௌகீகமாகவும் ஆன்மீக ரீதியாகவும், தேவையான எல்லாவற்றையும் அளிக்கக்கூடிய தெய்வம். அதற்கும் மேலாக, பாபா ஒரு ஆசானோ, பயிற்சியாளரோ மட்டுமல்ல. அவரே ஒரு பள்ளி அல்லது கலாசாலை, ஏன் முதுநிலை பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்புத் திட்டங்கள் அடங்கிய ஒரு பல்கலைக்கழகமே ஆவார். இவ்வாறாக முடிவில்லாது சிந்தித்தும் பார்க்க முடியாத நிலைகளுக்கு கொண்டு செல்லத் தக்கவர். ஒவ்வொரு சீடனுக்கும் ஏற்ற முறையில் இருந்து, ஒவ்வொரு மாணவனுக்கும் தனிப்பட்ட முறையில் தக்கதான விசேஷ கல்வி முறைகளை அளிப்பவர். ( பாபா என்ற ) ஒருவரே ஆசானாகவும், பயிற்சியாளராகவும், போதிப்பவராகவும், மேற்பார்வையாளராகவும், வெகு தொலைவிலுள்ள இடங்களிலும் உள்ள பல்லாயிரக் கணக்கானோருக்கு உணவளிப்பவராகவும் இருக்கக்கூடிய விசேஷமான சக்தி இதற்கு முன் காணப்படாதது, கேள்விப்படாது.

                                               * ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 15, 2017

பாபா உன்னை கைவிடமாட்டார்



பலவீனங்களைக்  கொண்டவர்களாகவும், எவ்வித  ஏற்றமும்  அற்ற  நாம் "பக்தி" என்றால்  என்ன என்பதை அறியோம். ஆனால் மற்றெல்லோரும் கைவிட்ட போதிலும்  சாயி  நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு  அறிவோம். எவர், அவர்தம்  பாதாரவிந்தங்களில்  சரணாகதி  அடைகிறார்களோ      
அவர்களின் முன்னேற்றம்  நிச்சயமானது. - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, July 14, 2017

மஹாபுருஷர்



ஷிர்டி ஸ்ரீ சாயிபாபாவுடைய உண்மையான மகிமையை உணர்வதும், புரிந்து கொள்வதும் மிகக் கடினம்.அவருடைய செயல்களும் சொற்களும் பெரும்பாலும் நூதனமாகவும், விந்தையாகவும் இருக்கும். அத்தகைய மஹாபுருஷர் ஒருவருடைய இயல்பை ஆழ்ந்த பக்தி, தீவிர விசுவாசம், உள்ளார்ந்த தூய்மை பொருந்திய ஒரு பக்தரால் மட்டுமே கண்டு கொள்ளக்கூடும். அத்தகைய பக்தர் பாபாவுக்கு மிகவும் நெருங்கியவர் ஆகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 13, 2017

பட்டினி


பட்டினியாய் இருப்பது நன்றன்று. மனம், உடல், ஆரோக்கியம் மற்றும் இறைவனை அடைய மிதமான உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு புனிதமான நாளில் எனது குழந்தைகள் பட்டினியாயிருப்பதை என்னால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது .- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 12, 2017

பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தர் யார் ?



வேறெதிலும் ஈடுபடாத  விசுவாசத்துடன், மனம், வாக்கு, உடல், செல்வம், அனைத்தயும் சாயி பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுபவரே  பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தராகிறார்.- ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 10, 2017

என்னை நம்புங்கள்



நான் சமாதியடைந்துவிட்ட போதிலும் என்னை நம்புங்கள் என்று பாபா சொன்னார். ஆனால், சாயி பக்தர் என சொல்லிக் கொள்ளும் நம்மில் பலருடைய நிலையைப் பாருங்கள்.

இன்ப நேரத்தில் பாபா இருக்கிறார் என்றும், துன்ப நேரத்தில் பாபா என்னை கைவிட்டார். அவர் இல்லை என்றும் நினைத்துக்கொள்கிறார்கள்.

பாபா இருப்பது உண்மை என்பதில் உறுதியாக இருந்தால், எந்த நிலையிலும் அவர்கள் நம்பிக்கை இழக்கமாட்டார்கள். நம்பிக்கை இழந்தவர்களுக்கு பாபா உயிரோடு இல்லை எனபது உண்மைதான். ஏனெனில், அவர்கள் பாபாவை தங்கள் மனதிலிருந்து கொன்று விடுகிறார்கள்.

நம்பிக்கை உள்ளவர்களோ, தங்கள் துயரத்திலும் திடமாக இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அவரையே சரணடைகிறார்கள்.

நம்பிக்கை இழக்கிற நிலை எதற்காக வருகிறது? என்பதை ஆராய்ந்து பார்த்தால், பாபாவின் உபதேசங்களை கடைப்பிடிப்பதில்லை. அவற்றை அசட்டை செய்கிறோம். மந்தமாக, உற்சாகமின்றி சோம்பியிருக்கிறோம்.   

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 9, 2017

என்னை உன் இதயத்தில் அமர்த்து



"எந்த புத்தகத்தையும் படிக்கவேண்டாம், என்னை உன் இதயத்தில் அமர்த்து "

ஒவ்வொரு குரு பூர்ணிமா தினமும் பாபா துவாரகாமாயியில் அமர்ந்திருப்பார். பக்தர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு புத்தகத்துடன் வந்து அதை பாபாவிடம் சமர்ப்பிப்பார்கள். அதைப் படித்து பயன் பெற வேண்டும் என ஆசிர்வதித்து பாபா அந்த நூலை அவருக்கு திருப்பியளிப்பார் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. சாதாரணமாக பாபா புத்திகத்தை கொண்டு வந்தவரிடமே  திருப்பியளித்து விடுவார். ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஒருவர் கொண்டுவந்த புத்தகத்தை மற்றொருவருக்கு என மாற்றியளித்துவிடுவும் செய்வார். அம்மாதிரி ஒரு குரு பூர்ணிமா தினம் 'ரேகே' என்ற பக்தர் தன் கையில் எந்த புத்தகமும் எடுத்து வராமல் வந்து விட்டார்.

பாபா : ( ரேகேயை நோக்கியவாறு ) : நீ செய்தது சரி. எந்தப் புத்தகத்தையும் படிக்காதே. இந்த புத்தகங்களில் 'ப்ரஹ்மனைக்' கண்டுவிடலாமென்று இந்த ஜனங்கள் எண்ணுகின்றனர்; ஆனால் அவர்கள் காண்பதோ ப்ரமா (குழப்பம்). நீ உன் இதயத்தில் என்னை அமர்த்திவிட்டால் போதும். அவ்வாறாக, இதயமும், மூளையும் ( அன்புணர்வும், அறிவுத்திறனும் ) ஒருமித்து செயல்படச்செய் .
          
                                             * ஜெய் சாய்ராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 8, 2017

அமைதியாக அமர்ந்திரு


நீ என் அருகில் அமைதியாக அமர்ந்திரு. ஆகவேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன் " என்று பாபா பக்தர்களிடம் கூறுவது உண்டு. அதாவது ரகசியமாகவும், மறைமுகமாகவும் பாபா பக்தனுக்கு தேவையானதை செய்துவிடுவார். இருப்பினும் அவரிடம் நம்பிக்கை வைத்தல் மிக அவசியம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, July 6, 2017

இனி உனக்கு கவலை இல்லை

"கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; என் பக்தர்கள் துக்கப்படுவதில்லை. ஷிர்டியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய துன்பத்திற்கு முடிவேற்பட்டுவிட்டது. நீர் தடங்கல்களெனும் கடலில் கழுத்துவரை மூழ்கியிருக்கலாம்; துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்துபோயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறுகிறாரோ, அவர் சுகத்தின்மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும்." - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, July 5, 2017

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு



நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது?. பாபாவிடம் சரணடைவது ஒன்றே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, July 4, 2017

அனுக்கிரஹமும் உபதேசமும்


பக்தர்களுக்கு அனுக்கிரஹமும் உபதேசமும் அளிப்பதில் பாபாவினுடைய சாமர்த்தியம் ஆலங்காணமுடியாதது. அதை அவர் பல வழிமுறைகளில் செய்தார். அவர்கள் அருகிலிருந்தாலும் சரி, வெகுதூரத்திலிருந்தாலும் சரி, பாபா ஹிருதயவாசியாக (இதயத்தில் வசிப்பவராக) பக்தர்களுடனேயே இருந்தார்.-ஸ்ரீ சாயி இராமாயணம் .

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, July 3, 2017

அன்னதானம் செய்யுங்கள்

உணவு சமயத்தில் பசியோடு எந்த ஜீவன் வருகிறதோ, மனிதனோ, பறவையோ, மிருகமோ,புழுபூச்சியோ எது வருகிறதோ அதுவே அதிதி. இவை யாவும் உணவை நாடுகின்றன. உன்னிடம் வரும் உண்மையான அதிதியை, நீ அதிதியாகக் கருதுவதில்லை. காக்கைக்கு உணவு அளிக்கும் சமயத்தில், சமைத்த சாதத்தை நிறைந்த அளவில் எடுத்துக்கொண்டு போய்  வீட்டுக்கு வெளியே வை. எந்தப் பிராணியையும் கூவி அழைக்காதே. வந்த எந்தப் பிராணியையும் விரட்டாதே. எந்தப் பிராணி உணவுகொள்ள வந்தாலும் அதைப்பற்றி மனதை அலட்டிக்கொள்ளாதே. இவ்வாறாக இலட்சம்  விருந்தினர்களுக்கு உணவளித்த புண்ணியத்தை நீ பெறுகிறாய்.  "பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!" - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, July 2, 2017

இறை நாமம்

மாயை மிகவும் பலமானது. ஆனால் இறைநாமமோ அதைவிட சக்தி வாய்ந்தது. இறை நாமம் ஒன்றே உய்யும் வழி. மாயையை வெல்ல இறைவனிடம் விஸ்வாசம் தவிர்த்து வேறொரு சாதனை இல்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, July 1, 2017

சாய்பாபாவின் தரிசனம் எனக்கு கிடைக்குமா


சாய்பாபாவின் தரிசனம் எனக்கு எப்பொழுதாவது கிடைக்குமா ? மேலும், என் அன்பிற்குரிய பாபாவுடன் நான் இரண்டறக் கலப்பது எப்போது ? 

 ஒரு சத்குருவை உடல் உருவில் தரிசிப்பது என்பது அவர் பூதஉடலில் இருக்கும்போது மட்டுமே சாத்தியம். அதன்பின்பு, ஆழ்ந்த தியானத்தின் மூலம் தமக்குள்ளேயே அந்தர்முகமாக அவரின் தரிசனத்தை ஒருவர் காண முடியும். ஸ்ரீ சாயியிடம் அவருடைய 'ஸ்வரூப தரிசனம்' தந்து உங்களுக்கு ஆசிகள் வழங்கும்படி எப்பொழுதும் வேண்டிக்கொள்ளுங்கள்.
பாபா அதி சூட்சுமமான வடிவில் இருக்கிறார். பிரபஞ்சம் முழுமையும் சக்தி வடிவமாய் எங்கும் பரவி நிறைந்து நிற்கிறார். கணக்கில்லாப் பிறவிகளின் மூலம் ஏற்படும் முன்னேற்றத்தால் ஒரு மனிதன் தன் ஸ்தூலத்திலிருந்து விடுபட்டு உடலற்ற சக்தி ரூபமான ஒரு நிலையை, தானே அடைந்து பாபாவுடன் இரண்டறக் கலக்க முடியும். இப்பரிணாம வளர்ச்சி முழுமையடைய நெடுங்காலம் ஆகலாம். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள்

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடம...