Sunday, August 20, 2017

நான் விரும்புவதில்லை

நான் உனது ஆசைகளை பூர்த்தி செய்ய ஆவலாய் இருக்கும்போது வீணாக மற்றவர்களை கேட்டு தெரிவது பயனில்லை. உனது எல்லா கேள்விக்கும் நானே விடையளிக்கத் தயாராக இருக்கும்போது மற்றவர்களைக் கேட்பதையும், அனாவசியமாகப் பிறரிடம் விசாரிப்பதையும் நான் விரும்புவதில்லை-ஸ்ரீ  ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எப்போதும் துன்பம் நேராது



" நீங்கள் எங்கிருந்தாலும்,எதைச் செய்தாலும் அவை எல்லாவற்றையும் நான் அறிவேன். உங்களை ஆட்டுவிப்பவன் நானே...எல்லாவற்றையும் படைத்துக் காப்பவனும் நானே...உலகத்தின் ஆதாரம் நானே..எவன் என்னை மனதார நினைக்கிறானோ அவனுக்கு எப்போதும் துன்பம் நேராது "   - ஸ்ரீ  ஷீரடி சாய்பாபா [மாண்புமிகு மகான்கள்]

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 19, 2017

சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்




 "இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்".
                                                                                  -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபா உயிருடன் இருந்த காலத்தில் ஒருவர் பாபா இறந்துவிட்டால் அத்துடன் அவர் ஆற்றிவரும் பணியும் அவரது செல்வாக்கும் மறைந்து விடும் என்று அஞ்சியபோது, " என்னுடைய சமாதியிலிருந்து தடிகள் கொண்டு அடிப்பேன்" ( மராத்தியில் ஹூன் தண்டே ஹநீன்), அதாவது அவருடைய உடலின் அழிவு அவருடைய ஆதிக்கத்தையும், செயலாற்றுவதையும் முடிவுக்குக் கொண்டு வராது, என பாபா பதில் கூறினார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 18, 2017

யார் எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுகிறார்



ஸ்ரீ சாயிபாபாவின் பாதங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். அவரே நம் அன்னையும் தந்தையும் ! அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அணைத்துக்கொள்வாள்; தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அரிவாள். உங்களுடைய கொடிய வியாதியையும் வழியையும்  அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது. எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். போய்  சாயியின் திருவடிகளைக் கெட்டியாகப் பற்றிக்கொள்ளுங்கள். யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்குக் கட்டுப்பட்டவர் அவர். ஆகவே துரிதமாகச் சென்று சாயி தரிசனம் செய்யவும். - ஸ்ரீ மத் சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 17, 2017

ஓம் சாயி

 


 "ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி" 

சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது. - ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 16, 2017

உணவு உண்ணும் முன் பாபாவை நினைக்கிறீர்களா?



சாய் பக்தர்களுக்கு ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம். அந்த தெய்வீக புத்தகம் சாக்ஷாத் சாயியின் ஸ்வரூபமே அன்றி வேறல்ல... சாய் சத்சரித்திரத்தில் இருந்து சில துளிகள்...

* பாபா எங்கும் உள்ளார். அவர் எந்த எல்லைக்கும் உட்பட்டவர் அல்ல. பாபா ஷீரடியில் மட்டுமே இருக்கிறார் என்பவர், உண்மையில் பாபாவை காணத் தவறியவரே.

*பாபாவின் படத்திற்கும் பாபாவுக்கு சிறிதளவும் வித்தியாசம் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பாபாவின் படமும் சாக்ஷாத் எப்போதும்  வாழ்கின்ற தெய்வீக அவதாரமான பாபாவே. இதில் சந்தேகமே வேண்டாம்.

* ஜோதிடம், ஜாதகம் ஆகியவற்றை நம்பாமல், தன்னை மட்டுமே நம்பும்படி பாபா கூறியுள்ளார். ஏனென்றால், தன்னிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்களின் காரியங்களை பொம்மலாட்டத்தை போன்று தானே நடத்துவதாக கூறியுள்ளார்.

* எப்பொழுதும் உணவு உண்ணும் முன் பாபாவுக்கு மானசீகமாகவாவது நிவேதனம் செய்யுங்கள், இது போன்ற பக்தர்களிடம் எப்பொழும் கூடவே இருப்பதாக கூறியுள்ளார். பட்டினியாய் இருப்பதை ( விரதம் ) இருப்பதை பாபாஒருபோதும் அங்கிகரிக்கவில்லை.

* நாய், பூனை, நோய்வாய்ப்பட்ட மனிதன் என நீங்கள் காணும் சகலமும் பாபாவின் ரூபமே. பசியாய் இருக்கும் எந்த ஜீவனுக்கும் உணவளிப்பவர் உண்மையில் அதை பாபாவின் வாயிலேயே இடுவதாக கூறியுள்ளார். 



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 14, 2017

இதுவே பாபாவின் போதனை



பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை. பாபாவின்  ஓரே போதனை பொறுமை, நம்பிக்கை - ஸ்ரீ சாயி சத்சரித்ரா - 10. 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 13, 2017

அபார சக்திவாய்ந்தவர் பாபா


பூரண நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பாபாவைச் சரண் புகுவதைத் தவிர ஒருவர் செய்யக்கூடியது வேறெதுவுமில்லை. அப்படிச் சரண்புகின், வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும், சூழலிலும் அகப்பட்டுத் தவிக்காமல் பத்திரமாகச் செல்ல துணைபுரியவும் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தேவைகளைக் கவனித்துக் கொள்ளவும் பாபா இருக்கிறார். கடவுள் என்றோ ஸத் புருஷர் என்றோ, அல்லது எப்படி வேண்டுமானாலும் அவரைச் சொல்லிக்கொள்ளுங்கள். அவர் அந்தர்யாமியாக உள்ளே விளங்குபவர்; ஆனால் எல்லோரையும் ஆட்கொள்ளக் கூடிய அபார சக்திவாய்ந்த உருவத்துடன் காணப்பட்டார். அவர் சன்னிதியில் சந்தேகங்கள், கவலைகள், பயங்கள் ஒன்றுக்கும் இடம் கிடையாது. பாபாவிடம் பூரணமாகத் தஞ்சம் புகுபவர், அதுவே சிறந்ததும், பத்திரமானதுமான ஓரே வழி என்பதை உணர்ந்து விடுகின்றனர்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, August 11, 2017

வீட்டில் நீங்கள் வழிபடும் பாபாவின் படம்



வீட்டில் நீங்கள் வழிபடும் பாபாவின் படத்திற்கும் , பாபாவிற்கும்  சிறிதளவும் வித்தியாசம் இல்லை. பாபாவின் படத்திற்கு செய்யும் நமஸ்காரம், பாபாவின் படத்திற்கு அணிவிக்கும் மாலைகள் உண்மையில் பாபாவிற்கு நேரிடையாக அணிவித்ததற்கு சமம்..

பம்பாய் பாந்த்ராவைச்  சேர்ந்த திருமதி டெண்டூல்கர் பாந்த்ராவில் தமது இல்லத்தில் வைத்திருக்கும் பாபாவின் திருவுருவப்படத்திற்கு இரண்டு மாதங்களாக ஒவ்வொரு தினமும் வகுள மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை குவியல், குவியலாக அணிவித்து வந்தார். பின்னர் அவர் ஷீரடிக்கு சென்றார்...

பாபா : காகா! ( ஹரிஸீதாராம் தீக்ஷித் ) இந்த இரண்டு, மூன்று மாதங்களாக நான் ஷீரடியில் இருக்கவே இல்லை. இந்த அன்னை என்னை வகுள மலர்களில் மூழ்க வைத்து திணற அடித்து விட்டார்; நான் மிகவும் திக்குமுக்காடிப் போய் நினைவையும் இழந்துவிட்டேன். இப்போது மெதுவாக பழைய  நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

மற்றொரு சம்பவம்....

பாலபுவா சுதார் என்ற பக்தர், முதன்முதலாக பம்பாயிலிருந்து 1917ம் ஆண்டில் ஷீரடிக்கு வந்து பாபாவை வணங்கினார்.

பாபா : ( வேறு ஒருவரை நோக்கி ) இவரை எனக்கு நான்கு ஆண்டுகளாகத் தெரியும்.

பாலபுவா இதற்கு முன்பு பாபாவை சந்தித்ததில்லை. ஆகவே வியப்பு. ஆனால் பம்பாயில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை பாபாவின் திருவுருவப் படத்தின் முன் விழுந்து நமஸ்காரம் செய்ததை நினைவு கூர்ந்தார்... 

                                           * ஜெய் சாயிராம் *
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 10, 2017

பாபா பாபா



எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்துடன் அதை கேட்டுக்கொண்டிருப்பார். அதில் சந்தேகமேயில்லை. உதாரணமாக, ரேகே என்ற பக்தர், ரயில் பயணத்தின் போது  இரவு முழுவதும் விழித்திருந்து பாபாவின் பஜனை செய்தார். அவர் ஷீரடிக்கு வந்தபோது பாபா கூறினார். "அவன் நேற்றிரவு முழுவதும் என்னைத் தூங்கவிடவில்லை. இரவு பூராவும் என் படுக்கையைச் சுற்றிலும் 'பாபா பாபா' என்று ஒலி கேட்டுக்கொண்டிருந்தது" என்றார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 9, 2017

சக்தி வாய்ந்த முறை

                                          


இன்று ஆத்மீகத்துறையில் புகழ்பெற்று விளங்கும் எண்ணற்றவர்களில். எவர் உண்மையில் பரிபூரணமானவர் என்று அறிந்துகொள்வது எளிதல்ல. மற்ற விஷயங்களைப் போலவே இவ்விஷயத்திலும், தம்மைப் பூரணஞானியென்று
கூறிக் கொள்ளும் போலிகள் ஏராளமாயுள்ளனர். இந்தச் சிக்கலிலிருந்து சாதாரண மனிதனைக் காப்பாற்ற, ஆத்மீகத் துறையில் சக்தி வாய்ந்த ஒரு முறையைக் கையாண்டனர். முற்காலத்தைச் சேர்ந்த பரிபூரணமான குரு ஒருவரின் வாழ்க்கைச் சரிதத்தையும் போதனைகளையும் பாராயணம் செய்வதால், சாதகனின் ஆத்மீக சக்தி விழிப்படைந்து, தக்க காலத்தில் கனவின் மூலமாகவோ அல்லது நனவில் ஏற்படும் காட்சியின் மூலமாகவோ, அவரது இயல்புக்கேற்றவரான ஒரு பரிபூரணமான குருவிடம் அவர் செலுத்தப்படுவார். தினமும் ஸ்ரீ சாய் சரிதத்தை\ ஒரு அத்தியமாவது படிப்பது சாய் பக்தர்களுக்கு மிகவும் உகந்தது. பகவான் ரமண மகரிஷியே  அறுபத்தி மூன்று நாயன்மார்களைப் பற்றிய பெரிய புராணம் என்ற நூலைப் பாராயணம் செய்ததால்,ஊக்கமுள்ள சாதகராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையை உணர்ந்த முனிவர் ஒருவரின் முன்னிலையானது, ஒருவரது சொந்த முயற்சிகளைக் காட்டிலும், பதினாயிரம் மடங்கு மேலானது என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், ஸ்ரீ ரமண மகரிஷியும் வலியுறுத்தினார்கள். ஆனால், ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்டகாலம் இருப்பதென்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. அத்தகையவர்களுக்கு மஹான்களின் சரிதங்களைப் பாராயணம் செய்வது சிறந்த மாற்றுவழியாகும். ஸ்ரீ ரமண மகரிஷியை அடிக்கடி தரிசித்துவந்த சாதகர் ஒருவர், தாம் ரமண மகரிஷியிடம், " ஐயா, நீங்கள் எங்களை ஒரு முனிவரின் முன்னிலையில் நீண்ட காலம் இருக்கும்படிக் கூறுகிறீர்கள். குடும்பப் பொறுப்புகள் உடைய எங்களில் பெரும்பான்மையோருக்கு அவ்வாறு செய்ய முடியவில்லை.  நாங்கள் என்ன செய்வது.? " ஏனென்று கேட்டார்.
மகரிஷி, " சத்சங்கம் என்றால் என்றும் அழியாததாகவும்  எங்கும் நிரம்பியதாகவும் இருக்கும் உண்மைப் பொருளோடு  தொடர்பு கொள்வதேயாகும். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் அதைப்பற்றி நினைத்திருப்பதே ஆகும். உண்மைப் பொருளை உணர்ந்த ஒருவரது வாழ்க்கையையும் போதனைகளையும் பக்தியுடன் படிப்பதும் சத்சங்கமே " என்றார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, August 7, 2017

பிரச்சனைகளை களைய, வேலை கிடைக்க, சாய்பாபா யந்திரம்




பக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி, ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும். சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார். அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார். சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி, கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை, நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை.  பாபாவிடம் முழு சரணாகதி அடைந்த ஒருவர், தேர்வு முடிவு, வேலை போன்ற இவ்வுலக வாழ்க்கைக்குரிய சாதாரண விஷயங்களை விடுத்து, பாபாவிடம் என்றும் மாறாத நம்பிக்கைக்கும், அவரது அருளாசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள். காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவைவிடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனைசெய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடுபேறு நிலையையும்) அளிப்பார் !
பாபா கூறியிருக்கிறார், "உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும். ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப் போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்" என்று. அதாவது, பாபாவின் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையே பிரதானம்..வியாபாரமயமாகிவிட்ட இந்த உலகத்தில், உங்கள் பிரச்சனைகளை களைய, வேலை கிடைக்க, குழந்தை பிறக்க என சாய்பாபா யந்திரம், மந்திரித்த எலுமிச்சை, சாய் பரிகார பூஜைகள்  என்று நிறைய ஏமாற்று வேலைகள் நடப்பதை நாம் காண்கிறோம். சாயியின் தர்பாரில் யந்திரம், பரிகாரம் என்று எதுவுமில்லை. பாபா தன் பக்தர்களிடம், தன்னை மட்டுமே நம்பும்படி கூறியுள்ளார். இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவது, பாபா மீதான நம்பிக்கை இல்லாமையே காட்டுகிறது. எப்பொழுதும், பாபா உங்கள் உடனே இருக்கிறார். தொடர்ந்து இவ்விதமாக எண்ணிவாருங்கள். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, August 6, 2017

விரதம் இருப்பதை பாபா விருப்பவில்லை




ஒரு தினம் பகல் ஆராத்திக்காக மசூதியில் மக்கள் குழுமியிருந்தனர். அக்கூட்டத்தில் நானும் ஒருவன். பாபா என்னை அழைத்து சாப்பிட்டுவிட்டு வரச்சொன்னார். அன்று ஏகாதசி என நான் கூறினேன். என்னுடன் வந்த நண்பர்கள் விரதம் அனுஷ்டித்து வந்ததால், நானும் அவர்களுடன் ஒத்துப் போக எண்ணினேன். ஆனால் நான் விரதம் இருப்பதை பாபா விருப்பவில்லை.
என் தோழர்களைக் காண்பித்து, "இவர்கள் பித்தர்கள். நீ வாடாவுக்குச் சென்று சாப்பிடு" என பாபா பணித்தார். ஏகாதசி தினத்தன்று சாப்பாட்டுக்கு அலைகிறேன் என முணுமுணுத்துக் கொண்டு வாடாவில் உணவளிப்பவர்  ஆரத்தி முடியும் வரையில் சாப்பாடு போட முடியாது எனக் கூறிவிட்டார். அவரும் மசூதிக்கு வந்தார். நானும் சாப்பிடாமல் திரும்பினேன். நான் சாப்பிட்டாகிவிட்டாதா என பாபா மீண்டும் வினவ அது ஆரத்தி வேலை ஆனதால் ஆரத்தி முடியும்வரை சாப்பாடு தள்ளிப் போடப்படலாமென நான் கூறினேன். ஆனால், பாபா விடுவதாக இல்லை. "நீ உன் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வரும்வரை, ஆரத்தி நிறுத்தி வைக்கப்பட்டு நீ வந்த பின்னரே தொடங்கும்" என அவர் கூறி விட்டார். வாடா உரிமையாளரும் பணிய வேண்டி வந்தது. எனக்கு உணவு பரிமாறினார். பின்னர் நான் ஆரத்திக்காக மசூதிக்கு திரும்பி வந்தேன். - ஸாந்தாராம் பலவந்த் நாச்னே

"நான் உன்னோடு தானே இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக்    கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினியை விட்டுவிடு.".
                                                                       - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, August 5, 2017

நான் உன் பக்கத்தில் இருப்பேன்



நான் உன்னுடனேயே (கண்ணுக்கு புலப்படாமல்) வருவேன். கவலை வேண்டாம். நான் உன் அருகிலேயே இருக்கிறேன். தாளிடப்பட்ட கதவுகள் என் நுழைவை தடுத்துவிட முடியாது. நானே அங்கு உன் இல்லாளையும் உன்னையும் காத்துக் கொண்டு அமர்ந்துள்ளேன். நீ எங்கிருப்பினும், என்னை நினை. நான் உன் பக்கத்தில் இருப்பேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. ( பாபா தனது பக்தனிடம் கூறியது.)

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


Friday, August 4, 2017

சாயி பேசுவதை கேட்கலாம்

 சமாதியிலிருந்தும் ஊக்கத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பேன். மஹாசமாதிக்குப் பின்னரும், நீ நினைத்த மாத்திரத்தில், நீ எங்கிருந்தாலும், நான் உன்னுடன் இருப்பேன். நேசத்துடன் ஒரு பக்தன் என்னை அழைத்த மாத்திரத்தில் நான் தோன்றுவேன்.  பயணம் செய்ய புகைவண்டி எதுவும் தேவையில்லை".
சாயிபாபா உடலோடு வாழ்ந்த போது பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தார். ஆனால் மஹாசமாதி அடைந்த பிறகும், அதே போன்ற பாதுகாப்பு கிடைக்குமா என சந்தேகப்படுபவர்கள் பாபாவை சரியாக புரிந்து கொள்ளாத ஜனங்களே. அப்படி சந்தேகப்படுவது பாபாவிடமும் அவரது திருமொழிகளிலும் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. சாயியிடம் மனதை ஒருமைப் படுத்தவேண்டும் என்ற ஆர்வம் பக்தனிடம் இருந்தால் போதும். இப்போதும் சாயி பேசுவதை கேட்கலாம், அவருடன் பழகலாம், இதற்கு அசாதாரணமான சமத்காரங்கள் தேவையில்லை. இடைவிடாத சாயி நாமஜெபம் ஒன்றே போதும். இதற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. இது விசுவாசம் பற்றிய விஷயமே ஆகும். விசுவாசம் திடமாக இருந்தால் பிரதிபலன் விரைவில் கிட்டும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, August 3, 2017

பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்

 "இங்கு வந்தால் உன்னை அடிப்பேன். வராதே! நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே!" 


ஒரு சமயம் புரந்தரே என்ற பக்தரின் மனைவி காலராவால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைக்கு உள்ளானால். வைத்தியர்கள் பரிசோதித்து நிலைமை மோசமடைந்ததையடுத்து கைவிட்டு சென்றனர். சாயி பக்தரான புரந்தரே அப்படி நம்பிக்கை இழந்துவிடுவாரா? தம்முடைய தெய்வமான சாயிநாதனிடம் பூரண நம்பிக்கையுடன் வீட்டிற்கு எதிரில் இருந்த மாருதி ஆலயத்திற்கு வந்தார். என்ன ஆச்சர்யம்! அங்கு அவர் முன் சாயிநாதன் தோற்றமளித்து, "அஞ்சேல்! உன் மனைவிக்கு ஊதியும், தீர்த்தமும் கொடு" என்று அபயமளித்து மறைந்தார். அவ்வாறே புரந்தரே தம் மனைவிக்கு உதியை நீரில் கலந்து அளித்தார். ஒரு மணி நேரத்தில் அவர் மனைவி நன்றாக மூச்சுவிட ஆரம்பித்தார். பின்னர் வந்த வைத்தியர் நோயாளியை பரிசோதித்து, "இனி பயமில்லை" என்றார்.
மற்றொரு சமயம் புரந்தரே ஷீரடிக்கு உடனே ஓடிச் செல்ல எண்ணினார். ஆனால் பாபா அவர் கனவில் தோன்றி, "இங்கு வந்தால் உன்னை அடிப்பேன். வராதே! நீ ஏன் அடிக்கடி ஷீரடி வரவேண்டும்? நான் உன்னிடமிருந்து விலகியா இருக்கிறேன். முட்டாளாக நடந்து கொள்ளாதே!" என்று எச்சரித்தார்.   (பாபாவிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்கள் எங்கிருந்தாலும் அவர்களுடன் பாபா எப்போதும் இருக்கிறார். இக்கட்டாண சூழ்நிலைகளில் நேரிலோ சூக்ஷம ரூபத்திலோ தோன்றி தனது பக்தனை காப்பாற்றுகிறார். பாபாவை நம்புங்கள்.ஓம் சாய்ராம் ) 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, August 2, 2017

பாபாவுக்கென்று விசேஷ பூஜை மற்றும் விரத முறைகள்



மிகவும் எளிமையான வழியையே பாபா போதித்தார். அதுவே நம்பிக்கை, பொறுமை. முதலில் பக்தர்களுக்கு பாபா ஒரு சத்குருவாக தோற்றமளித்தாலும், மிகுந்த நம்பிக்கை உள்ள பக்தர்களுக்கே தான் இறைவனின் அவதாரமாக வெளிப்படுத்திக்கொள்கிறார். மிகவும் வியாபாரமயமாகிவிட்ட இவ்வுலகத்தில் பாபாவின் பெயரில், சாய் ஹோமம், பாபா எந்திரம், பாபா பூஜை என ஏமாற்று வேலைகள் ஏராளம். சத்சரித்திரமே நமது வேதம். அதை நன்கு படித்தீர்களானால் நீங்கள் உணர்வீர்கள், குறிப்பாக,

( 1 ) பாபாவிடம் சரணாகதி அடைந்தால் போதும். அதாவது பாபாவே எல்லாம்  என்று உணர்ந்து கொள்வது. அப்படி உணர்ந்த பக்தர்களின் வாழ்வை அவர் பார்த்துக் கொள்வார்.

( 2 ) பாபாவுக்கென்று விசேஷ பூஜை முறைகள் எதுவுமில்லை. தன்னை நம்பும் பக்தனிடம் பாபா எப்போதும் இருக்கிறார். சந்தேகமே இல்லை.
( 3 ) ஜோதிடம் பார்ப்பது, காரியம் நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது, மந்திரம் சொல்வது எல்லாம் பாபா மீது நம்பிக்கை இல்லாமையையே காட்டும்.

( 4 ) விரதம் இருப்பதை பாபா ஒருபோதும் அனுமதித்ததில்லை. பசியோடு இறைவனை துதிப்பதை வேண்டாம் என்றே பாபா சொல்கிறார். இப்போது கடைகளில் கிடைக்கும் சாயி விரத புத்தகங்களில் உண்மையும் இல்லை, பாபாவிற்கு விருப்பமும் இல்லை.

( 5 ) பாபா கூறியதன் அடிப்படையில் , பக்தர்கள் நமக்கு அருளிய மந்திரம் "சாயி, சாயி " மட்டுமே. இதை உச்சரிக்கும் இடத்தில் எல்லாம் பாபா வாசம் செய்வார் என்பது அவரது உறுதிமொழி. வேறு மந்திரம் எதுவும் இல்லை.

( 6 ) பாபாவை ஒரு குறிப்பிட்ட கோவிலில் மட்டுமே மிகவும் சக்தி படைத்தவராக சிலர் முயற்சிக்கின்றனர். உண்மை அதுவல்ல.. பாபா மூன்றரை அடி உருவமல்ல, எங்கும் நிறைந்துள்ள இறை அவதாரம்.

தொடரும்...... ஓம் சாயிராம்.  

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, August 1, 2017

சாயி நிச்சயம் உதவுவார்



பாபா அளிக்கும் பயிற்சி, போதனைகள் எல்லாம் பெருமளவில் வித்தியாசமானவை. அவரை அண்டி வரும் ஒவ்வொருவருடைய  நிலைக்கு தக்கவாறு இருந்தன. இப்போதும் அவரை அண்டுபவர்களின் நிலைகளுக்கு ஏற்றவாறு அவை இருக்கும். பாபாவை ஒரு குரு, ஒரு ஸ்வரூபம், ஒரு தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கிவாருங்கள். இந்த பிறவியில் மட்டுமல்ல தனது பக்தர்களை ஒவ்வொரு பிறவியிலும் வழி நடத்துவதாக பாபா அடிக்கடி உத்திரவாதம் அளித்ததோடு, அதன் பொருட்டு அவர்களுடன் தாமும் மீண்டும் பிறப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஒவ்வொருவரும் சிறந்தவராகவே தம்மிடம் வர வேண்டுமென பாபா எதிர்பார்க்கவில்லை.  தன்னுடைய குற்றங்குறைகள் எல்லாவற்றிடனும் ஒருவர் பாபாவை அணுகலாம். பாபா அவரை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், பாபா மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம். உதாரணமாக "பாபா என்னுடன் இருக்கிறார். சாயி எனக்கு நிச்சயம் உதவுவார். நான் பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன்" என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்வது  மிகவும் நல்லது, மேலும் பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும்.
                                                        
                                                      * ஓம் சாயிராம் *

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள்

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடம...