Sunday, September 10, 2017

பாபா, பாபா



ஒருமுறை பாபாவின் பக்தரான 'ரேகே' தன்னுடைய நண்பரான 'அவஸ்தி'யை  பாபாவிடம் அழைத்துவர தீர்மானித்தார். பக்தர்கள் இருவரும் ஷீரடியை அடைந்து பாபாவின் பாதங்களைப் பணிந்தபோது, பாபாவின் மொழிகளை கீழே கவனியுங்கள். பாபாவின் பக்தர்களாகிய நாம் ஒருபோதும் தனிமையில் இல்லை. பாபா நம்முடனேயே இருக்கிறார். பாபா பாபா என்று நாம் எப்பொழுது உச்சரித்தாலும் அதை பாபா கேட்டுக்கொண்டே இருப்பார். நமக்கு வரும் எல்லா இடையூறுகளையும் அவரே அகற்றி நமக்கு நன்மை செய்கிறார். 

" நீ அழைத்து வந்திருக்கும் இந்த பைத்தியக்காரன் யார்? அவனுக்கு இங்கு என்ன வேலை?  நீ ஏன் இங்கு அழைத்து வந்தாய்?" என்று பாபா ரேகேயை கேட்டார். அத்துடனின்றி தம்மருகில் அமர்ந்திருந்த காகா தீக்ஷிதரைப் பார்த்து, " இதோ பார் காகா, இவனை (ரேகேயை) என் குழந்தை என்று அழைக்கிறேன். இவன் இங்கே தான் வருவது போதாதென்று இந்த பைத்தியக்காரனையும் அழைத்து வந்திருக்கிறான். அவனும் தன்னுடன் வரவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவே வந்துவிட்டுப் போகட்டும் என்றேன். ஆகவே புறப்படுவதற்கு முன்பே ஏற்பட்ட இடைஞ்சல் அகன்றது. மீண்டும் ரயில் அதிகாரிகளால் இவர்களுக்கு தொந்திரவு ஏற்பட்டது; இவர்களை ரயிலிருந்து இறங்கச் சொன்னார்கள். மேலதிகாரியிடம் 'என் குழந்தைகள் என்னைப் பார்க்க வருகிறார்கள். அவர்களைக் கீழே இறங்கவிடாதே,' என்று கூறவே இந்த இரண்டாவது இடைஞ்சலும் நீங்கியது. இவ்வளவும் செய்தேனே இவனும் இவன் நண்பர்களும் இரவு முழுவதும் என்னைத் தூங்கவே விடவில்லை. இரவு முழுவதும் 'பாபா! பாபா! என்று கூவிக் கொண்டே வந்தனர்!" என்றார்."
                                                  " பாபா, பாபா, பாபா "

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

அல்லா மா­லிக்

நாம் ஸாயீயை ஓர் அவதார புருஷராக ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில், அவரிடம் அவதார புருஷருக்குரிய லட்சணங்கள் அனைத்தும் உண்டு. ஆனால், அவரோ,  'நான...