Monday, September 11, 2017

அகில இந்திய சாயி சமாஜம்

Related image

சாயிநாதனுடைய சமகாலத்தில் வாழ்ந்த அப்துல்லா ஜான் என்பவர் 1936-ல் ஸ்ரீ நரசிம்ம சுவாமிஜியிடம் ( சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அகில இந்திய சாயி சமாஜம் நிறுவனர்) பாபா சமாதியடைந்த பின் ஷீரடிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதைக் குறிப்பிட்டார். ஸ்வாமிஜி செய்த புயல் போன்ற பிரச்சாரத்தின் பலன் 1940-க்கு மேல் ஷீரடிக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகி வரலாயிற்று. பாபாவின் புகழ் நாடெங்கும் பரவ மிகமுக்கிய காரணம் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜியே ஆவார். 

அகில இந்திய சாயி சமாஜம் உருவாக பாபா நிகழ்த்திய அற்புதம் :

ஒரு சமயம் சாயியைப் பற்றித் தாம் பிரச்சாரம் செய்ய விரும்புவதாக பாபாவின் பக்தரான ரேகேயிடம் தெரிவித்தார். ஆனால் அதற்குத் தேவையான நிதி-பொருள் இல்லையே! " பாபா பிரச்சாரத்தை விரும்பினால், அதற்குத் தேவையான பொருளையும் அவரே தருவார்" என்றார் ரேகே. தம் பொருட்டு பாபாவிடம் பிரார்த்திக்குமாறு ஸ்வாமிஜி ரேகேயிடம் கேட்டுக்கொண்டார்.  தாம் எதை விரும்பியும் பாபாவிடம் பிரார்த்திப்பதில்லை  என்று ரேகே பதிலளித்துவிட, " நானே பிரார்த்திக்கிறேன்" என்று கூறி ஸ்வாமிஜி அங்கே பாபாவின் படத்தின் முன் நின்று துதித்தார். " பாபா! தங்கள் கருணையால் எது சரி என்று தோன்றுகிறதோ, அதைச் செய்யுங்கள்" என்று ரேகேயும் பிரார்த்தித்துக் கொண்டார்.  ஒரு நாள், ஷீரடியிலேயே ஸ்வாமிஜியின் பிரார்த்தனைக்கு இணங்கினார் சாயி. ஸ்வாமிஜி சமாதி மந்திரில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த சமயம், தென்னிந்திய செட்டியார் போல் தோற்றமளித்த ஒருவர் அவரிடம் ஒரு சிறு பையை விட்டுச் சென்றார். அதை அவிழ்த்துப் பார்த்தபோது அதில் சுமார் ரூ.11,500/- நோட்டுகள் இருந்தன. மேற்கொண்டு என்ன செய்வது என்று கேட்டு ஸ்வாமிஜி ரேகேக்கு கடிதம் வரைந்தார். அந்த தொகையை ஷீரடி சாயி சமஸ்தானத்தில் ஒப்புவித்து அவ்வப்போது பிரச்சாரத்துக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து வரச் சொல்லலாமென்றும், அதற்கு அவர்கள் ஒப்பவில்லையாகில் ஸ்வாமிஜியே அதை வைத்துக் கொண்டு பிரச்சாரத்தை துவங்கலாம் என்றும் ரேகே எழுதினார். மதராஸி சாமியாரை அன்றைய சாயி சமஸ்தானம் நம்பவில்லை! ஸ்வாமிஜி சென்னை வந்து சாயி இயக்கத்தை தனி ஒருவராகவே நின்று துவங்கினார்.

                                            Related image
                                                     * ஓம் சாயிராம்*


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

துன்பம் ஒரு முடிவை அடைகிறது

ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதித் தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். அவ்விதமாக அவர்கள் மசூதி ப...