Thursday, September 21, 2017

எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுபடுவாய்.




" பாபா மஹா சமாதியடைந்த பின்பு கூட, நம்பிக்கையோடு முழு மனதுடன் செய்யப்படும் தமது அன்பான பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கிறார். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவர்களை காப்பாற்ற முன் வருகிறார். அவர்களுடைய கனவுகளிலும், காட்சிகளிலும் தோன்றி பூர்த்தி செய்கிறார் "

பாபாவின் மிகப்பெரும் பக்தர் பக்த நாராயணராவ். பாபாவின் வாழ்நாளில் ஷீரடிக்கு அவர் இரண்டுமுறை விஜயம் செய்து பாபாவின் தரிசனத்தைப் பெரும் நல் அதிர்ஷ்டம் பெற்றிருந்தார்.
பாபா 1918-ல் மஹா சமாதியடைந்தார். இதற்குப்பின் ஒரு வருடத்திற்குள் நாராயணராவ் நோயாளியாகி படுத்தார். மிகவும் கஷ்டப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட எவ்வித சிகிச்சைகளும் உரியநிவாரணத்தை தரவில்லை.

பாபா சமாதியாகி 3 ஆண்டுகளுக்கு பின் நாராயண ராவ் ஷீரடிக்கு விஜயம் செய்ய விரும்பினார். டாக்டர்கள் கொடுத்த மருந்துகள் அவருக்கு எவ்வித பலனையும் அளிக்கவில்லை. எனவே அவர் பிரார்த்தனை செய்துகொள்ளவும் கஷ்டத்திலிருந்து விடுபடவும் ஷீரடிக்கு போக விழைந்தார்.

ஆனால் எப்படியோ, அவரால் ஷீரடிக்கு செல்ல இயலவில்லை, இரவும் பகலும் பாபாவை அவர் தியானம் செய்ய ஆரம்பித்தார்.
ஒருநாள் இரவு பாபா அவரது கனவில் தோன்றினார். ஒரு குகையிலிருந்து வருவது போன்று காட்சி கொடுத்து கீழ்கண்ட மொழிகளை கூறி ஆறுதல் நல்கினார். " நாளைய தினத்திலிருந்து நீ முன்னேற்றமடைவாய். ஒரு வாரத்துக்குள் நீ எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுவாய்".

சரிநுட்பமாக ஒரு வாரத்தில் கனவில் பாபா உறுதி கூறியபடி நாராயணராவ் தனது வியாதியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்.

                                                   *ஓம் சாய்ராம்*
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவிடம் சரணடையுங்கள்

எனக்கு தெரிந்தது ஒன்றே, என் குரு போதித்த சத்யம். பற்பல சாதனைகளும், புத்தகங்களும் தேவையில்லை. தேவையானது குருவிடம் பூரண சரண், பூரண பிர...