Friday, September 22, 2017

வருவது வரட்டும், விட்டு விடாதே



" வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்." 

கேள்வி : சில வருடங்களாக நான் பாபாவையே வணங்கி, பாபாவின் பாதங்களையே தியானித்து .வருகிறேன். சமீபத்தில் வேறு ஒரு தெய்வத்தை / குருவை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதிலிருந்து அந்த குருவின் திருவடிகளையே பரவசத்துடன் நான் தியானிக்கத் துவங்கிவிட்டதை உணர்கிறேன். என்னுடைய கேள்வி இது தான். " நான் என்னுடைய நம்பிக்கையை மாற்றிக் கொண்டிருக்கிறேனா.?

பதில் : வெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது.என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு  விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது ?
 உங்கள் நம்பிக்கை பாதிக்கப்படவில்லை. உங்களுக்கு எது மிகவும் சிறந்தது என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளும் வகையில் நம்பிக்கையின் வெவ்வேறு அம்சங்களைத்தான் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பாபாவின் திருவாய் மொழியை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் .

"வருவது வரட்டும், விட்டு விடாதே. என்னையே  உறுதியாகப்  பற்றிக்கொண்டு எப்போதும்  நிதானத்துடனும், சதாகாலமும் என்னுடன்  ஒன்றியும்  இருப்பாய்" - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

துன்பம் ஒரு முடிவை அடைகிறது

ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதித் தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். அவ்விதமாக அவர்கள் மசூதி ப...