Saturday, September 23, 2017

ஸ்ரீ நரசிம்ம சரசுவதி சுவாமிகள்

                                                 
                                                        
                                                  ஸ்ரீ  நரசிம்ம சரசுவதி சுவாமிகள்
                                    (  ஸ்ரீ தத்தாத்ரேயரின்  இரண்டாவது  அவதாரம் )

                       

             ஸ்ரீ குரு சரித்திரம் :    https://youtu.be/btiiwFzj8eo      


                               
      ஸ்ரீ நரசிம்ம சரசுவதி அஷ்டகம் 

இந்து   கோடி  தேஜ  கிர்ண  சிந்து  பக்தவத்சலம் 
நந்தனாத்ரி  சூனுதத்த  இந்திராட்ச  ஸ்ரீகுரும் 
கந்த  மால்ய  அக்ஷதாதி  வ்ருந்த  தேவ  வந்திதம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம் 

மோஹ  பாச  அந்தகார  சாயதூர  பாஸ்கரம் 
ஆஹிதாக்ஷ  பாஹீஸ்ரீய  வல்லபேச  நாயகம் 
ஸேவ்ய  பக்த வ்ருந்த  வரத  பூயோ பூயோ  நமாம்யஹம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

சித்தஜாதவர்கஷ்டக  மத்தவார்ணாங்குசம் 
ஸத்வஸார  சோபிதாத்ம  தத்தஸ்ரீயாவல்லபம் 
உத்தமாவதார  பூத கர்த்ரு  பக்தவத்சலம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

வ்யோம  வாயுதேஜ  ஆப  பூமி  கர்த்ருமீச்வரம் 
காமக்ரோத  மோஹரஹித  ஸோம  சூர்யலோசனம் 
காமிதார்த்த தாத்ருபக்த  காமதேனு  ஸ்ரீகுரும் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

புண்டரீக  ஆயதாக்ஷ  குண்டலேந்து  தேஜஸம் 
சண்டதுரித  கண்டனார்த்த  தண்டதாரி  ஸ்ரீகுரும் 
மண்டலீக  மௌலி  மார்தாண்ட  பாசிதானனம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

வேத  சாஸ்திர  ஸ்துத்ய  பாதமாதிமூர்த்தி  ஸ்ரீகுரும் 
நாத  பிந்து  கலாதீத  கல்பபாத  ஸேவ்யயம் 
ஸேவ்ய  பக்த  வ்ருந்த  வரத  பூயோ பூயோ நமாம்யஹம் 
 வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

அஷ்டயோக  தத்வ  நிஷ்ட  துஷ்டஞான  வாரிதிம் 
கிருஷ்ணவேணி  தீரவாஸ  பஞ்சநதி  ஸங்கமம் 
கஷ்ட தைன்யதூர  பக்த  துஷ்டகாம்யதாயாகம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

நரஸிம்ஹ  ஸரஸ்வதீச  அஷ்டகம்ச  ய:  படேத்
கோர  சம்ஸார  சிந்து  தாரணாக்ய   ஸாதனம் 
ஸார   ஞான  தீர்க்க  ஆயு  ஆரோக்யாதி  ஸம்பதம் 
சாருவர்க   காம்ய  லாப  நித்யமேவய:  படேத்   

எப்பொழுதும் இந்த  நரசிம்ம  சரசுவதி  அஷ்டகத்தை  எவனொருவன்  படிப்பானோ  அவனுக்கு  ஞானமும்,  நீண்ட  ஆயுளும் ஆரோக்கியமும் , எல்லா செல்வங்களும்  நான்கு  விதமான  புருஷார்த்தங்களும்  பெற்று  சம்ஸாரமென்ற  கடலைத்  தாண்டுவதற்கு  ஏதுவாக இருக்கும்.

குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம்,ஸ்தவனமஞ்சரி (TAMIL PDF FILES) படிக்க விரும்பும் சாயி அன்பர்கள்  saibabasayings@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file  அனுப்பபடும்.

                                                
                                                   
                           குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர.
                                                 குரு சாக்ஷாத் பர பிரம்மா
                                                   தஸ்மை ஸ்ரீ குருவே நம:


குருவை முழுமையான நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை பொழியும். அப்படி சேவிக்கும் பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம். அவர்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேறும்.-ஸ்ரீ குரு சரித்திரம்.

ஸ்ரீ  குரு சரித்திரத்தை  நம்பிக்கையுடன் படிப்பவர்களின் துயரங்கள் அனைத்தும் விலகும். இது நம்  ஸ்ரீ  நரசிம்ம சரசுவதி சுவாமிகளின்   சாத்தியவாக்கு. சப்தாக பாராயணம் ( 7 நாட்களுக்குள் புத்தகத்தை படித்து முடித்தல்) செய்வதன் மூலம் எல்லா விதமான நேர்மையான கோரிக்கைகளும் நிறைவேறும்.

ஸ்ரீ குருச்சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை கவனியுங்கள்...

"பக்தவத்சலனான சத்குரு தன் கிருபையை எல்லா உயிர்களிடமும் எப்பொழுதும் பொழிவார் ! அவரைச் சேவித்தும் உன் துன்பங்கள் தீரவில்லை என்றால் உனக்கு அவரிடத்தில் முழுமையான பக்தி இல்லை. உன் மனதில் அவரை  சந்தேகிக்கிறாய். முழுமையான, உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு குருவின் அருள் பூரணமாக கிடைக்கும்."

                                           
                                                     *ஜெய் சாயிராம்*

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன்

பாபா அளிக்கும் பயிற்சி, போதனைகள் எல்லாம் பெருமளவில் வித்தியாசமானவை. அவரை அண்டி வரும் ஒவ்வொருவருடைய  நிலைக்கு தக்கவாறு இருந்தன. இப்போது...