Friday, October 13, 2017

நம்பிக்கையும் பொறுமையும் தேவைபடுகிறது.

                                                      

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன்  பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை ( முந்தைய கர்மாக்களை ) நன்கு அறிந்த பாபா, அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைபடுகிறது.  இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். ஒன்று, மற்றொன்று இல்லாமல் நிலைக்க முடியாது. ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை தினமும் படியுங்கள், பக்தர்களின் இதுபோன்ற கேள்விகளுக்கு பாபா தனக்கே உரித்தான முறையில் பதில் கூறியுள்ளார்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா உங்களிடம் இருப்பதை உணர்வீர்கள்

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடம...