Wednesday, November 1, 2017

சாயி நாமம் மலைபோன்ற பாவங்களையும் அழிக்கும்





"என்னுடைய நாமத்தை இடைவிடாது ஜபம் செய்துவந்தால், அக்கரை  சேர்ந்துவிடுவீர்கள்; வேறு உபாஸனை ஏதும் தேவையில்லை; அதுவே மோக்ஷத்தை அளிக்கும். எவர் என்னுடைய நாமத்தை சதாசர்வகாலமும் ஜபிக்கிறாரோ, அவர் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார் . எனக்கு அவர் மிகச்சிறந்த மனிதரைவிடச் சிறந்தவராகின்றார்." 
-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


சாயி நாமம் மலைபோன்ற பாவங்களையும் அழிக்கும்; சாயி நாமம் கோடிக்கணக்கான தீயநாட்டங்களை நாசம் செய்து நிர்மூலமாக்கும். சாயி நாமம் காலனின் கழுத்தை நெறிக்கும்; ஜனனமரணச் சூழலிலிருந்து விடுவிக்கும். இவ்வளவு மகிமை வாய்ந்த சாயிநாமத்தை பக்தர்கள் தினமும் பத்து நிமிடமாவது சொல்லவேண்டும்.
பிரயத்தனமாக , செய்கிறோம் என்ற உணர்வுடன் செய்யப்படும் நாமஜபம் மிக உன்னதமானது. பிரயத்தனம் இன்றிச் செய்யப்படும் நாமஜபமும் சோடைபோவதில்லை. எதிர்பாராமல் நாக்கில் தோன்றினாலும், நாமம் தன்னுடைய பிரபாவத்தை வெளிப்படுத்தும். நம்மைப் பரிசுத்தமாக்கிக்கொள்ள சாயி நாமஜபத்தை விட சுலபமான வழி வேறேதும் இல்லை.
சாயி நாமத்தை தியானம் செய்வதற்கு நீராடல் தேவையில்லை. நாமம் சடங்குகளுக்கும் சாஸ்திரவிதிகளுக்கும் உட்பட்டதன்று. சாயிநாமம்  என்றும் எப்பொழுதும் பவித்திரமானது. 

            " ஓம் சாயி  ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி "




http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

துன்பம் ஒரு முடிவை அடைகிறது

ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதித் தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். அவ்விதமாக அவர்கள் மசூதி ப...