Thursday, November 2, 2017

மனதில் கவலையைத் தேக்காதீர்



நாராயண் ஜனீ என்ற பக்தர், பாபா ஜீவிதமாக இருந்தபோது இரண்டு தடவைகள் தரிசனம் செய்திருந்தார். பாபா மஹாசமாதி அடைந்தபின் ஓர் ஆண்டு கழித்து நாராயண் ஜனீயை வியாதிகள் பிடித்துவிட்டன. உலக வழக்கிலிருந்த அத்தனை மருந்துகளும் உபசாரங்களும்  கையாளப்பட்டன. எதுவும் பலனளிக்கவில்லை.
துன்பத்தால் பீடிக்கப்பட்டிருப்பினும், ஜனீ இரவுபகலாக பாபாவை நினைத்து சாயிநாமத்தை சொல்லிக்கொண்டிருந்தார். குருராஜருக்கு மரணமும் உண்டோ? பாபா ஜனீக்கு தரிசனம் அளித்தார்.
ஜனீ ஒருநாள் இரவில் கனவு கண்டார். கனவில், சாயி பூமிக்குக் கீழேயிருக்கும் ஒரு நிலவறையிலிருந்து வெளிவந்து ஜனீக்கருகில் நின்றுகொண்டு அவரிடம் ஆறுதலாகப் பேசினார்,-
" மனதில் கவலையைத் தேக்காதீர்; நாளை உதயகாலத்திலிருந்து நிவாரணம் ஆரம்பிக்கும். எட்டு நாள்களில், நீரே சுயமாக எழுந்து உட்காருவீர்."
எட்டு நாள்கள் இவ்வாறு கழிந்தன. பாபாவின் திருவாய்மொழி எழுத்துக்கெழுத்து உண்மையாகியது. நாராயண் ஜனீ  மறுபடியும் எழுந்து நடமாட ஆரம்பித்தார். அவருடைய ஆனந்தத்திற்கு அளவேயில்லை.
பாபா பூதவுடல் தரித்திருந்தபோதுதான் உயிரோடிருந்தார் என்றோ, சமாதி ஆகிவிட்டதால் மரணமடைந்துவிட்டார் என்றோ, நாம் எப்படி நினைக்கவோ சொல்லவோ முடியும்? பாபா ஜனனமரணங்களுக்கு அப்பாற்பட்டவர்; நகரும் நகராப் பொருள்கள் அனைத்தும் நிறைந்த சிருஷ்டியையே வியாபித்திருக்கிறார் அல்லரோ! தன்னை நம்பிய பக்தனை எப்போதுமே அவர் கைவிட்டதில்லை. ஓம் சாயிராம்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

துன்பம் ஒரு முடிவை அடைகிறது

ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதித் தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். அவ்விதமாக அவர்கள் மசூதி ப...