Friday, November 24, 2017

சாயி எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார்



சாய் சத்சரித்திரத்தின் பாதை எளிமையானது;  நேர்மையானது. இது படிக்கப்படும் இடம் எல்லாம் துவாரகாமாயி! ஆகவே, சாயியும் அங்கு நிச்சயம் வாசம் செய்வார். எங்கு சாய் சத்சரித்திரம் படிக்கபடுகிறதோ, அங்கு சாயி எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார். பக்தியுடன் விசுவாசத்துடனும் மறுபடியும் மறுபடியும் படிக்கப்படும்போது அவர் சகல பா(BHA)வங்களுடனும்  அங்கு வாசம் செய்வார். ஆத்மானந்தத்தில் திளைக்கும் சாயியை மனத்திற்கொண்டு அனுதினமும் அவருடைய நாமத்தை ஜபித்துவந்தால், இதர ஜபங்கள், தியானம், தாரணை போன்ற கஷ்டமான சாதனைகள் எதுவும் செய்யத் தேவையில்லை. அவருடைய பாதங்களில் நம்பிக்கை வைத்து நித்திய நியமமாக உதியைப் பூசி, நீருடன் கலந்து அருந்துபவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும். நம்பிக்கையில்லாத தர்க்கவாதிகளும் அறிவுஜீவிகளும் வாதப்பிரதிவாதங்களில் நாட்டமுள்ளவர்களும் எதையும்   உரித்துப் பார்க்கும் சுபாவம் உள்ளவர்களும் பாபாவிடமிருந்து எந்தப் பலனும் பெறமாட்டார்கள்.  இங்கு காரணவாதமும்  தர்க்கமும் செல்லாது; புத்தியின் சாதுர்யமும் இங்கு எடுபடாது. உன்னதமான சிரத்தையே தேவைப்படுகிறது. சுத்தமான பக்தி உடையவரே பலன் பெறுவர்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

குருபாத பக்தி

இந்த ஜீவாத்மா (சரீரத்துள் அடங்கிய ஆத்மா) முக்குணங்களுக்கு (ஸத்துவம், இராஜஸம், தாமஸம் ஆகிய மூன்று குணங்கள்) அப்பாற்பட்டதே. ஆயினும், ம...