Thursday, December 14, 2017

பாபாவின் மீதான உங்களின் உண்மையான அன்பு

Image may contain: 1 person, smiling

சாய் பக்தர்களாகிய நாம் தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது பாபாவிற்காக ஒதுக்க வேண்டும். அன்றாட அலுவல்களுக்கு இடையே வெறும் பத்து நிமிடம் ஒதுக்குவது பெரும்பாலோருக்கு சவாலான காரியமே.
பாபாவின் படத்தின் முன்னர் அமர்ந்து அவரது நாமத்தை பத்து நிமிடம் சொல்லுங்கள். வேறு எந்த ஒரு சிந்தனையும் இல்லாது பாபாவையே உற்று நோக்கிய வண்ணம் இருங்கள். காலை அல்லது மாலை உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யுங்கள். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கலாம், மனம் அலைபாயும். ஆனால் பயிற்சியும், பாபாவின் மீதான உங்களின் உண்மையான அன்பின் மூலம் இது சாத்தியப்படும். நாளடைவில் பாபாவின் உருவம் எப்போதும் கண்களில் இருக்க, பாபாவின் நாமம் மனதில் ஒளித்துக்கொண்டே இருக்கும். இன்று மிகவும் புனிதமான நாள், எப்போதும் நம்மை காக்கும் தெய்வத்தின் நாம ஜெபத்தை இந்த நன்னாளில் தொடங்குங்கள். பாபாவின் அருள் இருந்தால் மட்டுமே சாயி நாமத்தை சொல்லமுடியும். தொடர்ந்து சாயி நாம ஜபம் செய்பவர்கள் நிச்சயமாக பாபாவால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே ! சந்தேகமே வேண்டாம். 
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 13, 2017

குருவை நம்பு

Image may contain: 1 person, closeup


குருவை பரிபூர்ணமாக நம்பியிருப்பது  ஒன்று மட்டுமே போதுமானது . அது ஒன்றே சாதனை.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.  http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 12, 2017

எப்போதும் உன்னை நினைத்திருப்பேன்,ரகுவீர் புரந்தரே, முதன் முதலாக 1909-ல் நான் சாயி பாபாவைப் பற்றி கேள்வியுற்று அவரை தரிசிக்க மனைவி, குழந்தை முற்றும் தாயாருடன் விஜயம் செய்தேன்.. பாபாவை சென்று தரிசித்தபோது, 
பாபா, "ஏழு நூற்றாண்டுகளாக அவருக்கும், எனக்கும் தொடர்பு உள்ளது என அவர் என் தாயாரிடம் கூறினார், மேலும் 2000 மைல்களுக்கு அப்பால் என் பக்தன் இருப்பினும் நான் அவனை மறக்க மாட்டேன்; எப்போதும் அவனை நினைத்திருப்பேன், அவனில்லாமல் ஒரு துளியும் உண்ண மாட்டேன்" என்றார். -ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்கள் அனுபவங்கள்,பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி. http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 11, 2017

நினைத்தது நடக்கும்இந்த உலகில் குருவின் வாக்கு ஒன்றுதான் மனிதனை காப்பாற்ற முடியும். குருவை நம்பியவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும். யார் யார் நினைவுகள் எப்படி இருக்குமோ, பயனும் அப்படி இருக்கும். குரு சொன்ன வார்த்தையில்  நம்பிக்கை வைத்தவனுக்கு நினைத்தது நடக்கும். -  ஸ்ரீ குரு சரித்திரம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 10, 2017

ஜோதிடம் பார்ப்பது, குறி கேட்பது


"உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்" -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

பக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை. குறிப்பாக காரியம் நடக்குமா நடக்காதா என்று குறி கேட்பதோ , ஜோதிடம் பார்ப்பது போன்றவை பாபா மீது நம்பிக்கை இல்லாததை காட்டும். நம்பிக்கை உள்ள எந்த பக்தனிடமும் பாபா நேரடியாக தொடர்பு கொள்வார். 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 9, 2017

சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்


வி.டி.பாவே என்பவர் தத்த சரித்திரத்தை முறையாக பாராயணம் செய்கையில் அவருக்கு ஒரு சமாதி காட்சியளித்தது. அந்த சமாதி சாயி பாபாவினுடையது என்பதை அவர் பின்பு கண்டுகொண்டார். ஆனால் நடமாடும் ஒருவரை குருவாகப் பெறாமல் ஒரு சமாதியை மட்டுமே குருவாகப் பெற்றது அவருக்கு திருப்தியளிக்கவில்லை. ஆகவே அவர் கேட்காம்பெட் ஸ்ரீ நாராயண மகாராஜிடம் செல்ல, அவர் ஒரு கனவு மூலம் பாவேயை மீண்டும் சீரடிக்கு சாயிபாபாவிடமே திருப்பி அனுப்பிவிட்டார். பாபாவின்  உடலின் அழிவு அவருடைய ஆதிக்கத்தையும், செயலாற்றுவதையும் முடிவுக்குக் கொண்டு வராது, என பாபா கூறியுள்ளதை நினைவில் கொள்ளவும்  (இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்). நம்பிக்கையுள்ள பக்தன்,  எல்லா இடத்திலும், பாபாவை காண்கிறான். ஸ்தூல உடலில் பாபா இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை.
         
                                               * ஜெய் சாயிராம் *http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 8, 2017

பாபா நம்முடனேயே இருக்கிறார்பாபாவின் பக்தர்களாகிய நாம் ஒருபோதும் தனித்து இல்லை. பாபா, எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் நம்முடனேயே இருக்கிறார். தொடர் நாமஜபம், சாயியை பற்றியே படித்தல், அவர் செய்த லீலைகளை நினைவு கூர்தல் போன்றவற்றில் ஈடுபட்டு கொண்டிருப்பதன் மூலம் பாபாவின் இருப்பை நாம் உணர முடியும். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, December 7, 2017

நான் உங்களை வசதி படைத்தவராக ஆக்கிவிடுகிறேன்"என்னுடைய பக்தர் பணத்தைத் தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."


மகல்சாபதி, எப்பொழுதும் பாபாவின் அண்மையிலேயே இருந்த பக்தர். மசூதியிலும், சாவடியிலும் ஒரு நாள் விட்டு மறுநாள் என மாறி மாறி பாபா இரவுகளைக் கழிப்பார்; இரண்டு இடங்களுக்குமே மகல்சாபதி பாபாவுடன் சென்று அவருடனேயே உறங்குவார். சதா சாயிபாதங்களிலேயே மூழ்கியிருந்த மகல்சாபதி, சங்கடத்தில் உழன்றவாறே வறுமையில் காலந்தள்ளினார். சாயி அவரை சிறிதளவும் செல்வம் சேர்க்க விடவில்லை.
தமக்கு தக்ஷிணை ரூபத்தில் வந்த பணத்தை சாயி பல பேர்களுக்கு விநியோகம் செய்தார். ஆனால், வறுமையில் வாடிக்கொண்டிருந்த மகல்சாபதிக்கு ஒருநாளும் ஒருபைசாவும் கொடுத்தாரில்லை.

ஒருசமயம், ஹம்ஸராஜ் என்னும் பெயர்கொண்ட தயாளகுணமுள்ள வியாபாரி ஒருவர், மகல்சாபதியின் கைகளில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். ஆனால், "சாயியின் அனுமதியின்றி நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மிகப்பணிவாக பணத்தைத் திருப்பி கொடுத்துவிட்டார்.ஆகவே ஹம்சராஜ் சாயியை அனுமதி வேண்டிக் கெஞ்சினார். ஆனால் மகல்சாபதியை ஒரு பைசாவைக்கூடத் தொட சாயி அனுமதிக்கவில்லை. சாயி சொன்னார், "என்னுடைய பக்தர் பணத்தைத் தேடமாட்டார். அவர் ஒருபொழுதும் செல்வத்தின் வைபவத்தில் மாட்டிக்கொள்ளமாட்டார்" என்று...

அனுதினமும் பாபா, ஒருவருக்கு ரூ.15, மேலும் ஒருவருக்கு ரூ.10 என அளித்துவந்தார். பல முறைகள் பாபா மகல்சாபதியிடம், "இந்த மூன்று ரூபாயைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவ்வாறு பெற்றுக் கொண்டேயிருங்கள். நான் உங்களை வசதி படைத்தவராக ஆக்கிவிடுகிறேன்" எனக் கூறியிருக்கிறார். ஆனால்  எப்போதுமே மகல்சாபதி மறுத்து வந்தார். அவருடைய பதில் இதுதான்; "எனக்கு இதெல்லாம் வேண்டாம். நான் தங்கள் பாதங்களுக்கு பூஜை செய்வது ஒன்றையே விரும்புகிறேன்." தானங்கள் பெறுவதைத் தவிர்த்து, கிடைத்ததை வைத்து திருப்தியடைவதை லௌகீகமான செல்வத்தைப் பெறுவதையும் தக்கவைத்துக் கொள்வதையும் விட உயர்வானதாகக் கருதினார்.
   
                                                     * ஜெய் சாய்ராம் *
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, December 6, 2017

நம்பிக்கையும் விசுவாசமும்குருவைத் தவிர வேறெவருக்கும் இம் மனிதவுடலுக்கு நற்கதியளிப்பது எப்படி என்பது தெரியாது. குரு தமது கரங்களால் தூக்குவதால் தான் ஜடம் போன்ற மனிதர்கள் மேலெழுப்பப்படுகிறார்கள்.
குரு, மந்திரங்கள், புனிதத்தலங்கள், தேவதைகள், வைத்தியர்கள், இந்த ஐந்திற்கும் ஒருவருடைய நம்பிக்கையை பொறுத்தே பலன்கள் அமையும்.
நம்பிக்கையும் விசுவாசமும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே சித்திகளின் பரிமாணமும் அமையும்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, December 5, 2017

சர்வ சக்திமான்தேகத்துடன் இருந்தபோதும், தேகத்தை விடுத்த பின்னரும் (மஹா சமாதிக்குப் பின்) 'நிராகார'ராக ( அருவமாக ) இருந்தும், எந்த வேளையிலும் அவர் 'ஸகார'ராகவும் ( உருவத்துடனும் ) இருக்க முடிந்தது.  இவ்வாறாக பாபா, உடலுடன் இல்லாவிடினும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டான  குருவாக தமது பக்தர்களுக்கு திகழ்கிறார். அவருடைய பழைய, புதிய பக்தர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர் தமது பழைய திருவுடன் தோன்ற முடிகிறது. தோன்றியும் வருகிறார். உடலுடன் இல்லாத ஒருவர் தங்களுக்கு ஏற்றவரல்ல என பலர் எண்ணினார்கள், எண்ணுகிறார்கள். ஆனாலும் பாபாவின் திருவருளால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களை ( நாம் எல்லோருமே ), தமது சரணங்களை நோக்கி வருமாறு பாபாவால் இழுக்கப்பட்டு வருகின்றனர்.

பாபாவின் செயல் வெளிப்படையானதோ அல்லது காரணங்களை விளக்கி வாதிப்பதோ அல்ல; பேச்சில்லாத, கண்ணுக்குப் புலப்படாத உட்புறமானதொரு தாக்கம். எல்லாவிதமான குறைகாணும் மனப்போக்கையும் அகற்றி, அறவே எல்லா சுவடுகளையும் துடைத்து, பதிலுக்கு ஒரு பணிந்து போகும் மனப்பாங்கை தோற்றுவிக்கிறது. அந்த வினயம், " நான் ஒரு புழுவே, தாங்களே சர்வ சக்திமான், கருணாமூர்த்தி, காத்தருளவேண்டும், என் பாதையை ஒளிமயமாக்குங்கள். தங்கள் கரங்களிலே அடியேனை ஒரு ஆதரவற்ற குழந்தையாக எடுத்துக்கொண்டு, தங்கள் சங்கல்பப்படி செய்யவேண்டும் " என இறைஞ்சும். அந்த கண்முன் தோன்றா குரு ஜீவித்துள்ளார், சக்தி படைத்தவர், இலக்கை நோக்கி அவரே வழிநடத்துவார் ( பாபா ஒருவராலேயே வழி  நடத்த முடியும் ) என்ற உணர்வு அம்மனிதனின் உள்ளத்தில் தோன்ற ஆரம்பிக்கும் நிலை அது. அத்தகைய ஒருவருடைய முந்தைய குருமார்கள்,அவரை அந்த அளவு உணர்வு பெறச் செய்ததில்லை. பாபா அந்த பக்தனை மேலே உயர்த்தி, தம்மை பல வடிவங்களில் தோன்றும், பல பெயர்களால் அழைக்கப்படும் ஒரே ஸ்வரூபம் அல்லது ஆதாரசக்தி எனக் கண்டுகொள்ளும்படி செய்துவிடுகிறார்.

                                               *   ஜெய் சாயிராம் *http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, December 4, 2017

உதியின் மகிமைதுகாராம் பார்கு, டிசம்பர் 9, 1936.

சாயி பாபாவுடன் நெருக்கமாக எனக்குச் சில அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. 1912-ல், கோதாவரி வாய்க்கால்களில் முதன் முதலாக நீர் திறந்துவிடப்பட்டபோது, இருபது மைல் தொலைவிலுள்ள காரஞ்ஜிகாம் என்ற கிராமத்துக்கு, வேலை தேடி பிழைப்பை நடத்துவதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்தேன். கிளம்பிய போதே, ஷிர்டியிலே கோபர்காம் சாலையில் நான் இருந்த போதோ, லெண்டிக்கு செல்லும்போதோ, அங்கிருந்து திரும்பும்போதோ வழியில் பாபா என்னை சந்தித்தார். அவர் என் கழுத்தைச் சுற்றி தம் கையை என் தோளில் போட்டுக்கொண்டு, "போகாதே" எனக் கூறினார். அவருடைய சொல்லை மதியாது நான் அந்த கிராமத்துக்குப் போனேன். நான் அங்கு போய்ச் சேர்ந்த தினம் எனக்கு காய்ச்சல் ஆரம்பித்தது, நீண்ட காலம் விடவே இல்லை. பிழைப்புக்கு வேலை செய்வது எனபது நடவாத காரியம் ஆனது; ஆகவே என்னை கவனிப்பதற்கு என் உறவினர்களின் தயவை நாடியிருக்கும்படி ஆனது. பதினைந்து நாட்கள் காய்ச்சலுக்கு பிறகு, ஷீரடிக்கு திரும்பிச் செல்லும் அளவுக்கு எனக்கு தெம்பு வந்தது. ஆனால் இங்கு வந்ததும் சுமார் 45 நாட்கள் ஜுரத்தால் அவதிப்பட்டேன். பிறகு பாபாவின் ஊதியைப் பெற்று வரும்படி என் தாயை அனுப்பினேன். அதை இட்டுக் கொண்ட மறு தினமே ஜுரம் நின்றது. - ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர் அனுபவங்கள். 
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, December 3, 2017

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படித்தால் வேண்டியது நிறைவேறும்சாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளையும்  தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.
பல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.
பெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.
உண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, December 2, 2017

ஆனந்த வெள்ளத்தில் மிதப்பார்கள்
இம்மசூதி நம்மைப் பெற்றெடுத்த தாய். இதன் படியேறியவர்கள் யாராயினும் கூட, அவர்கள் துக்க சாகரத்தில்  மூழ்கியிருந்தாலும், அவர்களுடைய சஞ்சித கர்ம வினை பலமானதாக இருப்பினும் அவர்களும் நிச்சயமாக ஆனந்த வெள்ளத்தில் மிதப்பார்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, December 1, 2017

அன்னதானம்"பசியால் வாடும் எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார் என்று அறிவாயாக!"- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் மீதான உங்களின் உண்மையான அன்பு

சாய் பக்தர்களாகிய நாம் தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது பாபாவிற்காக ஒதுக்க வேண்டும். அன்றாட அலுவல்களுக்கு இடையே வெறும் பத்து நிமிடம் ஒ...