Thursday, December 28, 2017

சாய்பாபாவின் தோற்றமும் நடையுடை பாவனை

No automatic alt text available.

சாயிபாபா ஏறக்குறைய ஐந்தரையடி உயரம் இருந்தார். அவர் பருமனுமல்ல, மெலிந்தும் இருக்கவில்லை. அவர் தங்கத்தைப் போன்ற மஞ்சள் நிறமுடையவராயிருந்தார். அவரது கண்கள் நீலநிரமானவை. அவை இருட்டில் கூட ஒளிரும். உண்மையில் அவைகளே பக்தர்களின் வியப்பைத் தூண்டுபவை. ஸ்ரீ சாயி சரனானாந்தாஜி பாபாவைப் பார்த்த சமயத்தில், பாபாவின் சில பற்கள் விழுந்திருந்தன. மற்றவை தூய வெண்மையாய் இருக்கவில்லை. பாபா ஒருபோதும் பல் தேய்த்ததே இல்லை. காலைவேளைகளில் சிறிது நீரைக்கொண்டு வாயைக் கொப்பளிப்பார். அவ்வளவே. அவர் காப்பியோ தேநீரோ அருந்தியதே இல்லை. புகைக்குழாயில் புகை பிடிக்கும் வழக்கத்தை எப்படி ஆரம்பித்தார் என்று அவர் ஒருபோதும் ஒருவரிடமும் கூறியதில்லை.
 பாபா எப்போதும் முரட்டு வெள்ளைத் துணியிலான உடைகளையே அணிந்தார். தமது தலையைச் சுற்றி எதற்க்காக துணியைக் கட்டிக் கொண்டிருந்தார் என்று எவருக்கும் அவர் கூறியதில்லை. அவர் தினந்தோறும் குளித்ததே இல்லை. அவருக்கு தோன்றும்போது குளிப்பார். சில சமயங்களில் ஆறு வாரங்கள் கூட அவர் குளிக்காமல் இருந்திருக்கிறார்.
அவர் போக்கில் விடப்பட்டால், பாபா மிகவும் குறைவாகவே பேசுவார். மிக அவசியமானால்தான் பேசுவார். அவர் ஒருபோதும் உரக்கச் சிரித்ததில்லை. மென்மையாக புன்னகை செய்வார். பெரும்பான்மையான நேரம் அவர் கண்களை மூடியவாறு இருப்பார்.
 மிக வியப்பிற்குரிய விஷயம் யாதெனில், பாபா ஒருபோதும் மசூதியிலுள்ள சுவரில் சாய்ந்து அமர்ந்ததே இல்லை. அவர் கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்தபோது கூட, சுவரிலிருந்து சில அங்குலங்கள் தள்ளியே அமர்வார். பகல் வேளைகளில் அவர் ஒருபோதும் படுத்ததே இல்லை. ஷீரடியில் உள்ள கோவில்கள் எதற்கும் அவர் சென்றதில்லை.
பாபாவுக்கேயுரிய சில குறிப்பிட்ட செய்கைகள் உண்டு. ஒவ்வொருநாள் காலையிலும் பாபா வேப்பமரத்துக்கு முன்னாலுள்ள குருஸ்தான் என்று அழைக்கப்படும்   இடத்துக்கு நடப்பார். பின்னர் அவர் மசூதிக்கு முன்னாள் நின்று, நான்கு முக்கிய  திசைகளிலும் தமது கைகளைத் திரும்பத் திரும்ப அசைப்பார். கண்ணுக்குத் தெரியாத ஜீவன்களுக்கு ஏதோ சைகை செய்வதுபோல் இருக்கும் அது. பிறகு மசூதியிலுள்ள தமது இருக்கைக்குத் திரும்புவார்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

சாயி நம்மைக் கைவிடமாட்டார்

                   பலவீனங்களைக்  கொண்டவர்களாகவும், எவ்வித  ஏற்றமும்  அற்ற  நாம் "பக்தி" என்றால்  என்ன என்பதை அறியோம். ஆனால் ...