Sunday, December 3, 2017

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் படித்தால் வேண்டியது நிறைவேறும்



சாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளையும்  தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.
பல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.
ஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்கி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.
பெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.
உண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார். 



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபாவின் மீதான உங்களின் உண்மையான அன்பு

சாய் பக்தர்களாகிய நாம் தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது பாபாவிற்காக ஒதுக்க வேண்டும். அன்றாட அலுவல்களுக்கு இடையே வெறும் பத்து நிமிடம் ஒ...