Monday, January 22, 2018

குரு தியானம்

Image may contain: 1 person

குருவுக்கு புறம்பாக வேறெதுமின்றி, எல்லாமே குருவாகத் தெரியுமாறு குருவை மாத்திரம் தியானத்தின் இலக்காகக் கொண்டு செய்யப்படும் தியானம், 'அனன்னிய அவதானம்' (மன ஒருமைப்பாடு) என்றழைக்கப்படும். குருவின் சொரூபத்தை தியானம் செய்யும்போது மனமும் புத்தியும் உறைந்து போகின்றன. ஆகவே, அவருடைய திருவடிகளுக்கு வணக்கம் செலுத்திவிட்டு சத்தமில்லாத மௌனத்தில் கரைந்துவிட வேண்டும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 21, 2018

தக்க சமயத்தில் பாபாவே உன்னிடம் வருவார்

  Image may contain: 1 person, standing

முடிவான ஆத்மானுபூதியை அடைவதற்காக, ஒரு குருவை அடைவது அவசியம் என்று பெரும்பான்மையான இந்து மத நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட மகான், தகுந்த குருவா அல்லவா என்பதை எப்படி அறிந்து கொள்ளுவது?  நாம் குருவைத் தேடி அலைய வேண்டாமென்றும், தக்க சமயத்தில் அவரே நம்மிடம் வருவார் என்றும் கபீர் கூறுகிறார். பகவான் ரமண மகரிஷியும், பன்முறை தம் பக்தர்களிடம், கடவுள், குரு, ஆத்மா ஆகிய யாவும் ஒன்றே என்பது உண்மையானாலும், சாதகன் ஒருவனுக்கு மனித உருவில் குரு தேவையாயிருக்கும் போது, இறைவனே அவனுக்கு அவ்வுருவில் காட்சியளித்து, அவன் மனத்தை உண்முகமாக்குகிறார் என்று கூறியுள்ளார்.
             சாய்பாபா, மனித உருவிலுள்ள குருவாயிருந்து, சாதகரைத் தம்மிடம் வரவழைத்துக் கொண்ட எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. எனினும் ஒரு சத்குருவை அடைந்த ஒவ்வொருவரும் இந்தப் பிறவியிலேயே பூரணத்துவம் அடைவார்கள் என்று நினைத்துவிடக்கூடாது.ஒவ்வொருவரும் தத்தமது பக்குவத்திற்கும், ஆழ்ந்த உள்ளார்வத்திற்க்கும்  தக்கவாறே பலன் அடைவார்கள். அவர்களில் பெரும்பாலோர் உள்வளர்ச்சி  பெற்ற பிறப்புக்களை அடைகிறார்கள். ஒவ்வொரு பிறவியுளும்  சத்குரு, மேலும் உயர்ந்த நிலைக்கு அவர்களைத் தூக்கி விடுகிறார். சிலருக்கு  இந்த வளர்ச்சி அவர்களாலேயே வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாததாக இருக்கலாம்.- ஆச்சார்யா E .பரத்வாஜா .  


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 17, 2018

சாயி நம்மைக் கைவிடமாட்டார்

                  Image may contain: 1 person, text
பலவீனங்களைக்  கொண்டவர்களாகவும், எவ்வித  ஏற்றமும்  அற்ற  நாம் "பக்தி" என்றால்  என்ன என்பதை அறியோம். ஆனால் மற்றெல்லோரும் கைவிட்ட போதிலும்  சாயி  நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு  அறிவோம். எவர், அவர்தம்  பாதாரவிந்தங்களில் சரணாகதி அடைகிறார்களோ அவர்களின் முன்னேற்றம்  நிச்சயமானது. - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 15, 2018

அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகும்

Image may contain: 1 person, smiling

வெவ்வேறு தெய்வங்களுக்கும், ஆன்மீக குருக்களுக்கும் மரியாதை செலுத்துவது என்பது நல்லது. ஆனால் எல்லா ஞானிகளும் கூறியுள்ளபடி, நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீதுதான் இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சிப் பயணத்தில் ஒருவர் தம் குருவைத் தனக்குள்ளேயே தேட வேண்டும். பாபா நமக்குள் உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு  விட்டால் வேறெங்கு செல்வது என்ற கேள்வியே ஏன் எழப்போகிறது?. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு தேவ, தேவதைகள் பின்னால் ஓடுவதையும் வெவ்வேறு கோயில்களுக்கு அலைவதையும் விடுத்து பாபா ஒருவரையே உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.
தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும்.  
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 14, 2018

கர்மவினை

Image may contain: 1 person, smiling

ஆன்மிகப் பாதையில் முன்னேற முயற்சிக்கும் லெளகீக (சாதாரண) மக்களை கர்மவினை, சிறிய மற்றும் பெரிய சம்பவங்களை தடைகளாக ஏற்படுத்தி, அச்சம்பவங்களின் பிடியில் மனதை சிக்க வைத்து வாழ்வின் சில காலத்தை விழுங்கி விடுகிறது. இச்சம்பவங்கள் நமது சக்தியையும் அறிவின் எல்லையையும் மீறி வாழ்க்கை துன்பங்களால் வெவ்வேறு ரூபங்களில் நம்மை கட்டுப்படுத்துகிறது.  இதற்காக பாபாவால் அறிவுறுத்தப்பட்ட தாரக மந்திரமே "நம்பிக்கை" மற்றும் "பொறுமை" ஆகும்.
லெளகீக (சாதாரண) மக்களுக்கு பாபாவால் அளிக்கப்பட்ட ஒரே சக்தி துன்ப வேளையில் பொறுமை காத்து, பாபாவின் மேல் நம்பிக்கை சிதறாமல் போராடுவதுதான்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 13, 2018

நம்பிக்கையுடன் கூடிய பொறுமை

Image may contain: 1 person

எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன் பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லா செயல்களையும் அந்த பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள். பக்தருடைய முன்வினைகளை (முந்தைய கர்மாக்களை) நன்கு அறிந்த சத்குரு அமைதியாக பக்தரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திலும் பாபாவின் ஆசிகளின் பலனை ஒருவர் பெறவேண்டுமானால் அதற்கு மிகுந்த நம்பிக்கையும், பொறுமையும் தேவைப்படுகிறது. இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 12, 2018

சாய்பாபா யந்திரம், பரிகார பூஜைகள்


Image may contain: 1 person

பக்தர்களின் நம்பிக்கை, நேர்மையான பக்தி, ஆன்மீக வளர்ச்சிக்கேற்ப, சாய்பாபா அளித்திடும் அனுபவங்கள் பக்தருக்கு பக்தர் மாறுபடும். சில முக்கியமான நிகழ்வுகள் மூலம் பாபா சில பக்தர்களுக்கு உதவுகிறார். அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார மேம்பாட்டை அளிக்கிறார். சில பக்தர்களுக்கு கனவுகளில் தோன்றி, கனவுகளில் செய்திகள் சொல்லி சிலரது பக்தியை அதிகப்படுத்துகிறார். முழுமையான நம்பிக்கை, நேர்மை மற்றும் பக்தியுடன் சாயிபாபாவை நோக்கி யார் பிரார்த்தனை செய்தாலும் பாபா அவர்களுடன் நேராக பேசுகிறார், அவர்கள் இடைத் தரகர்களின் உதவியை நாடத் தேவையில்லை.  பாபாவிடம் முழு சரணாகதி அடைந்த ஒருவர், தேர்வு முடிவு, வேலை போன்ற இவ்வுலக வாழ்க்கைக்குரிய சாதாரண விஷயங்களை விடுத்து, பாபாவிடம் என்றும் மாறாத நம்பிக்கைக்கும், அவரது அருளாசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள். காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவைவிடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனைசெய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடுபேறு நிலையையும்) அளிப்பார் !
பாபா கூறியிருக்கிறார், "உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும். ஆனால் உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப் போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்" என்று. அதாவது, பாபாவின் மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கையே பிரதானம்..வியாபாரமயமாகிவிட்ட இந்த உலகத்தில், உங்கள் பிரச்சனைகளை களைய, வேலை கிடைக்க, குழந்தை பிறக்க என சாய்பாபா யந்திரம், மந்திரித்த எலுமிச்சை, சாய் பரிகார பூஜைகள்  என்று நிறைய ஏமாற்று வேலைகள் நடப்பதை நாம் காண்கிறோம். சாயியின் தர்பாரில் யந்திரம், பரிகாரம் என்று எதுவுமில்லை. பாபா தன் பக்தர்களிடம், தன்னை மட்டுமே நம்பும்படி கூறியுள்ளார். இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவது, பாபா மீதான நம்பிக்கை இல்லாமையே காட்டுகிறது. எப்பொழுதும், பாபா உங்கள் உடனே இருக்கிறார். தொடர்ந்து இவ்விதமாக எண்ணிவாருங்கள். மற்றவற்றை பாபா பார்த்துக்கொள்வார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 11, 2018

என்னை நம்புங்கள்

No automatic alt text available.

நான்  உங்களிடத்து இல்லையென்பதாகக்  கவலை கொள்ளாதீர்கள். ஆனால்  என்னையே எப்போதும் நினைவு  கூறுங்கள். உள்ளம் உயிர் இவற்றால்  என்னை நம்புங்கள். அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள். - ஸ்ரீ ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 10, 2018

வீட்டில், பாபாவின் வழிபாடு எந்த முறைப்படி செய்யப்பட வேண்டும் ?

Image may contain: 1 person, smiling


வீட்டில், பாபாவின் வழிபாடு எந்த முறைப்படி செய்யப்பட வேண்டும் ?

ஒரு கோயிலில் பாபாவை வழிபடுவதற்கும் வீட்டில் வழிபடுவதற்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. வீட்டில் வழிபடப்படும் பாபாவின் விக்கிரகத்திற்கு பொதுவாக ' பிராண பிரதிஷ்டை ' செய்வதில்லை. அவரது உருவப் படங்கள்தான் பொதுவாக வழிபடப்படுகின்றன. வீட்டில், பாபாவை வழிபடும் முறையை எளிதாக வைத்துக் கொள்வது அவசியம். தேவையான பக்தியை உள்ளுக்குள் உருவாக்காவிட்டால், பெரும்பாலான சடங்குகளும், சாங்கியங்களும் செயற்கையானதும் பயனற்றதும் ஆகும்.
 சத்குருவின்மீது அசையாத நம்பிக்கையுடனும் உணர்வுபூர்வமாகவும் ஒரே ஒரு மலரை அர்ப்பணித்தால் கூட போதுமானது. நாம் வீட்டை விட்டு ஏதோ காரணமாக வெகு தூரத்தில் இருந்தாலும், ஓர் இடத்தில் அமர்ந்தவண்ணம் வீட்டில் செய்யும் வழிபாட்டைப் போலவே மானசீகமாக அப்பொழுதும் பாபா வழிபாட்டை நாம் செய்யலாம். அதேசமயம் வீட்டில் இவ்வழிபாட்டை வேறு யாரையாவது செய்யச் சொல்லலாம்.  வெவ்வேறு மதங்கள், சாதிகள், மத நம்பிக்கைகள், சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற பேதங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் பாபா.
சத்குருவினுள் எல்லா தெய்வங்களும் அடங்கியுள்ளன என்று வேதங்கள் கூறுகின்றன. எனவே மற்ற தெய்வங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பாபாவை மட்டுமே தெய்வமாக வணங்குவதில் தவறேதுமில்லை. அல்லது மற்ற தெய்வங்களை வணங்குகின்ற முறையிலேயே பாபாவையும் வணங்குவதிலும் தவறு ஏதுமில்லை. சீக்கிய மதத்தினர் தங்கள் குருக்களுக்காக மகிழ்ச்சியுடன் உயிர்த்தியாகம் செய்தனர். காரணம் சத்குருவானவர் நிரந்தரமானவர்  என்றும் தம்மோடு எப்போதும் இருப்பவர் என்றும் அவர்கள் உளமார நம்புகின்றனர். எனவே பாபாவின்பால் அசைக்கமுடியாத தீவிர நம்பிக்கை கொண்டிருப்பது என்பதே முற்றிலும் தேவையான ஒன்று.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 9, 2018

பயங்கள், சந்தேகங்கள், கவலைகள்

Image may contain: 1 person

பூரண நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பாபாவைச் சரண் புகுவதைத் தவிர ஒருவர் செய்யக்கூடியது வேறெதுவுமில்லை. அப்படிச் சரண்புகின், வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும், சூழலிலும் அகப்பட்டுத் தவிக்காமல் பத்திரமாகச் செல்ல துணைபுரியவும் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் தேவைகளைக் கவனித்துக் கொள்ளவும் பாபா இருக்கிறார். கடவுள் என்றோ ஸத் புருஷர் என்றோ, அல்லது எப்படி வேண்டுமானாலும் அவரைச் சொல்லிக்கொள்ளுங்கள். அவர் அந்தர்யாமியாக உள்ளே விளங்குபவர்; ஆனால் எல்லோரையும் ஆட்கொள்ளக் கூடிய அபார சக்திவாய்ந்த உருவத்துடன் காணப்பட்டார். அவர் சன்னிதியில் சந்தேகங்கள், கவலைகள், பயங்கள் ஒன்றுக்கும் இடம் கிடையாது. பாபாவிடம் பூரணமாகத் தஞ்சம் புகுபவர், அதுவே சிறந்ததும், பத்திரமானதுமான ஓரே வழி என்பதை உணர்ந்து விடுகின்றனர்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 8, 2018

பாபா நமது அருகிலேயே எப்போதும் இருக்கிறார்

Image may contain: 1 person, smiling


பாபா எப்போதுமே வாழ்கின்றார். ஏனெனில் பிறப்பு இறப்பு என்ற இருமையையும் கடந்தவர் அவர். எவனொருவன் ஒருமுறை முழுமனத்துடன் அவரை நேசிக்கிறானோ, அவன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனைத் திருப்திப்படுத்துகிறார். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, January 7, 2018

சாயி சிந்தனை

No automatic alt text available.


நம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம். மகாராஜரான பாபாவுக்கு உடனே தெரிந்துவிடும்.    
நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றை அறவே விடுத்து, பாபாவின் பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால், மனம் ஒருமுகப்படுத்தல் விருத்தியடையும். ஒருமுகப்பட்ட மனத்தில் சாயி சிந்தனை பின்தொடரும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, January 6, 2018

குருவே வழிகாட்டி

Image may contain: 1 person, indoor

"உன் குறிக்கோளை அடைய குருவே நேரடியாக அழைத்துச் செல்வார். வழிகாட்டி இல்லையென்றால் நீ காணாமல் போகலாம்." 
                                                          - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, January 5, 2018

குருவருள் செய்யும் அற்புதம்

Image may contain: one or more people

"ஒரு துளி ஈரமும் இல்லாது உலர்ந்து காய்ந்துபோன மரமாயினும், ஏதும் செய்யாமலேயே பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்கச் செய்வதே குருவருள் செய்யும் அற்புதம்."

                                                                                 -    ஸ்ரீமத்ஸாயிராமாயணம்.

                                                                                           
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, January 4, 2018

பாபா உங்கள் அண்மையில் இருப்பதை உணர்வீர்கள்

Image may contain: 1 person, text

சிலருக்கு பாபாவின் தரிசனம் தொடர்ந்து கிடைக்கிறது ( ஷீரடியிலோ அல்லது வேறு பாபாவின் ஆலயங்களிலோ). ஆனால் பாபாவின் மீது அதிகமான அன்பு வைத்தும் பாபாவின் கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு அமைவதில்லை. பாபா என்னை ஒதுக்கி வைத்திருக்கிறாரா? 

பாபாவின் குழந்தைகளான நம்மை எப்போதும் அவரது கண்காணிப்பிலேயே வைத்துள்ளார். எப்போது ஒதுக்கி வைத்ததில்லை. பாபாவின் கோவிலுக்கு செல்ல முடியாததற்கு வருத்தமும் பட தேவையில்லை. தன்னை  பக்தர்களுக்குப் புரியவைப்பதற்கு  பாபா கையாண்ட உபாயங்கள் எத்தனை எத்தனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்குமேற்ப  பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார்.  ஒருவரை ஷிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பிவிடுவார். மற்றவரை ஷிர்டியிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச்செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களைப் பாராயணம் செய்யச் சொல்வார். பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாஸங்களில் ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்து கொண்டிருக்கும் போதும், உறங்கும்போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள் ! இச்செயல்களின் நோக்கம் இதுவே... எல்லாமே பாபாவின் செயல்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, January 3, 2018

என் வயது லக்ஷக்கணக்கான ஆண்டுகள்.

                   Image may contain: 1 person, sitting and beard

நான் பர்வர்திகார் ( கடவுள் ). நான் வசிப்பது ஷீரடி மற்றும் எங்கும். என் வயது லக்ஷக்கணக்கான ஆண்டுகள். ஆசிகள் வழங்குவதே என் தொழில். எல்லா பொருட்களும் என்னுடையவை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் நான் அளிக்கிறேன். கங்காபூர், பண்டரிபுரம், மற்ற எல்லா இடங்களிலும் நான் இருக்கிறேன். இவ்வுலகின் ஒவ்வொரு துகளிலும் நான் உள்ளேன். இவ்வையகம் முழுவதும் என்னுள் அடக்கம். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, January 2, 2018

வாழ்நாள் முழுவதும் குருசேவை செய்வோம்

Image may contain: 1 person


ஸத்குருவின் அனுக்கிரகமின்றி பிரம்மத்தை அறிய முடியாது.
குருவினுடைய பாதகமலங்களில் ஐந்து பிராணன்களையும் பரிபூரணமாக சரணாகதி செய்துவிட வேண்டும்.
குருவின் (பாபாவின்) சந்நிதியில்
நம்...
தலை வணங்கட்டும்;
கைகள் அவருடைய பாதங்களை மெதுவாய் பிடித்துவிடட்டும்;
கண்கள் அவருடைய முகத்தையே விழுங்கட்டும்;
மூக்கு அவருடைய பாதங்களை கழுவிய நீரின் நறுமணத்தை நுகரட்டும்;
காதுகள் ஸாயீயின் கீர்த்தியை கேட்கட்டும்;
சித்தம் மனக்கண்ணில் ஸாயீயின் உருவத்தைக் கொணர்ந்து நிறுத்தி
அகண்டமாக (இடைவிடாமல்) தியானம் செய்யட்டும்;
உடல், மனம், செல்வம் அனைத்தையும் ஸத்குருவின் பாதகமலங்களில் ஸமர்ப்பணம் செய்துவிட்டு வாழ்நாள் முழுவதும் குருசேவை செய்வோம்.

                                                                                               - ஸ்ரீமத்ஸாயிராமாயணம்http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, January 1, 2018

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Related image

                                   "நானிருக்க பயமேன்" 

                   சாய் பக்தர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

குரு தியானம்

குருவுக்கு புறம்பாக வேறெதுமின்றி, எல்லாமே குருவாகத் தெரியுமாறு குருவை மாத்திரம் தியானத்தின் இலக்காகக் கொண்டு செய்யப்படும் தியானம், ...