Monday, April 23, 2018

பாபா பட்டினி கிடக்க அனுமதித்ததில்லைImage may contain: 1 person, closeup

பாபா என்றும் பட்டினி கிடந்ததில்லை; மற்றவர்களையும் பட்டினி கிடக்க அனுமதித்ததில்லை.  பட்டினி கிடப்பவரின் மனம் சாந்தமாக இருக்காது; அவர் எப்படி ஆன்மீக சாதனைகளை ஏற்க முடியும்?
பசிக்கு உணவளித்து ஜீவனை சாந்தப்படுத்தாமல் கண்கள் எப்படி இறைவனைக் காணமுடியும்? வாய் எப்படி இறைவனின் புகழைப் பாடும்? காதுகள் எப்படி அதைக் கேட்கும்?
உடலின் சகல அங்கங்களும் சக்தி பெற்றிருந்தால்தான் பக்தி பண்ணமுடியும்.  அங்கங்கள் அன்னமின்றி சீர்குலைந்து போகும்போது ஆன்மீகப்பாதையில் நடைபோட முடியாது.
தேவைக்கு அதிகமாக உண்பதுவும் நன்றன்று.  மிதமான போஜனமே நன்மையை விளைவிக்கும்.
கடுமையான உபவாசம் எப்பொழுதும் பயங்கரமான சுகவீனத்தையே அளிக்கும்.
வெறும் வயிற்றுடன் தேவனை அடையமுடியாது. ஆகவே முதலில் ஆத்மாவைத் திருப்திசெய்யுங்கள்.
பாபாவின் விதிமுறைகளின்படி, ஆன்மீக சாதனைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் முதலில் தம்முடைய உணவுக்கு வழிசெய்துகொள்வது அவசியம்.
இந்த யுகத்தின் முடிவுவரை முயன்றாலும் வெறும் வயிற்றுடன் இறைவனை அடையமுடியாது.  ஸாயீயைப் பொறுத்தவரை உபவாசம் போன்ற உடலை வருத்தும் செயல்களை அவர் என்றுமே அனுமதித்ததில்லை.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 22, 2018

ஸாயீயைத் தவிர வேறு எவர் கைதூக்கிவிடுவார்?

No automatic alt text available.

ஜடம் போன்ற மக்களையும் மூடர்களையும் பலவீனர்களையும் ஏழையெளியவர்களையும் கள்ளங்கபடமற்ற ஏதுமறியா ஜனங்களையும் பிறப்பால் விரதம், தவம், வைதீகச் சடங்குகள் ஆகியவற்றால் பயனடைய முடியாதவர்களையும் இந்த ஸாயீயைத் தவிர வேறு எவர் கைதூக்கிவிடுவார்?


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 21, 2018

வழிபாட்டு ஒழுக்கம்

Image may contain: 1 person, smiling

எல்லா இந்திரியங்களிலும் ஸாயீபக்தி நிரம்பியிருப்பதைத் தவிர, வேறு எது வழிபாட்டு ஒழுக்கம்?
ஒருகணம் ஸாயீயிடமிருந்து பிரிந்திருப்பதை சகித்துக் கொள்ளக்கூடியவர் எப்படி ஸாயீ பக்தர் ஆகமுடியும்?
சிஷ்யன் குருவிடம் கொள்ளக்கூடிய பிரேமைக்கு எல்லையே இல்லை. அதன் மஹிமையை ஒழுக்கத்தில் சிறந்த சிஷ்யனே அறிவான்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 20, 2018

பாபா அருள் செய்யும் பாணி

Image may contain: 3 people

பாபா அருள் செய்யும் பாணியே அலாதியானது.
பலனடையும் பக்தருக்கு தான் தீட்சை (மந்திர உபதேசம்) பெறுகிறோம் என்று தெரியாமல்கூட போகலாம்.
சிலருக்குக் கேலிக்கும் சிரிப்பிற்கும் இடையே தீட்சை அளிக்கப்பட்டது.
அவருடைய தீட்சை அளிக்கும் முறையைக் குறிப்பிட்ட பக்தரின்
மனோதர்மம், பக்தி, சேவை, பிரேமை, விசேஷகுணம் இவற்றிற்கேற்றவாறு தேர்ந்தெடுத்தார்.
யாரிடமாவது பிரியமேற்பட்டால், அவருக்கு தீட்சை அளித்து அனுக்கிரகம் செய்வார்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 19, 2018

ஸத்குருவின் பாதகமலங்களுக்கு நாம் செய்யும் சேவை

Image may contain: 1 person

ஸத்குருவின் பாதகமலங்களுக்கு நாம் செய்யும் சேவையே வேதமும் சாஸ்திரமும் புராணமும்.  அவருடைய பாதங்களை நமஸ்கரிப்பதே யோகமும் யாகமும் தவமும் மற்றும் முக்திமார்க்க சாதனைகள் அனைத்துமாகும்.  ஸத்குருவின் பவித்ரமான நாமமே வேதசாஸ்திரம்; "ஸமர்த்த ஸாயீ" என்பதே நமது தாரக மந்திரம். அதுவே நமது யந்திரமும் தந்திரமும் ஆகும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 18, 2018

குருவைப்பற்றியே சிந்தியுங்கள்

                    Image may contain: 1 person, sitting

பிரம்மம் நித்தியம் ;
 உலகவாழ்வு அநித்தியம்.
குருவே ஸத்தியமான பிரம்மம். அநித்தியமான விஷயங்களைத் துறந்துவிடுங்கள் ; குருவைப்பற்றியே சிந்தியுங்கள். இந்த பா(BHA)வனையே ஆன்மீக சாதனை மார்க்கம்.
அநித்தியங்களை துறந்துவிடின் வைராக்கியம் பிறக்கிறது. ஸத்குரு பிரபஞ்சப் பேருணர்வால் நிரம்பியிருப்பது தெரிகிறது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 17, 2018

சரணாகதி

Image may contain: one or more peopleவிவேகத்துடனும் அறிவுக்கூர்மையுடனும் தேடப்படும் ஞானம், தனக்குள்ளேயே அமிழ்ந்துபோகும் மன ஒருமையே.    இது குருவின் பாதகமலங்களில் பணிவுடன் வீழ்ந்து கிடப்பதுதான்.  இதுவே குருவிடம் முழுமையான சரணாகதியாகும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 16, 2018

மங்களகரமான ஸாயீ

Image may contain: 1 person, standing


ஸாயீயின் கிருபைகூர்ந்த கண்வீச்சு கர்மபந்தங்களிலிருந்து உடனே விமோசனம் அளிக்கிறது. ஆத்மானந்த    புஷ்டியை பக்தர்கள் ஒருகணமும் தாமதமின்றி பெறுகின்றனர்.  எவருடைய கிருபைகூர்ந்த கண்பார்வைக்கு எதிரில் கர்மங்களும் அகர்மங்களும் முடிச்சு அவிழுமோ , எந்த முகத்தை ஒருகணம் பார்த்தாலே அனந்த ஜன்மங்களிலும் ஏற்பட்ட துன்பங்களும் துயரங்களும் அழியுமோ, எந்த வதனம் பரமானந்தத்தின் பிறப்பிடமோ, அந்த மங்களகரமான ஸாயீயின் முகம் புனிதமானது.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, April 14, 2018

துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள்

                      Image may contain: 1 person, hat and closeup

பூனாவில் வாழ்ந்த கோபால் ஆம்ப்டேகர் நாராயண் என்ற பக்தர், பிரிட்டிஷ் ராஜாங்கத்தில் கலால் வரி இலாக்காவில் 10 ஆண்டு வேலை பார்த்த பிறகு அந்த வேலையை விட்டு விட்டார். அதன் பிறகு கஷ்ட காலம் ஆரம்பித்தது. துன்பத்திற்கு மேல் துன்பம் நேரவே, எல்லா விதத்திலும் சோர்வடைந்து விட்டார். நிதி நிலைமை மோசமானது. ஆபத்துகள் வரிசையாக வந்தன. குடும்ப நிலைமை சகிக்க முடியாமல் ஏழு வருடம் திண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் ஷிர்டி சென்று பாபாவை இரவு, பகலாக வணங்கி ஓப்பாரி வைத்து அழுதார். (பாபா உடம்போடு இருந்த காலம் அது.)

1916-ஆம் ஆண்டு, 2 மாதம் ஷீரடியில் தங்கினார். துன்பத்தை தாங்க முடியாமல் ஒருநாள் ஷிர்டி கிராமத்திலுள்ள ஒரு கிணற்றில் விழுந்து இறந்து விட முடிவு செய்து கொண்டு ஒரு மாட்டு வண்டி மீது உட்கார்ந்திருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சகுண் மேரு நாயக் என்ற பாபாவின் பக்தர் ஒருவர், தன் வீட்டருகே கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கும் ஆம்ப்டேகரை கவனித்து, அவரிடம் வந்து அக்கல்கோட் மகாராஜ் பற்றிய புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்கச் சொன்னார். அதை வாங்கிய ஆம்ப்டேகர் அந்தப் புத்தகத்திலிருந்து சில பக்கங்களை புரட்டினார்.

அக்கல்கோட் மகராஜின் பக்தர் ஒருவர், வியாதியை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயச்சித்த சம்பவம் அந்த புத்தகத்தில் அவர் படித்த பக்கத்தில் இருந்தது. அந்த பக்தர் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற போது அக்கல்கோட் மஹராஜ் தோன்றி அவரை காப்பாற்றி, தற்கொலையின் தீங்கு பற்றி உபதேசம்செய்தார் .

"எதை அனுபவிக்கவேண்டும் என்று இருக்கிறதோ அதை அனுபவித்தே தீரவேண்டும். பூர்வ ஜென்மத்தின் வினைகளை ரோகங்களாகவும் (வியாதி), குஷ்டமாகவும், வலி, கவலையாகவும் முழுவதும் அனுபவித்து தீர்க்கும் வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்? துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்து தீர்க்காவிட்டால் அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்கவேண்டும். ஆகவே, இந்த துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் உயிரை நீயே அழித்துக் கொள்ளாதே!" என்று உபதேசித்தார்.

இந்த செய்தியை படித்த ஆம்ப்டேகர் மனம் மாறி, தன் செயலுக்கு வருந்தினார். சமயத்தில் தகவலை அனுப்பி காப்பாற்றிய பாபாவுக்கு நன்றி சொன்னார்.   
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 12, 2018

குருவின் கிருபை

Image may contain: 1 person, food

ஆன்மீக அப்பியாசங்கள் செய்து சாதனை பலம் பெற்றவர்கள் எப்பொழுதும் மனச்சஞ்சலம் அடையமாட்டார்கள்; அவர்களுடைய புத்தியும் ஆடாது அசையாது குருபாதங்களில் நிலைத்திருக்கும்.
எவர் தம்முடைய மனத்தையும் வாக்கையும் செயலையும் குருபாதங்களில் அர்ப்பணித்து, முடிவில் குருவின் கிருபையை சம்பாதிக்கிறாரோ, அவருக்கு உண்மையான சிரத்தை லாபமாகிறது.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, April 6, 2018

குருநாமத்தின் மஹிமை

No automatic alt text available.

உன்னுடைய குருவின் நாமத்தை இடைவிடாது ஜபித்துக்கொண்டே இரு.
அதிலிருந்து பரமானந்தம் பிறக்கும்.
உயிரினங்கள் அனைத்திலும் இறைவனை தரிசனம் செய்வாய்.
குருநாமத்தின் மஹிமை இதைவிட வேறென்னவாக இருக்கமுடியும்.?
எவருடைய நாமம் இந்த மஹிமை உடையதோ,
அவரை நாம் ஸத்பா(BHA)வத்துடன் வணங்குவோம்.
உடலாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றி, அனன்னியகதியாக (வேறெந்த வழியையும் நாடாது) அவரிடம் சரண் அடைவோம்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, April 5, 2018

எங்கும் வியாபித்திருக்கும் பாபா

No automatic alt text available.

"நான் இப்பொழுது எங்கிருக்கிறேன்?  
உம்மை எப்படி சந்திக்க வருவேன்?
என்றெல்லாம் நீர் கேட்கலாம்.
ஆனாலும்,
நான் உமது இதயத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். ஆகவே, பிரயாசை ஏதுமின்றியே உம்மைச் சந்திப்பேன்.

நீரும் நானும் ஒன்றே என்று பார்க்க ஆரம்பித்து, அப்பார்வையை விஸ்தாரப்படுத்தினால், உலகில் உள்ளதனைத்தும் உன் குருவாகத் தெரியும். நான் இல்லாத இடமாக எதுவும் தெரியாது.-

இவ்வாறான ஆன்மீகப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால் , நான் எங்கும் வியாபித்திருக்கும் அனுபவம் உமக்குக் கிட்டும். பின்னர் நீர் என்னில் கலந்துவிடுவீர். அன்னியம் என்று ஒன்று இல்லை என்ற உணர்வை அனுபவிப்பீர்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, April 4, 2018

ஸாயீயின் அற்புதமான கதைகள்ஸாயீயின் அற்புதமான கதைகள் பாக்கியமளிப்பவை ;
கேட்பதால் ஏற்படும் விளைவுகளும் பாக்கியமளிப்பவை ;
மனத்தில் சிந்திக்கச் சிந்திக்க நம்முடன் பிறந்த நற்குணங்கள் மேலோங்கும். ஸாயீ பாதங்களில் ஸத்பா(BHA)வம் வளரும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, April 3, 2018

எல்லா மங்களங்களும் விளையும்"விசுவாசம் நிறைந்த இதயத்துடன் என்னை நினைத்தால் போதும். சுயநலம் கருதாது என்னை வழிபடுங்கள்; எல்லா மங்களங்களும் விளையும்." - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, April 2, 2018

குரு நாமஸ்மரணம்

Image may contain: 1 person


குரு நாமஸ்மரணம் மஹத்தான முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில்,
குருவும் பக்தஸ்மரணம் செய்கிறார்!
தியானம் செய்பவர்,
தியானம் செய்யப்படுபவருடன் ஒன்றிவிடுகிறார்!
இருவரும் பூரணமாகத் தம்மை மறந்துவிடுகின்றனர்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, April 1, 2018

கர்மபந்தத்திலிருந்து விடுபடமுடியாது

Image may contain: food

மனித உடல் ஆரோக்கியமான நிலையில் இருந்தாலும், வேறுவிதமாக இருந்தாலும் கர்மபந்தத்திலிருந்து விடுபடமுடியாது. ஆகவே, குருபாதங்களில் பிரீதியுடன் மனத்தை உள்முகமாகச் செலுத்துங்கள்.
பின்னர், குருபாதங்களில் பிரேமையுடைய பக்தர்களின் யோகஷேமத்தை,
குரு சிரமமேதுமின்றி அளிக்கும் மிக உத்தமமான அனுபவத்தை அடையுங்கள்.
இது கேட்டாலும் கிடைக்காத நிலை; ஆயினும், குருவின் பெருமையைப் பாடுவதால் சுலபமாகக் கிடைக்கும். பெருமுயற்சிகள் செய்தும் அடையமுடியாத நிலை; குரு கிருபையின் பலத்தால் தானாகவே உங்களிடம் வந்து சேரும்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா பட்டினி கிடக்க அனுமதித்ததில்லை

பாபா என்றும் பட்டினி கிடந்ததில்லை; மற்றவர்களையும் பட்டினி கிடக்க அனுமதித்ததில்லை.  பட்டினி கிடப்பவரின் மனம் சாந்தமாக இருக்காது; அவர் எப...