Friday, May 11, 2018

குருவே கடவுள்


Image may contain: 1 person, closeup
குருவே பிரத்யக்ஷமான கடவுள் ;  குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவார்.  உண்மையில் குருராயரே முழுமுதற்கடவுளாவார்.
குருவே அன்னை; குருவே தந்தை. 
குரு,  தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார்.
 குருவினுடைய கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது என்பதை நன்கு அறிக.
உலக வாழ்க்கையின் வழிகாட்டி குரு.  புனிதப்பயணத்திற்கும் விரதங்களுக்கும் தர்மம் எது, அதர்மம் எது, என்று அறிந்துகொள்வதற்கும் பற்றறுப்பதற்கும் குருவே வழிகாட்டி.  வேதங்களையும் உபநிஷதங்களையும் நமக்குப் பிரவசனம் செய்பவரும் அவரே.
புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு, மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார்.  மஹா காருண்யமூர்த்தியான குரு, சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸாயீயின் கதைகளை மனத்தில் ஓடச்செய்வோம்

பாபா சொன்ன, ஞானத்தை அருளும் கதைகள் எத்தனையோ !   பக்தி மார்க்கத்தை வழியாகக் காட்டப்பட்ட பக்தர்கள் எத்தனையோ !  இக் கதைகளை பயபக்திய...