சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள்

நீங்கள் சாயி சாயி என்று நாமஜபம் செய்வதை பாபா  எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறார் மேலும் நீங்கள் வீட்டில்  பாபாவின் படத்திற்கு செய்யும்...

Wednesday, May 16, 2018

நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை.

Image may contain: Shirdi Saibaba

நடப்பது எல்லாம் மறைந்து வேலைசெய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டம்.  நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள்.  ஆனாலும்,  செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது !

விதியின் வலிமையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே.  செயல்புரிபவனும் செயல்புரியவைப்பவனும்  இறைவன் ஒருவனே;  அவனொருவனே கிருபை செய்யக்கூடியவன்.

நான் தேவனுமல்லேன்; ஈசுவரனுமல்லேன்.  நான் 'அனல் ஹக்'குமல்லேன் (கடவுளுமல்லேன்);  பரமேசுவரனுமல்லேன்.  நான் 'யாதே ஹக்' (இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்தியவன்).  நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை.

எவன் அஹங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் இறைவன்மீது தன் பாரத்தைப் போடுகிறானோ,  அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்.

- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil