Thursday, May 3, 2018

ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர்


Image may contain: one or more people

நீங்கள் அனைவரும் என் விருப்பப்படியே அந்த அந்த நிலையில் இருக்கிறீர்கள்.  நான் நினைத்தால் ஆண்டியை அரசனாக்குவேன்.  அரசனை ஆண்டியாக்குவேன். 
என்னை நம்பியுள்ள பக்தனுக்கு அவன் என்ன கேட்டாலும் தருவேன்.  அதற்கு முன்,  நான்,  அவன் அந்த அதீத சக்தியைத் தக்க வைத்துக்கொண்டு பத்திரமாக இவ்வுலகின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துவானா? மாட்டானா? என்பதையும் சோதிப்பேன்.
நான் தேவை என முடிவு செய்து விட்டால் மண்ணையும் விண்ணாக்குவேன்.  விண்ணையும் மண்ணாக்குவேன்.
பல்வேறு பிறவிகளில் செய்த புண்ணியத்தின் விளைவாகவே ஒருவன் பீடிகாபுர அக்ரஹாரத்தில் அடியெடுத்து வைக்கிறான்.
என்னுடையவன் என எனக்கு யாரைப் பிடிக்குமோ அவனை தலை முடியைப் பிடித்து பீடிகாபுரத்திற்கு இழுத்து வந்து விடுவேன்.  என்னுடைய விருப்பமின்றி எவரும் என் பீடிகாபுரம் சமஸ்தானத்திற்கு வர இயலாது.  அவர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் மிகப்பெரிய யோகியாக இருந்தாலும் சரி.  இது உறுதியான சத்தியம்.
என்னுடைய சக்தியைத் தெரிந்து கொள்ள நீங்கள் ஆன்மீகத் தேடுதலில்  தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.  அதன் பின்னரே என் சக்தி,  இரக்கம்,  கருணை,  அன்பு,  பாதுகாப்பு,  நான் பாவங்களிலிருந்து மீட்பதை நன்கு தெரிந்து கொள்ள முடியும்.  என் உண்மை ஸ்வரூபத்தை அறிந்து மகிழ்ச்சியடையுங்கள்.
இந்த நேரம் மீண்டும் வராது.  மனிதனுக்கு தெரிந்த அத்துனை தெய்வ சக்திகளும் என்னுள்ளேயே  உள்ளன.
எனக்கு யாராவது தக்ஷிணை கொடுத்தால் அதை நூறு மடங்காக நேரம் வரும்போது அளிப்பேன்.  பணம் தர்மத்தை மீறாமல் சம்பாதிக்கப்பட வேண்டும்.  ஆசைகள் தர்மத்தை மீறாமல் அனுபவிக்கப்பட வேண்டும்.   தர்மச் செயல்கள் செய்வதன் மூலம் மோகம் அழியும்.  மோகம் அழிந்தால் முக்தி அடைந்து விடலாம்.

- ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸத்குருவின் உதவி

               சாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு,  ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...