Monday, May 7, 2018

குருவின் திருவாய்மொழி

Image may contain: 1 person, smiling

ஆன்மீக அதிகாரத்திற்கேற்றவாறு, புத்தி பேதலிக்காத வகையில், பாபா ஒவ்வொரு பக்தருக்கும் அவருக்கேற்ற உபதேசத்தை அளித்து ஆன்மீகப் பாதையில் நடைபோட வைக்கிறார்.
குரு தங்களுக்கு என்ன திருவாய்மொழி அருளினார் என்பதை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்று பலர் நினைக்கின்றனர்.  அவ்வாறு செய்தால் குருவின் திருவாய்மொழி பயனற்றுப்போகும் என்றும் நம்புகின்றனர்.
இது வெறும் கற்பனனையே.  ஒன்றுமில்லாததைப் பெரிதுபடுத்தும் சமாசாரம். அர்த்தமற்றது.
உண்மையில், குருவினால் நேரடியாகச் செய்யப்பட்ட ஆன்மீக போதனைகளை மட்டுமல்லாமல் கனவில் தோன்றிய போதனைகளையும் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். அது பயன்தரக்கூடிய நல்ல ஞானம்.
குரு எல்லா ஜீவன்களின்மீதும் ஆனந்தமழை பொழியும் கனத்த மழைக்காலத்து மேகமாவார். அவருடைய பாதை மர்மமானதோ ரகஸியமானதோ அன்று.
விக்ஷேபமும் (பொய், மெய்போலத் தோன்றுவது)  ஆவரணமும் (மெய்யைத் திரைபோட்டு மறைத்தல்)  வாழ்க்கைப்பாதையை மங்கலாகவும் குழப்பமாகவும் ஆக்கிவிடுகின்றன.  குருவின் திருவாய்மொழியே வாழ்க்கைப்பாதையில் நடக்க உதவும் ஒளிவிளக்காகும்.




http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸத்குருவின் உதவி

               சாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு,  ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...