Saturday, June 23, 2018

பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும்

No automatic alt text available.

கடவுள் மனித உருவில் அவதரிப்பது மனிதன் எளிய முயற்சியாலேயே சிறந்த பலனை அடைய ஏதுவாகிறது. ஆகையால் மனிதர்கள் கலியுகத்தில் மிக மிக அதிர்ஷ்டம் செய்தவர்கள். நினைத்த மாத்திரத்திலேயே ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் அருளானது கிடைத்துவிடும். மனிதன் கலியுகத்தில் வழி தவறி தவறானப் பாதையில் செல்லப் பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அவற்றைப் போலவே இருமடங்கு வழிகள் ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையை அடையவும் உள்ளன. இதுதான் சத்தியமான  உண்மை. நாம ஸ்மரணம், சாய் சத்சரித்ர பாராயணம் போன்றவை ஸ்ரீ சாயியின் தொடர்பை ஏற்படுத்துகின்றன. இவ்விதமாக எல்லாவித பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும் ஸ்ரீ சாயியின் சைதன்யத்தை சென்றைடைகின்றன. ஸ்ரீ  சாயியிடமிருந்து  புண்ணியங்களும் நல்ல அதிர்வலைகளும் அவரைச் சார்ந்த பக்தர்களைச் வந்தடைகின்றது..     


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 22, 2018

என்னுடைய புகழைப் பாடு


No automatic alt text available.

"உன்னுடைய நல்வாழ்வு இதில்தான் இருக்கிறது; எனக்கும் அவதார நோக்கம் நிறைவேறுகிறது.
பார்! இதைத்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்; இதுவே, என்னுடைய இடைவிடாத மனக்கிலேசமாகவும் இருந்து வருகிறது.


"என்னுடைய புகழைப் பாடுபவனும், சரித்திரத்தைச் சுவையாக விவரித்துச் சொல்பவனும், அவர்களுக்கு முன்னும் பின்னும் மற்றும் அவர்களைச் சுற்றிய எல்லா இடங்களிலும் எப்பொழுதும் என்னையே காண்கின்றனர்."

"ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் இக் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்."

"என்னுடைய கீர்த்தனங்களைப் பாடுபவனுக்கு பூரணமான பரமானந்தத்தையும் சாந்தியையும் திருப்தியையும் நான் அருள் செய்வேன். இது ஸத்தியமான வார்த்தை."

 ''வேறெதிலும் பற்றில்லாமல் என்னையே சரணடைந்து, முழு விசுவாசத்துடன் என் புகழைப் பாடி, என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருப்பவனை நான் கடைத்தேற்றுகிறேன் என்பது என் ஸத்தியப் பிரமாணம்."

 ''எங்கு என் நாமமும் பக்தியும் லீலைகள்பற்றிய ஏடுகளும் புராணமும் இதயத்தில் குறையாத சிந்தனையும் இருக்கின்றனவோ, அங்கு எப்படிப் புலனின்ப நாட்டம் தலைகாட்ட முடியும்?"

"என்னுடைய கதைகளை மாத்திரம் கேட்டால்கூடப் போதும், வியாதிகள் நிவாரணம் செய்யப்படும்; என்னுடைய நிஜமான பக்தனை நான் மரணத்தின் பிடியி­ருந்தும் விடுவிப்பேன்."

 ''பக்தியுடன் இக் கதைகளைச் செவிமடுங்கள்; கேட்ட பிறகு அவற்றை ஆழமாக மனத்துள் பிரதிப­யுங்கள்; பிரதிப­த்தபின் தியானம் செய்யுங்கள்; உன்னதமான திருப்தியைப் பெறுவீர்கள்."

 ''நான்" எனும் பிரக்ஞை மறைந்து, "நானே அவன் (இறைவன்)"  என்னும் உணர்வு உதயமாகும். வேறெதிலும் பற்றில்லாத பரிபூரணமான சிரத்தையால், சித்தம் தெய்வீக சக்திகளால் நிறைந்து கனக்கும்.

- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 14, 2018

பாபாவிடம் பரிபூரணமாக சரணடைவோமாக

No automatic alt text available.


பாபாவுக்கு பக்தியுடன்  சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று
கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள். அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், பாபாவின் மீது உறுதியான விசுவாசமே.
மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்! சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. பாபா அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை!
மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக. - ஸ்ரீ சாயி இராமாயணம்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 13, 2018

ஜோதிடத்தை நம்பாதே, என்னை நம்பு

Image may contain: 1 person, closeup


ஹர்தாவைச்  சேர்ந்த சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள், ஒரு புத்திரன் கூட இல்லை.1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச்  சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம் பிரார்த்தனை செய்து கொண்டார். 12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால், குழந்தையுடன் தரிசனம் செய்ய கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்; ஆனால்  அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு கங்காபூருக்கு  செல்லவில்லை. 1911-ம்  ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஷிர்டிக்கு  பாபாவிடம் வந்தார்.
பாபா : என்ன! திமிறு  ஏறி விட்டதா உனக்கு? உன் பிராரப்தத்தின்  படி (விதிப்படி)உனக்கு ஏது ஆண் குழந்தை? நான் இந்த உடலை (தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு ஒரு ஆண் மகவு அளித்தேன்.

பாபாவின் மற்றொரு அடியவரான தாமோதர ராசனே சம்பந்தப்பட்டவரை கூட, பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி புத்திரப்பேறு அருளினார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 11, 2018

அனைத்துப் பிரச்சினைகளும் விலகும்

Image may contain: one or more people and closeup

தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும். 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸத்குரு

Image may contain: 1 person, closeup

"ஸத்குரு என்பவர் கனவிலும்கூடத் தமது அடியவர்களிடம் இருந்து எவ்விதச் சேவையையோ, லாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை.  மாறாக அவர்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறார்.  தாம் உயர்ந்தவர், தமதடியவர் தாழ்ந்தவர் என்றும் அவர் எண்ணுவதில்லை.  தனது அடியவரை(பக்தனை) தமது புதல்வன் என்று கருதுவதோடு மட்டுமல்லாது தமக்குச் சமமானவன் என்று கருதுகிறார்."

-ஸ்ரீஸாயிஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 9, 2018

ஸாயீயின் கதை

Image may contain: one or more people

ஸாயீயின் கதைகளைக் கேட்க உடம்பெல்லாம் காதுகளாக்குங்கள்.  அவருடைய அருளால்தான் கலியுகத்தின் மலங்களனைத்தும் நாசமாகி,  இவ்வுலக வாழ்வின் பயங்களை வெல்லமுடியும்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 8, 2018

பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலன்

No automatic alt text available.

பாபாவின் பாதகமலங்களைத் தொட்ட மாத்திரத்தில் என் வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயம் தொடங்கிவிட்டது.
என்னை பாபாவிடம் அழைத்து வந்தவர்களுக்கு நான் மிக்க கடமைப் பட்டவனாகிறேன். அவர்களுக்கு எப்படிக் கைமாறு செய்யப் போகிறேன். 
அவர்களுக்கு மானசீகமாக நமஸ்காரம் செய்கிறேன். 
பாபாவின் தரிசனத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால்,
தரிசனம் செய்த மாத்திரத்தில் நம் எண்ணங்கள் மாறிவிடுகின்றன.
 உலகப் பொருள்கள் மீது பற்றற்ற தன்மை வளர்கிறது. 
பூர்வ ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பலனாகவே இத்தகைய தரிசனம் கிட்டுகிறது.
பாபாவை தரிசித்தவுடன்,
உலகம் முழுவதும் பாபாவாக மாறிவிடுகிறது

- அன்னாஸாகேப் தபோல்கர் (ஹேமாட்பந்த்)
ஸ்ரீ ஸாயி ஸத்தசரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Thursday, June 7, 2018

எது நேர்கிறதோ, அது தைப் பொறுத்துக்கொள்ளவும்.

Image may contain: 1 person

ஊழ்வினையை அனுபவித்துத்தான் தீரவேண்டும். அதுவே வினையைத் தீர்க்கும் வழி. வேறு வழி ஏதும் இல்லை.

''வேண்டுவதோ வேண்டாததோ, சுகமோ துக்கமோ, அமிருதமோ விஷமோ -இந்த இரட்டைச் சுழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன. ஆகவே அவற்றைக் கண்டு சிரிக்கவும் வேண்டா, அழவும் வேண்டா.

''எது எது நேர்கிறதோ, அது அதைப் பொறுத்துக்கொள்ளவும். அல்லாமாலிக் நம் ரட்சகர்; எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக. பாரம் சுமப்பவர் அவரே!

மனம், செல்வம், உடல், பேச்சு ஆகியவற்றால் அவருடைய பாதங்களில் சரணடையுங்கள். நிரந்தரமாக அவருடைய நாமத்தை ஸ்மரணம் செய்தால் லீலைகள் அனுபவமாகும்.

- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Wednesday, June 6, 2018

ஞானிகளுடைய அவதாரம்

Image may contain: one or more people

ஸாதுக்களை ஸம்ரக்ஷணம் செய்வதற்கும் துஷ்டர்களை வேரோடு நாசம் செய்வதற்குமே இறைவன் பூமியில் அவதாரம் செய்கிறான்.

ஞானிகளுடைய அவதாரம் அதனினும் மேன்மையானது. ஞானிகளுக்கு ஸாதுக்களும் துஷ்டர்களும் சமானமே. ஒருவனை உயர்ந்தவனென்றும் மற்றொருவனை ஈனமானவன் என்றும் வித்தியாசப்படுத்த அவர்களுடைய இதயம் அறியாது. ஞானிகளுக்கு இருவரும் சரிசமானமே.

ஒரு நோக்கில் பார்க்கும்போது, இறைவனைவிட ஞானிகள் உயர்ந்தவர்கள். தீனர்களின் மேலுள்ள பிரேமையால், முத­ல் அவர்கள் தருமமார்க்கத்தி­ருந்து வழிதவறியவர்களை மீண்டும் தருமநெறிக்குக் கொண்டுவருகிறார்கள்.

 ஸம்ஸார ஸாகரத்திற்கு ஞானியர் ஓர் அகத்திய முனி;  அஞ்ஞான இருளுக்கு ஞாயிறு. பரமாத்மா இவர்களிடமிருந்து வேறுபட்ட வஸ்து இல்லை; இவர்களிடமே வசிக்கிறார்.

நம் ஸாயீ இவர்களில் ஒருவர். பக்தர்களின் க்ஷேமத்திற்காகவே இப்புவியில் அவதரித்திருக்கிறார். அவர் ஞானதேவரின் அவதாரம்; கைவல்­ய (இறைவனோடு ஒன்றுபட்ட நிலை) தேஜஸில் நிலைபெற்றவர்.

ஜீவராசிகள் அனைத்தையும் அவர் தம்முடன் ஒன்றியனவாக நினைத்தாலும், இதர விஷயங்களில் அவர் பற்றற்றே விளங்கினார். ஒன்றை விரும்பியும் மற்றவற்றின்மேல் பற்றற்று இருந்தாலும், எல்லாவற்றையும் விரோதபாவமின்றி சமமாகவே பார்த்தார்.

சத்ருபா(BHA)வமும் இல்லை; மித்திரபா(BHA)வமும் இல்லை; ஆண்டியையும் அரசனையும் ஸமமாகவே நடத்தினார். மஹானுபாவரான ஸாயீ இவ்விதமாகவே இருந்தார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Tuesday, June 5, 2018

சேவை

Image may contain: 1 person


பக்தர்கள் எவ்விதமாகச் சேவை செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்தாலும்,  வாஸ்தவத்தில் பாபாதாம் பக்தர்கள் மூலமாக சேவையைச் செய்துகொள்கிறார்.  இது விஷயத்தில் உணர்வூட்டுதலை பாபாவே செய்கின்றார்.  பக்தர்கள் வெறும் கருவி மாத்திரமே!

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Monday, June 4, 2018

சரணாகதி

Image may contain: 1 person, smiling


பிரம்மத்தின் அருள் குரு ரூபமாக மட்டுமே வருகிறது.  ஸத்குருவின் அனுக்ரஹமின்றி பிரம்மத்தை அறியமுடியாது.  குருவினுடைய பாதகமலங்களில் ஐந்து பிராணன்களையும் பரிபூரணமாக சரணாகதி செய்துவிட வேண்டும். 

"பிரம்மம் ஒன்றே சத்தியம்"  என்ற நிலையான நம்பிக்கையையும்,  "இந்த உலகம் ஒரு மாயை"  என்னும் இடையறா விழிப்புணர்வையும் தங்களுடைய சொந்த அனுபவத்திலேயே கண்டறியும் உயர்ந்த ஆன்மீக நிலைக்கு நிஜமான பக்தர்களை ஸாயீ உயர்த்துகிறார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Sunday, June 3, 2018

பாபாவுக்கு மிக நெருங்கிய பக்தர்.

Image may contain: one or more people

பாபா இல்லறத்தாரும் அல்லர்; வானப்பிரஸ்தரும் அல்லர்;  அவர் பால பருவத்திலேயே உலகத்தை துறந்த பிரம்மச்சாரி.

அகில உலகங்களையும் தம்முடைய வீடாகக் கருதிய பாபா, தாமே வாஸுதேவனும் ,   திகம்பரனும் (உலகத்தை ஆடையாக அணிந்தவன்) ,  தாமே அழிவில்லாத பிரம்மம் என்பதையும் உறுதியாக அறிந்திருந்தார்.

இளையோரும் முதியோரும் சிறியவரும் பெரியவரும் ஸமர்த்தஸாயீ எவ்வளவு பெரிய ஸித்தர் என்பதை நன்கு அறிந்திருந்தனர்.  உலகியல் எதிர்பார்ப்புகளிலும் ஆசைகளிலும் கட்டுண்டு கிடக்கும் நாம்தான்,  அவருடைய புனிதமான பாதங்களில்மேல் வைக்கும் பக்தியில் உறுதியில்லாமல் இருக்கிறோம்.

வேறெதிலும் ஈடுபடாத விசுவாசத்துடன்,  மனம், வாக்கு, உடல், செல்வம் அனைத்தையும் ஸாயீயின் பாதங்களில் ஸமர்ப்பணம் செய்துவிடுபவரே பாபாவுக்கு அத்தியந்த (மிக நெருங்கிய) பக்தராகிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Saturday, June 2, 2018

பாபாவினுடைய போதனைமுறை

Image may contain: 1 person

பாபாவுக்கு நீங்கள் எதை அனுப்பினாலும்,  யார் மூலம் அனுப்பினாலும்,  அது மனம் கனிந்த அன்போடு அனுப்பப்பட்டால், அச்சிறிய நைவேத்தியத்தைக் கொண்டுசென்றவர் மறந்துவிட்டாலும், பாபா தவறாது அதைக் கேட்டு வாங்கிக் கொள்வார்.

அது சோளரொட்டியோ, பாஜியோ, பால்கோவாவோ எவ்வளவு எளிய தின்பண்டமாக இருந்தாலும் சரி, பக்தி பா(BHA)வத்துடன் அளிக்கப்பட்டதைப் பார்த்தபோது, பாபாவின் இதயத்தில் அன்பு பொங்கி வழிந்தது.

எந்த பக்தராவது தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை மறந்துவிட்டால், ஸாயீயே அவரைக் கடமையின் பாதையில் வழிநடத்தினார்.

பாபாவினுடைய போதனைமுறை இனிமையானது; மென்மையானது.  அதைக் கேட்டு கடமையை மறந்துபோன பக்தர் தாமே விழிப்படைந்துவிடுவார்.  அதைத் தாங்களே அனுபவித்தவர்கள் மஹாபாக்கியசாலிகள்.  அவர்களுடைய ஆனந்தத்தை விவரிக்க இயலாது.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Friday, June 1, 2018

துவாரகாமாயி

Image may contain: one or more people and closeup


ஸ்ரீ சாய்பாபா ஷீரடிக்கு வந்த ஆரம்ப காலத்தில், அவருக்குப் பின்புறம் நீண்டு தொங்கும் முடி இருந்தது. பச்சை நிறத்தில் நீண்ட அங்கியும், தலையில் முதலில் ஒரு குல்லாயும், அதன்மேல் காவி நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்தார்.  அவர்தம் கையில் ஒரு தண்டத்தையும் புகைக்குழாய், தீப்பெட்டி ஆகியவற்றையும் வைத்திருப்பார். அவர் பிச்சையெடுத்து உண்டு வந்தார்.
ஷீரடிக்கு வந்த நாலைந்து மாதங்களுக்குப்பின், பாபா வெள்ளை அங்கியும், வெண்மையான தலை உடைகளையும் அணியத்தொடங்கினார். இரண்டாவதுமுறை ஷீரடிக்கு வந்த பிறகும் கூட, பாபா சிறிதுகாலம் வேப்பமரத்தடியிலேயே வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் காரணமாகத்தான், அவர் தமது வாசத்தைக் கிராமத்திலுள்ள ஒரு பழைய பாழடைந்த மசூதிக்கு மாற்றிக் கொண்டார்.

மசூதிக்கு ( துவாரகாமாயி ) மாறியது.

ஒருமுறை ஷீரடியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அடைமழை பெய்தது. அதன் பெரும்பகுதி வெள்ளக் காடாகிவிட்டது. நீண்ட நேரத்துக்குப்பின் பாபாவின் ஆரம்பகால பக்தர்கள் சிலர், வீடற்ற பக்கீரின் ஞாபகம் வந்தவர்களாய், அவர் இந்த மலையிலிருந்து எங்கு ஒதிங்கியுள்ளார் என்று காண விரும்பினார்கள். மஹல்சபதியும் மற்றும் சிலரும் வேப்ப மரத்துக்கு விரைந்தனர். அங்கே சாயிபாபா அதே மரத்தடியில் பாதி சாய்ந்தவராகக் சமாதி நிலையில் இருப்பதைக் கண்டு செயலற்றுப் போயினர். அவர் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. எல்லாவிதமான குப்பைகூளங்களும் அவர் உடல்மேல் சேர்ந்திருந்தன. அவரை அந்த நிலையிலிருந்து எழுப்ப அவர்களுக்குத் துணிவிருக்கவில்லை. அவர்கள் காத்துக் காத்துப் பார்த்துப் பின் சற்று நேரத்துக்குப்பின் வரலாமென்றெண்ணித் திரும்பச் சென்றனர். சில மணி நேரத்துக்குப் பின், தண்ணீர் முழுதும் வடிந்தபின் அவர்கள் வந்து பார்த்தபோது, அவர் இன்னும் ஈரத் தரையிலேயே கிடப்பதைக் கண்டனர். அவரது உடலும் முகமும் முற்றிலும் மண்ணால் மூடப்பட்டிருந்தன. தமக்குத் துன்பங்கள் வந்துற்றபோது தமது ஒரே பாதுகாப்பாளராகவும், வழிகாட்டியாகவும் இருந்த அவரை ஒரேயடியாகக் கவனிக்காமல் இருந்துவிட்டதைக் குறித்து, அவர்கள் குற்ற உணர்வு அடைந்தனர். பின்னர் அவர் சாதாரண உணர்வு நிலைக்குத் திரும்பியவுடன் அந்த பக்தர்கள், அவரைக் கிராமத்திலுள்ள ஒரு சிறிய பழுதடைந்த மன்கட்டிடமான மசூதியில் தங்குமாறு செய்தனர். சாயிபாபா ஒரு முஸ்லீம் ஆகையால், அவர் ஜானகிதாஸ், தேவிதாஸ் போன்ற மற்ற மகான்களைப் போல் இந்துக்களின் கோவில்களில் தங்குவது சரியல்ல என்று கிராமத்தின் இந்துக்கள் கருதியே இவ்வாறு செய்திருப்பார் போலும். அப்போதிலிருந்து அவர் மசூதியில் சிறிது நேரமும், வெப்ப மரத்தடியில் சிறிது நேரமும் இருப்பார். பின் சிறிது காலத்தில் அவர் மசூதியையே தமது முக்கிய, முழுநேர இருப்பிடமாக்கிக் கொண்டார்.


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும்

கடவுள் மனித உருவில் அவதரிப்பது மனிதன் எளிய முயற்சியாலேயே சிறந்த பலனை அடைய ஏதுவாகிறது. ஆகையால் மனிதர்கள் கலியுகத்தில் மிக மிக அதிர்ஷ்டம...