Friday, June 29, 2018

ஸமர்த்த ஸாயீ ஸத்குருவே !

Image may contain: 1 person

ஓ ஸாயீ !  என்னுடைய மனத்தைக் கண்ணாடியைப்போல் தெளிவானதாகவும் தூய்மையானதாகவும் ஆக்கிவிடுங்கள். குருவின் வசனத்திலும் வேதாந்தக் கருத்துகளிலும் அசையாத நம்பிக்கையை என் மனம் பெறட்டும். ஆத்மபோதனையை என் மனத்துள் முத்திரையிடுங்கள்.

ஸமர்த்த ஸாயீ ஸத்குருவே ! இவையனைத்திற்கும் மேலாக, ஞானத்தின் சூக்குமங்கள் எனக்குப் புரியும்படி செய்யுங்கள். அனுபவஞானம் இல்லாத சொற்சிலம்பம் எத்தகைய ஆன்மீக முன்னேற்றத்தை சாதிக்க முடியும்?

ஆகவே, பாபா !   எனக்கு அருள் புரியுங்கள். உம்முடைய சக்தியினால் என்னை ஆத்மஞான அனுபவத்தில் மூழ்கும்படி செய்யுங்கள். சகஜமாகவே யான் இறையுடன் இரண்டறக் கலக்க உமது கிருபையாகிய தானத்தைச் செய்தருளுமாறு வேண்டுகின்றேன்.

ஓ என் இறைவனே ! ஸத்குரு ஸாயீ ! என்னுடைய அஹங்காரத்தை உம்முடைய பாதங்களில் சரணடையச் செய்கிறேன். என்னுடைய சுமைகளும் பொறுப்புகளும் உம்முடையனவே. ஏனெனில், எனக்கென்று தனிப்பட்ட இருப்பு ஏதும் இனியில்லை.

என்னுடைய தேஹாபிமானத்தை நீக்கிவிடுங்கள். எனக்கு சுகமும் வேண்டா; துக்கமும் வேண்டா. என் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க தேவரீர் விரும்பியவாறு பொம்மலாட்ட நூல்களை இழுக்கலாம்.  அல்லது, நீங்களே நானாகிவிடுங்கள். சுகதுக்கங்களின் அனுபவங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு அவைபற்றிய தொல்லை எதுவுமே வேண்டா. 

உம்மிடத்தில் என் அன்பு நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக வளரட்டும். மங்களங்களுக்கெல்லாம் அடித்தளமானவரே ! அலைபாயும் என் மனம் தேவரீர் பாதங்களில் ஓய்வு பெறட்டும்.

நீங்களல்லாது வேறு யார் எங்களிடம் இதமான வார்த்தைகளைப் பேசப்போகிறார்? வேறு எவர் எங்களுடைய துன்பங்களுக்கும் துக்கங்களுக்கும் முடிவு கண்டு மனத்திற்கு சாந்தியளிக்க முடியும்?

 - ஹேமாட்பந்த்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

கர்மத்தை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும்.

மனிதன் வாஸ்தவமாகவே சுதந்திரமுள்ளவனாக இருந்தால், இரவு பகலாக சுகத்திற்காக உழைப்பவன் ஏன் கஷ்டத்தை மட்டுமே அடைகிறான்? அவனுடைய விதி அவ்வளவு வ...