
1908க்குப் பின்னர் ஒரு தினம், "சில நாட்களில் துன்பங்கள் ஏற்படலாம். ஆனால் நீ ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம். நான் கவனித்துக் கொள்கிறேன் என்றார் பாபா மகல்சபதியிடம் . சில தினங்கள் கழித்து மகல்சபதியின் வீட்டில் முதலில் அவருடைய மனைவியும் பின்னர் ஒவ்வொருவராக மற்றவர்களும் நோய்வாய்ப்பட்டனர் .சீரடிக்கு பாபாவை தரிசனம் செய்ய வந்தவர்களில் சிலர் வைத்தியர்கள். அவர் நோய் தவிர்க்க அளித்த மருந்துகளை கொடுக்க வேண்டாம் என்றும் நோயாளிகள் படுக்கையில் படுத்து இருந்தால் போதும் என்றும் கூறிவிட்டார் பாபா. பின்னர் பாபா தாம் எப்போதும் கையில் வைத்திருந்த குறுந்தடியை எடுத்துக்கொண்டு மசூதியை சுற்றிவந்து "வா! பார்க்கலாம் உன் முழு சக்தியையும் காட்டு. என் குறுந்தடியின் முன் உன்னால் என்ன செய்துவிட முடியும் என்று பார்த்துவிடுகிறேன்!" என்று கர்ஜித்துக் கொண்டு தம் தடியைச் சுழற்றலானார் . விரைவிலேயே ஒருவித மருந்துமே இல்லாமல் நோயாளிகள் குணமடைந்தனர்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil